முத்தம்
the kiss
Winslow (1862)
முத்தம் (muttam) — noun
- [improp. for முற்றம்.] Front yard.
முத்தம் (muttam) — noun
- Agreeableness, endearment, பிரியம்
- Lip, உதடு
- A kiss, வாயாற்றரு முத்தம்; [from Sa. Mugdha.] (c.)
- Freedom, விடுகை
- A pearl, முத்து. W. p. 663. MUKTA
- A posture of the yogi, as முத்தாதனம். (p.)
- Cultivated ground, மருதநிலம்
- முத்தங்கொஞ்ச–முத்தமிட–முத்தியிட — To kiss. முத்தமிட்டுக்கொண்டார்கள். They kissed one another.
- முத்தமாடல்–முத்தாடல் — Kissing, caressing. (p.)
- முத்தர் — Those who have obtained liberation from the evils of sin, பக்குவர். (சது.)
- முத்தன் — One liberated or emancipated from evil, an epithet of Vishnu, Siva, and Argha.
- முத்தாகலாபம் — A garland of pearls, as முத்தாரம். (Sa. Muktakalapa.)
- முத்தாகாரம் — Mother of pearl, முத்துச்சிப்பி. (Sa. Muktagara.)
Fabricius (1972)
முத்தம் — s. improp.
- improp. for முற்றம்.
முத்தம் — noun
- agreeableness, பிரியம்
- a kiss, முத்தி
- a pearl, முத்து
- freedom, விடுக்கை
- lip, உதடு
- a posture of a yogi, முத்தாதனம்
- cultivated ground
- முத்தமிட–கொஞ்ச–முத்தியிட — to kiss.
- முத்தன் — one liberated from evil; 2. Siva; 3. Vishnu; 4. Argha.
- முத்தாட — to be continually kissing.
- முத்தாதனம் — a posture of a yogi, pressing the anus with the ankle of the left foot, under which is placed the ankle of the right.
- முத்தாரம் — a string of pearls.
- முத்தாவலி–முத்தாவளி — a garland of pearls; 2. a book of Sanskrit logic; 3. a musical mode.
Tamil Moli Akarathi (1928)
முத்தம் (muttam)
- இட்டம், உதடு, கொஞ்சுதல், மணிக்குற்றத்தொன்று, அது குல்லை நிறம், பிரியம், மருதநிலம், முத்து முத்துக்கொட்டை, விடப்படுவது, விடுதல், விடுகை
முத்தம் (muttam)
- உதடு, பிரியம், மருதநிலம், முத்து
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
முத்தம்
- உதடு
- அன்பிற்கறிகுறியாக ஒருவகை ஒலி உண்டாக உதடுகளால் தொடுகை: பிள்ளைத்தமிழ்ப் பருவங்களுள் குழந்தையை முத்தந் தரும்படியாகப் பாடும் பகுதி
- மருத நிலம்
- முத்து
- முத்துக்கொட்டை
- செடிவகை
- மரகதக் குணங்களுள் ஒன்று
- ஆண்குறி
- அன்பு
- மகிழ்ச்சி
- யோகாசனவகை
- முற்றம்
- கோரைக்கிழங்கு
- விடுதலை
- கோரை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முத்தம்¹ (muttam) — noun
- perh. முத்து-
- Lip; உதடு. (பிங்.)
- Kiss; அன்பிற்கறிகுறியாக ஒருவகை யொலி யுண்டாக உதடுகளாற் பரிசிக்கை (சூடா.) மணிவாயிடை முத்தம் தருதலும் (திவ். பெருமாள். 7, 5)
- See முத்தப்பருவம். (இலக். வி. 806.)
- Agricultural tract; மருதநிலம். (சூடா.)
முத்தம்² (muttam) — noun
- < muktā
- Pearl; முத்து. சீர்மிகு முத்தந் தைஇய (பதிற்றுப். 39)
- Castor bean; முத்துக்கொட்டை . (தைலவ. தைல.)
- A superior quality of emerald; மரகத குணங்களுளொன்று. (திருவிளை. மாணிக். 67.)
- See முத்தாபலம், 2
முத்தம்³ (muttam) — noun
- prob. Pāli muttam < mūtra. Penis; ஆண்குறி. அச்சுதன் முத்த மிருந் தவா காணீரே (திவ். பெரியாழ். 1, 2, 6).