பணி

பாம்பு தொழில் தொண்டு

work, service, trade, art, pursuit act, action, performance Services to a deity, as by a devotee; services to a temple, as construction of buildings

Winslow (1862)

பணி (paṇi) — noun
  1. Act, action, performance, செய்கை
  2. Work, service, art, pursuit, தொழில். [Tel. ஈஆ?.]
  3. Jewel, jewelry, trinkets, ஆபரணம்
  4. Services to a deity, carpentry, architecture, &c., about a temple, திருப்பணி
  5. Office, trade, craft, வேலை
  6. Duties of a slave, slavery, ஊழியம்
  7. Servitude, attention to a superior–as a religious mendicant, தொண்டு
  8. Command, order, direction, கட்டளை
  9. Word, saying, சொல்
  10. Woven silk, பட்டுச்சேலை. பருத்திக்கடையில்நாய்க்குப்பணியென்ன. What business has a dog in a cotton shop? [prov.]
  • பணிசெய்மகன்–பணிசெய்பவன் — A servant to a superior. 2. One who blows the long trumpet at funerals, &c.
  • பணித்தட்டார் — Goldsmiths.
  • பணிப்படுத்த — To manufacture, to make an article.
  • பணிப்பெண் — A chamber-maid, a lady's maid, ஏவல்செய்பவன்.
  • பணிமுட்டு — Goldsmith's tools; utensils, implements–especially in temples. See தட்டுமுட்டு, திருப்பணிமுட்டு.
பணி (paṇi) — noun
  1. A snake, பாம்பு. W. p. 594. P'HAN'IN.
  • பணிச்சக்கரம் — A diagram in the form of a snake, for determining the day for sowing a field, ஓர்ஏந்திரம்.
பணி (paṇi) — verbal noun
  1. , கிறேன், ந்தேன், வேன், பணிய, v. n. To become, or be, low in rank, or office; to be low, as a house or branch; to be short, as a person, a post, or a tree, தாழ
  2. To bow, to bend, to stoop; to make obeisance or a courtesy, to prostrate one's self in reverence, or worship; to be humble, submissive, வணங்க
  3. To decline, as a bird, &c., இறங்க. (c.)
  4. [prov.] To become inferior, to fall in price, or as wages, குறைய
  5. To be reduced in circumstances, ஏளிமையாக
  6. [prov.] To eat, to feed, from the posture in eating. See பூதகலம்பணிதல். ஏல்லார்க்கும்நன்றாம்பணிதல்......A humble walk is good for all. பூதம்பணிகிறதுபோலப்பணிகிறான். He gobbles up his food like an elf
  • தலைபணிதல் — Bowing, hanging the head. See தலைவணங்க, தலைமடங்க. நாலுபெயருக்குந்தலைபணியநடத்தல். Behaving so as to command reverence.
  • பணித்திறக்க — To take down, as a load, கீழேயிறக்கிவைக்க.
  • பணித்துக்கட்ட — To build low–as a wall, or a house; to tie or fasten low. 2. To put on a dress so as to have it hang low.
  • பணிந்தகூரை — A low-eaved roof.
  • பணிந்தவன் — A shortish person.
  • பணிந்தவார்த்தை — Submissive words; modest or reverential language.

Fabricius (1972)

பணி — noun
  1. work, office, தொழில்
  2. service, ஊழியம்
  3. jewel, jewllery, trinkets
  4. command, order, direction, கட்டளை
  5. woven silk, பட்டுச்சேலை
  6. word, saying, சொல்
  • பணிசெய் மகன்–பணிசெய்பவன் — a servant to a superior; 2. one who blows the long trumpet at funerals etc; a grave-digger.
  • பணிப்படுத்த — to manufacture.
  • பணிப்பெண் — a chamber-maid; a lady's maid.
  • பணிமுட்டு — utensils, workman's tools.
  • முகப்பணிசெய்ய — to shave one.
பணி — noun
  1. a snake, பாம்பு.
பணி — v. i.
  1. v. i. be humble, submissive
  2. be low, short, inferior (persons and things) தாழு; v. t. worship, revere, வணங்கு
  • கர்த்தரைப் பணிந்துகொள்ள — to worship the Lord.
  • பணிந்தவன் — one that is humble; 2. a shortish person.
  • பணிந்தவார்த்தை — submissive word.
  • பணிய — low down, below, less.
  • பணியல் — worship, worshipping.
  • பணியவைக்க — to put down, to place lower.

Tamil Moli Akarathi (1928)

பணி (paṇi)
  1. ஆபரணம், ஈகை, ஏருமை, ஏவல், கட்டளை, செய்கை, சொல், தொண்டு, தொழில்தோற்கருவி, பட்டாடை, பணியென்னேவல், பாம்பு, வார்த்தை, வேலை
பணி (paṇi)
  1. ஆபரணம், ஏவல், சொல், தொ ழில், தோற்கருவி, பட்டுச்சீலை, பணி யென்னேவல், பாம்பு

IndoWordNet

பணி — noun
  1. செயல் அல்லது செய்ய வேண்டியதாக அமையும் காரியம்.
பணி — noun
  1. செய்ய வேண்டியதாக அமையும் காரியம்.

வேலை செயல் தொடக்கம் துவக்கம் ஆரம்பம் முதல்நிலை சடங்கு விசேஷம் விசேடம் வைபவம் வைபோகம் சுபகாரியம் உற்சவம் ஆராய்ச்சி சோதனை ஆய்வு யோசனை ஜோலி விவசாயம் பயிரிடுதல் வேளாண்மை பயிர்செய்தல் மகசூல் சாகுபடி வெள்ளாமை

Tamil Wiktionary

பணி
  1. பாம்பு
  2. வேலை
  3. சேவை
  4. செயல்
  5. தொழில்
  6. தொண்டு
  7. பணிகை
  8. பரக்கை
  9. நுகர்பொருள்
  10. அணிகலன்
  11. மலர்களால் அலங்கரிக்கை
  12. பட்டாடை
  13. தோற்கருவி
  14. வேலைப்பாடு
  15. வகுப்பு
  16. சொல்
  17. கட்டளை
  18. விதி
  19. எதிர்ப்புத் தெரிவிக்காமல் சொன்னவாறு நட.

[object Object]

பணிவு அடிபணி பணியாள் பணிப்பெண் பணிமனை பணிவிடை பணியிடம் பணியாணை பணி மூப்பு பணியகம் களப்பணி திருப்பணி கண்காணிப்புப் பணி உழவாரப்பணி அரசுப் பணி வேளாண் பணி குடிமைப்பணி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பணி³ (paṇi) — noun
  1. Act, action, performance; செயல்
  2. Work, service, trade, art, pursuit; தொழில். உன்பணி நீ பணித்திலை (அஷ்டப். திருவேங்கடத்தந். 52)
  3. Services to a deity, as by a devotee; services to a temple, as construction of buildings, etc.; தொண்டு. திருப்பணிகள் செய்வேனுக்கு (திருவாச. 40, 10)
  4. Bowing, reverencing; பணிகை. (பிங்.) என்கடன் பணிசெய்து கடப்பதே (தேவா. 221, 9)
  5. Expanding, spreading; பரக்கை. (சீவக. 2531, உரை.)
  6. Difficult task; பிரயாசமான வேலை. போய்ப்புகுருகை சாலப்பணியாயிருக்கும் (ஈடு, 6, 1, 7)
  7. Object of enjoyment; போக்கியப்பொருள். கலம்ப மாலையைப் பணியாக (ஈடு)
  8. Jewel; ornament; ஆபரணம். (பிங்.) பணியெலாம் பணியதாகி (கந்தபு. ததீசியுந். 106)
  9. Decoration with flowers; மலர்களால் அலங்கரிக்கை. Loc
  10. Silk cloth; பட்டாடை. (W.)
  11. Drum; தோற்கருவி. (பிங்.)
  12. Workmanship; வேலைப்பாடு. பணி பழுத்தமைந்த பூண் (கம்பரா. இலங்கைகே. 12)
  13. Row, class, order; வகுப்பு. (ஈடு.)
பணி⁵ (paṇi) — noun
  1. < பணி⁴-
  2. Saying, word; சொல். (பிங்.) பல்லிருங் கூந்தல் பணிநோனாள் (கார்நாற். 24)
  3. Command, order, direction; கட் டளை. வேற்றரசு பணிதொடங்குநின் னாற்றலொடு புகழேந்தி (புறநா. 17)
  4. Rule; விதி. குஞ்சி பணியொடு பரிந்து நின்றார் (மேருமந். 123)
  5. Profession of teaching archery and other allied arts; வில்வித்தை முதலியவற்றைக் கற்பிக்குந் தொழில். நன்றிகூர் பணிக்கு மீந்து (திருவாலவா. 35, 6)
  6. Gift; ஈகை. (யாழ். அக.)
பணி⁶ (paṇi) — noun
  1. Cobra; நாகம். (பிங்.)