வஞ்சம்

Fabricius (1972)

வஞ்சம் — noun
  1. cruelty, violence, கொடுமை
  2. a lie, பொய்
  3. fraud, வஞ்சனை
  4. a sword, வாள்
  5. smallness, சிறுமை
  • வஞ்சம்வைக்க — to foster malicious thought and watch for revenge.
  • வஞ்சன் — ( வஞ்சர்) a deceitful person.

Winslow (1862)

வஞ்சம் (vañcam) — noun
  1. Cruelty, vehemency, violence, கொடுமை
  2. Smallness. சிறுமை
  3. A lie, பொய்
  4. A sword, வாள்
  5. Fraud, as வஞ்சகம்; [from Sa. Vanjcha.] (p.)
  • வஞ்சப்பெண் — A female servant of kali, காளியேவல்செய்பவள்.
  • வஞ்சம்வைக்க — To foster malicious thoughts, and watch for revenge.
  • வஞ்சர் — Deceitful persons. (p.)

Tamil Moli Akarathi (1928)

வஞ்சம் (vañcam)
  1. கொடுமை, சிறுமை, பொய், வாள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வஞ்சம்¹ (vañcam) — noun
  1. < vañcana
  2. Fraud, deceit; கபடம். போற்றுமின் வஞ்சம் (நாலடி, 172)
  3. Lie; பொய். வருந்தனின் வஞ்ச முரைத்து (கலித். 89)
  4. Cruelty, violence; கொடுமை. வஞ்சக் கருங்கடனஞ் சுண்டார்போலும் (தேவா. 519, 4.) (பிங்.)
  5. Sword; வாள். (பிங்.)
  6. See வஞ்சினம். (அரு. நி.)
  7. Revenge; பழிக்குப்பழி
  8. Illusion; மாயம். (யாழ். அக.)
  9. cf. aṃša. Smallness, littleness; சிறுமை. (திவா.)
  10. Destruction, ruin; அழிவு. நஞ்சினி தருத்தினு நல்வினை மாட்சி வஞ்ச மில்லோர்க் கமிழ்தா கற்றே (ஞானா. 32, 2)
வஞ்சம்² (vañcam) — noun
  1. See வமிசம். (இலக். அக.)
வஞ்சம்³ (vañcam) — noun
  1. cf. pra-pañca. Universe; பிரபஞ்சம். மாயையினுள்ள வஞ்சம் (சி. சி. 1, 15)
  2. Sal. See ஆச்சா. (இலக். அக.)

IndoWordNet

வஞ்சம் — noun
  1. துவேசம் அல்லது விரோதம் இல்லாத நிலை

துரோகமின்மை இரண்டகம் நம்பிக்கைமோசம் நம்பிக்கை மோசடி வஞ்சகம் நட்பு தோழமை சிநேகம் நேசம்.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வஞ்சம்
  1. கபடம்
  2. பொய்
  3. கொடுமை
  4. வாள்/ வஞ்சினம்
  5. பழிக்குப்பழி
  6. மாயம்
  7. சிறுமை
  8. அழிவு
  9. மரபு
  10. பிரபஞ்சம்

Tamil Wiktionary

வஞ்சம் — பெயர்ச்சொல் (Noun)
  1. வஞ்சனை
  2. கொடுமை
  3. வஞ்சம் வைக்க ஆழ்ந்த வெறுப்பைக் கொள்ள
  4. வஞ்சம் தீர்க்க பழி வாங்க

[object Object]