பகுதி

* பெரிய அளவினிலிருந்து, பிரிந்த (அ) பிரிக்கப்பட்ட சிறிய அளவு. , - portion, part, prefix மற்றும் விகுதியும் சேர்ந்ததே, பகுபதம் (அ) பகாபதம் எனப்படுகிறது.

part, portion

Tamil Wiktionary

பகுதி — பெயர்ச்சொல் (Noun)
  1. * பெரிய அளவினிலிருந்து, பிரிந்த (அ) பிரிக்கப்பட்ட சிறிய அளவு.

[object Object]

பகு தி பகுதிநேரம் பகுதிக்கிளவி பகுபதம் பகாபதம் உட்பகுதி வெளிப்பகுதி அடிப்பகுதி மேற்பகுதி முற்பகுதி பிற்பகுதி நகர்ப்பகுதி புறநகர்ப்பகுதி நீர்ப்பிடிப்புப் பகுதி

Winslow (1862)

பகுதி (pakuti) — noun
  1. Portion, part, allotment, division, பங்கு
  2. Tax, tribute, திறை
  3. Division of an army, படை. (சது.)
  • பகுதிகட்ட — To pay a tax.
  • பகுதிக்கால் — The sign of உ in some characters. See கால்.
பகுதி (pakuti) — noun
  1. Primitive nature, homogeneous matter, being the passive, generating cause, இயல்பு, as ஐம்பகுதி, the five genders
  2. The radical form of a word without the affixes, சொன்முதனிலை; [from Sa. Prakruti. W. p. 557.] (சது.)

Fabricius (1972)

பகுதி — noun
  1. portion, part, பங்கு
  2. tribute, tax, திறை
  3. division of an army, படை
  • பகுதிகட்ட–கொடுக்க–இறுக்க — to pay a tax.
  • பகுதிக்காரன் — a receiver of the tributes or taxes.
  • பகுதிவைக்க — to impose a tax.
பகுதி — noun
  1. primitive nature, இயல்பு
  2. the radical form of a word without the affixes, (ப்ரகிருதி)

Tamil Moli Akarathi (1928)

பகுதி (pakuti)
  1. இயல்பு, குடியிறை, சொன் முதனிலை, பகுபதத்தோருறுப்பு, பங் கு, படை, பிரிவு,பிரகிருதி
பகுதி (pakuti)
  1. இயல்பு, குடியிறை, பகுத்தல், பகுபதத்தோருறுப்பு, படை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பகுதி¹ (pakuti) — noun
  1. cf. bhakti
  2. [M. pakuti.] Portion, part, allotment, division; பகுப்பு. அண்டப் பகுதியி னுண்டைப் பிறக்கம் (திருவாச. 3, 1)
  3. Difference; வேறுபாடு. மயங்கிய தகுதி யல்லது பகுதி யின்றெனின் (ஞானா. 35, 5)
  4. [T. pagidi, K. pagadi.] Tribute; திறை. இது பகுதி கொள்கெனா (அரிச். பு. நகர்நீ. 111)
  5. Income; வருவாய். (சூடா.)
  6. Revenue or rent; வரி. Colloq
  7. Number, as of a periodical; சஞ்சிகையின் வரிசை எண். Mod
பகுதி² (pakuti) — noun
  1. < prakṛti
  2. Primordial Matter; மூலப்பிரகிருதி. பகுதி யென்றுள தியாதி னும் பழையது (கம்பரா. மீட்சி. 100)
  3. (Gram.) Base of a word; சொல்லின் முதனிலே. பகுதி விகுதி யிடைநிலை சாரியை (நன். 133)
  4. Nature, character; தன்மை. மடியா துயர்ந்த நெடியோர் பகுதியும் (ஞானா. 39, 3)
  5. Forces, army; படை. (திவா.) பின்செலும் பகுதி (இரகு. திக்குவி. 55)
  6. Minister; மந்திரி
  7. Crowd, gathering; கூட்டம். (அக. நி.)
  8. (Pros.) A rhythmic metre of nine letters to a line; அடியொன்றுக்கு ஒன்பதெழுத்து வருஞ் சந்தம். (வீரசோ. யாப். 33, உரை.)
பகுதி (pakuti) — noun
  1. < பகு-
  2. Administrative sub-division of a Taluq; தாலூகாவின் உட் பிரிவு. Nāñ
  3. That which belongs to a person; உரிமைப்பட்டது. தம்முடைய பகுதியல்லாதன வற்றை (குறள், 376, மணக்.)

IndoWordNet

பகுதி — noun
  1. ஒன்றை ஒட்டிய பக்கம்.
பகுதி — noun
  1. ஒன்றை ஒட்டிய பக்கம்.

கலைப்பொருள்கள் மயானம் சுடுகாடு இடுகாடு பிணக்காடு மயானக்கரை மாநிலம் மாகாணம் மண்டலம் மாவட்டம் தாலுக்கா வட்டம் பிரதேசம் பிரதேஷம் தேசம் தேஷம் நாடு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பகுதி
  1. சொல்
  2. முதனிலை
  3. பகுப்பு
  4. வேறுபாடு
  5. திறை
  6. வருவாய்
  7. மூலப்பிரகிருதி
  8. தன்மை
  9. படை
  10. மந்திரி
  11. கூட்டம்
  12. ஒரு சந்தவகை
  13. புத்தகத்தின் வரிசை எண்
  14. உரிமைப்பட்டது