நட்பு

தோழமை - இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஓர் உறவு. வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. சினேகம், கேண்மை friendship, amity, reconciliation

friendship, amity allies friend

Tamil Wiktionary

நட்பு
  1. தோழமை - இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஓர் உறவு. வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது.
  2. சினேகம், கேண்மை

Winslow (1862)

நட்பு (naṭpu) — noun
  1. Friendship, amity, sociality, affection, சிநேகம்
  2. Relationship, con- sanguinity, உறவு
  3. A bribe, பரிதானம். (p.)
  • நட்பாடல் — Being affectionate, keeping friendship.
  • நட்பாராய்தல் — Discerning friendship. (p.)
  • நட்பாளன் — Trusty friend, நெருங்கியசினேகன். 2. Confidant of a prince, See ஏண்வகைத்துணைவர்.
  • நட்புகாட்ட — To show kindness or friendship. 2. To present sweet- meats to children. 3. To bribe a person or make presents to gain his favor. (c.)
  • நட்புத்தானம் — One of the five situations of a planet, viz.: in a sign agreeable to itself, thus exerting a begin influence, also called நட்புக்கிரகம்.
  • நட்புவைத்தல் — Showing kindness, cultivating friendship.

Fabricius (1972)

நட்பு — noun
  1. (நள்) friendship, affection, சிநேகம்
  2. present, gift, bribe பரி தானம்
  • நட்புத்தின்னாமல் நாவெழாது — he will not open his mouth to do justice unless one greases his palm.
  • நட்பாட — to keep friendship, to be affectionate.
  • நட்பாளன் — a trusty friend.
  • நட்புக்காட்ட — to show kindness, to make presents, to get one's favour.
  • நட்புவைக்க — to show kindness, to cultivate friendship.

Tamil Moli Akarathi (1928)

நட்பு (naṭpu)
  1. உறவு, சிநேகம், சுற்றம்
நட்பு (naṭpu)
  1. கேண்மை, கேள், தொடர்பு
நட்பு (naṭpu)
  1. உறவு, சினேகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நட்பு (naṭpu) — noun
  1. Friendship, amity; சினேகம். நட்பிடைக் குய்யம் வைத்தான் (சீவக. 253)
  2. Allies, one of six irācāṇkam, q. v.; இராசாங்க மாறனுள் ஒன்றாகிய நட்பரசர். படைகுடிகூழமைச்சு நட்பரணாறும் (குறள், 381)
  3. Friend; நண்பன். எனக்கவன் நட்பு
  4. (Astrol.) Friendly aspect of a planet, one of five kiraka-nilai, q. v.; கிரகநிலையைந்தனுள் சினே கத்தைக் குறிக்கும் நிலை
  5. Relationship, kinship; உறவு. (பிங்.)
  6. Relation, kindred; சுற்றம். (சூடா.)
  7. The 4th string of a lute; யாழின் நான்காம் நரம்பு. இணைகிளைபகைநட்பென்றிந் நான் கின் (சிலப். 8, 33)
  8. Bribe; பரிதானம். (W.)
  9. Reconciliation with enemy kings; மற்றரச ரோடு நட்புச்செய்கை. (பு. வெ. 9, 37, உரை.)
  10. Love; காதல். நின்னொடு மேய மடந்தை நட்பே (ஐங்குறு. 297)
நட்பு (naṭpu) — noun
  1. Sexual union; புணர்ச்சி. நாமமருடலு நட்புந் தணப்பும் (பரிபா. 20, 108).

IndoWordNet

நட்பு — noun
  1. ஒத்தகருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் உறவினர் அல்லதவருடன் கொள்ளும் உறவு.
நட்பு — noun
  1. ஒத்த கருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் பொதுவாக உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு.
நட்பு — noun
  1. அன்பு, ஒத்த கருத்து, நலன் அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் பொதுவாக உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு.
நட்பு — noun
  1. ஏதாவது ஒரு காரணத்தினால் மனதில் ஏற்படும் ஒரு கெட்ட நிலை

தோழமை சிநேகம் நேசம். துரோகமின்மை இரண்டகம் நம்பிக்கைமோசம் நம்பிக்கை மோசடி வஞ்சகம் வஞ்சம் சிநேகிதம் சினேகிதம் கூட்டாளி தன்மை வேலை பணி தீயபொருள் தொற்று சமநிலைத்தன்மை நடுநிலைத்தன்மை இணைப்பு கெட்ட எண்ணம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நட்பு
  1. சிநேகம்
  2. உறவு
  3. சுற்றம்
  4. நண்பன்
  5. யாழின் நாலாம் நரம்பு
  6. காதல்
  7. அரசாங்கம் ஆறனுள் ஒன்றாகிய நட்பரசர்
  8. கையூட்டு
  9. மாற்றரசரோடு நட்புச்செய்கை