வார்த்தை

Winslow (1862)

வார்த்தை (vārttai) — noun
  1. A word, a phrase, வசனம்
  2. [chris. usage.] the word. [a corrup. of Sa. Varddara, speech.] வார்த்தையிலேசூத்தையா. Is there any harm in words?
  • வார்த்தைகொடுக்க — To speak, to talk.
  • வார்த்தைநாணயம் — Honesty, as shown in the fulfilment of promises.
  • வார்த்தைபிசக — To fail in one's word.
  • வார்த்தைப்பாடு — A promise, an engagement by word.
  • வார்த்தையிழுக்க — To draw one into a dispute.
  • வார்த்தையெடுக்க — To begin to speak.

Fabricius (1972)

வார்த்தை — noun
  1. news, a word, வசனம்.
  • வார்த்தை கொடுக்க — to speak, to talk, to promise.
  • வார்த்தை பிசக — to fail in one's word.
  • வார்த்தைப்பாடு — a promise, an engagement by word.
  • வார்த்தைப்பாடு கொடுக்க — to give a promise.
  • வார்த்தைப்பாடு செலுத்த — to fulfil a promise.
  • வார்த்தையைப் புரட்ட — to pervert the meaning of a word.

Tamil Moli Akarathi (1928)

வார்த்தை (vārttai)
  1. செய்தி, வசனம்
வார்த்தை (vārttai)
  1. வசனம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வார்த்தை (vārttai) — noun
  1. < vārttā
  2. Word, phrase; சொல்
  3. Reply; மறுமொழி. (பிங்.)
  4. Promise; வாக்குத்தத்தம்
  5. News, intelligence, tidings; செய்தி. ஒர் வாணிகனை யாட் கொண்ட வார்த்தை (தேவா. 414, 7)
  6. (Rhet.) A figure of speech. See சொற்பின்வருநிலை. (திவா.)
  7. Means of livelihood of a Vaišya, viz., agriculture, breeding of cattle, trade; உழவு பசுக் காவல் வாணிக மென்ற வைசியர்தொழில். (குறள், 512, உரை.)
  8. A treatise on the art of acquisition of wealth and its preservation; பொருளீட்டு நெறியும் அதன் இடையூற்றை யொழிக்குமுறையும் கூறும் நூல். (சுக்கிரநீதி, 22.)

IndoWordNet

வார்த்தை — noun
  1. மனிதனின் வாயிலிருந்து வெளிப்படும் சொல்

பேச்சு வாக்கு கூற்று நற்சொல் நல்லசொல் நல்லவார்த்தை பாராட்டு புகழ் சொற்பொழிவு பிரசங்கம்