வட்டம்

File:Cercle noir 100%.svg ring வலயம் File:Disc Plain black.svg round வட்டம் 360 பாகையுனுள் இருப்பது வட்டம் ஆகும்.

circle, ring, halo wheel, circuit cycle, revolution

Tamil Wiktionary

வட்டம்
  1. 360 பாகையுனுள் இருப்பது வட்டம் ஆகும்.

Winslow (1862)

வட்டம் (vaṭṭam) — noun
  1. A circle, a circular form, a ring-like shape, சக்கரம். W. p. 730. VAT'A
  2. A halo round the sun or moon, பரிவேடம்
  3. A potter's wheel, a mill, திரிகை
  4. A shield, கேடகம்
  5. A hand-bell, கைமணி
  6. A pond, or tank, குளம்
  7. A receptacle for different things, கொள்கலம்
  8. A large water-pot, நீர்ச்சால்
  9. A seat, a chair, பீடம்
  10. A curved club, a weapon, வளைதடி
  11. A cloth, சீலை, as பரிவட்டம்
  12. Lowness, a valley, தாழ்வு. (சது.)
  13. A revolution, as that of Jupiter in about twelve years, or his cycle, of sixty years, வியாழவட்டம்,–Note. The Hindus commenced to reckon by the cycle A. D. 426. Twenty-three cycles have already past, and the present cycle is the twenty-fourth
  14. Revolution of a planet
  15. A premium in exchange; (R.) loss or gain in money transactions, உள்வட்டம்
  16. (Beschi.) Place, as வட்டகை. அந்தவட்டங்களிற்காணேன். I did not see [them] in those places. வட்டஞ்சுற்றியும்வழிக்குவரவேண்டும். Although you pass round, you must get in by the entrance. அவன்வட்டத்துக்குவந்தான்......He became teachable
  • வட்டக்கலம் — A round porringer or other vessel.
  • வட்டக்கிலுகிலுப்பை — A species of the கிலுகிலுப்பை plant. See கிலுகிலுப்பை.
  • வட்டக்கோல் — Periphery or circumference of a circle; ellipse or other curvilinear figure. (R.)
  • வட்டங்கொடுத்துமாற்ற–வட்டமிட்டுமாற்ற — To exchange money by paying a premium.
  • வட்டத்தாமரை — A tree growing in the Malayalam country, its leaf resembling that of the lotus.
  • வட்டத்திரி — Match for a gun, நெருப்புவைக்குந்திரி. 2. A rolled bit of cloth put into the pierced lobe of the ear to widen the orifice, காதிடுதக்கை.

Fabricius (1972)

வட்டம் — noun
  1. circle, சக்கரம்
  2. things of a circular form
  3. cloth, சீலை
  4. revolution of a planet
  5. premium in exchange, discount in money transactions
  6. place, வட்டகை
  7. large water pot
  8. a potter's wheel, a mill, திரிகை
  9. a pond, a tank, குளம்
  10. a receptacle for different things, கொள் கலம்
  11. a curved club, a weapon
  12. lowness, a valley, தாழ்வு
  13. a hand-bell, கைமணி
  14. a seat, பீடம்
  • வட்டக்கோல் — the periphery or circumference of a circle.
  • வட்டங்கட்ட — to pay a premium.
  • வட்டங்கொடுத்து மாற்ற — to exchange money by paying a premium or discount.
  • வட்டத்தாமரை — a tree growing in Malayalam country, its leaf resembling that of the lotus.
  • வட்டத்திரி — match for a gun, a rolled bit of cloth put into the pierced lobe of the ear to widen the orifice.
  • வட்டத்துக்குக் கொடுக்க — to lend money at a premium.

Tamil Moli Akarathi (1928)

வட்டம் (vaṭṭam)
  1. குளம், கேடகம், கைம்மணி, கொள்கலம், சக்கிரம், சீலை, தாழ்வு, திரிகை, நாணயமாற்றுதலின் கழிவு, நீர்ச்சால், பரிவேடம், பீடம், வட்ட வடிவு, வளைதடி, வாகுவலயம்
வட்டம் (vaṭṭam)
  1. ஆழி, கடகம், கணம், குண்ட லம், கொம்மை, கோளகை, சக்கரம் சில்லி, தட்டு, திகிரி, நேமி, படலிகை, பருதி, பாண்டில், பாலிகை, மண்ட வம், மல்லை, வட்டணை, வலயம், வல் லை, வளையம், விம்பம், விருத்தம், இவ ற்றுட்டிரண்டவட்டம்-குழியம்
வட்டம் (vaṭṭam)
  1. குளம், கேடகம், கைமணி, கொள் கலம், சக்கரம், சீலை, தாழ்வு, திரிகைநீர் ச்சால், பரிவேடம், பீடம், பொற்காசு முதலியவற்றின் வட்டம், வளைதடி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வட்டம்¹ (vaṭṭam)
  1. , < Pkt. vaṭṭa < vṛtta. n
  2. Circle, circular form, ring-like shape; மண்ட லம். (தொல். சொல். 402, உரை.)
  3. Halo round the sun or moon, a karantuṟai-kōḷ; பரிவேடம். (சிலப். 10, 102, உரை.) (சினேந். 164.)
  4. Potter's wheel; குயவன் திரிகை. (பிங்.)
  5. Wheel of a cart; வண்டிச்சக்கரம். (யாழ். அக.)
  6. The central portion of a leaf-plate for food; உண்கல மாய்த் தைக்கும் இலையின் நடுப்பாகம். Loc
  7. cf. āvṛtti. Turn, course, as of a mantra; தடவை. விநாயகர் நாமத்தை நூற்றெட்டு வட்டஞ் செய்து (விநாயகபு. 74, 214)
  8. Revolution, cycle; சுற்று. (W.)
  9. Cycle of a planet; ஒரு கிரகம் வான மண்டலத்தை ஒரு முறை சுற்றிவருங் காலம். அவன் சென்று ஒரு வியாழவட்டமாயிற்று
  10. Circuit, surrounding area or region; சுற்றுப்பிரதேசம். கோயில் வட்டமெல்லாம் (சீவக. 949)
  11. A revenue unit of a few villages; சில ஊர்களைக் கொண்ட பிரதேசம்
  12. See வட்டணை²
  13. தார் பொலி புரவிவட்டந் தான்புகக் காட்டுகின்றாற்கு (சீவக. 442)
  14. Items or course of a meal; விருந்து முதலியவற்றிற்குச் சமைத்த உபகரணத்திட்டம். Nāñ
  15. A kind of pastry; அப்பவகை. பாகொடு பிடித்த விழைசூழ் வட்டம் (பெரும்பாண். 378)
  16. See வட்டப்பாறை
  17. வடவர்தந்த வான்கேழ் வட்டம் (நெடுநல். 51)
  18. Circular ornamental fan; ஆலவட்டம். செங்கேழ் வட்டஞ் சுருக்கி (நெடுநல். 58)
  19. Bracelet worn on the upper arm; வாகு வலயம். (பிங்.)
  20. Scale-pan; தராசுத்தட்டு. வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே (திருமந். 1781)
  21. Hand-bell; கைம்மணி. (பிங்.)
  22. Shield; கேடகம். ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப (திருமுரு. 111). (பிங்.)
  23. A kind of pearl; முத்து வகை. முத்துவட்டமும் அனுவட்டமும் (S. S. I. I. ii, 22)
  24. Seat; chair; பீடம். (யாழ். அக.)
  25. Pond, tank; குளம். (பிங்.)
  26. Receptacle; கொள்கலம். (யாழ். அக.)
  27. Large waterpot; நீர்ச்சால். (பிங்.)
  28. A kind of water-squirt; நீரெறிகருவி. பூநீர்பெய் வட்டமெறிய (பரிபா. 21, 42)
  29. Curve, bend; வளைவு. வில்லை வட்டப் பட வாங்கி (தேவா. 5, 9)
  30. A kind of boomerang; பாராவளை. புகரினர் சூழ் வட்டத்தவை (பரிபா. 15, 61). (பிங்.)
  31. Cloth; ஆடை. வாலிழை வட்டமும் (பெருங். உஞ்சைக். 42, 208). (சூடா.)
  32. Boundary, limit எல்லை. தொழுவல்வினை யொல்லை வட்டங்கடந் தோடுத லுண்மை (தேவா. 5, 9)
  33. Polish, refinement; திருத்தம். வட்டமாய்ப் பேசி னான். Loc
  34. A unit for measuring the quantity of water 500 average potfuls, as the amount necessary for a paṅku for one week; ஐந்நூறு சால்கொண்ட நீரளவு
  35. Sect, tribe; மக்கட் பிரிவு. Loc
  36. The middle ear of an elephant; யானையின் நடுச்செவி. (பிங்.)
  37. Lowness; depth, as of a valley; தாழ்வு. (அக. நி.)
  38. Sheaves of paddy spread on a threshing-floor for being threshed; களத்திற் சூடடிப்பதற்குப் பரப்பிய நெற்கதிர். Nāñ
  39. See வட்டமரம்
  40. (W.) — part. Each, every; தோறும். ஆட்டைவட் டம் காசு ஒன்றுக்கு . . . பலிசை (S. I. I. ii, 122, 27)
வட்டம்² (vaṭṭam) — noun
  1. baṭṭā
  2. Rate of exchange; money-changer's commission; நாணயமாற்றின் வட்டம். நாணயத்தின் வட்டமென் றும் (பணவிடு. 179)
  3. Trade discount; ரொக்க வியாபாரத்திற் கொடுக்கும் தள்ளுபடி. Loc
  4. Profit; இலாபம். அந்த வியாபாரத்தில் எனக்கு வட்டமொன்று மில்லை

IndoWordNet

வட்டம் — noun
  1. ஒரு மாவட்டத்தின் உட்பிரிவு
வட்டம் — noun
  1. வட்டம்

தாலுக்கா பகுதி இடம் ஸ்தானம் ஓவல் வடிவம் முட்டை வடிவம் நீள்வட்டவடிவம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வட்டம்
  1. மண்டலம்
  2. பரிவேடம்
  3. குயவன் திரிகை
  4. வண்டிச்சக்கரம்
  5. தடவை
  6. சுற்று
  7. ஒரு கோள் வானமண்டலத்தை ஒருமுறை சுற்றி வருங் காலம்
  8. சுற்றுப்பகுதி
  9. சில ஊர்களைக் கொண்ட பகுதி
  10. வட்டமான செலவு
  11. அப்ப வகை
  12. சந்தனக்கல்
  13. ஆலவட்டம்
  14. வாகு வலயம்
  15. தராசுத்தட்டு
  16. கைம்மணி
  17. கேடகம்
  18. முத்துவகை
  19. பீடம்
  20. குளம்
  21. கொள்கலம்
  22. நீர்ச்சால்
  23. நீர்வீசுகருவி வளைவு
  24. பாரா வளை
  25. ஆடை
  26. எல்லை
  27. திருத்தம்
  28. யானை யின் நடுச்செவி
  29. ஐந்நூறு சால்கொண்ட நீரளவு
  30. தாழ்வு
  31. காட்டுமரவகை
  32. தோறும்
  33. நாரணயமாற்றின் வட்டம்
  34. ரொக்க வாணிகத்திற் கொடுக்குந் தள்ளுபடி
  35. ஊதியம்