வாக்கு

வாயுரை உறுதி மொழிதல் - vote

promise word, speech vote

Winslow (1862)

வாக்கு (vākku) — noun
  1. Manner, way, விதம்
  2. Side, direction, பக்கம்
  3. Irregularity, ஒழுங்கின்மை. உடம்பொருவாக்காயிருக்கிறது. My body is a little out of order. கோட்டியவில்வாக்கறிந்து. Knowing the bent state of the bow. (நாலடி.) கிடந்தவாக்கிலேகிடக்கட்டும். Let [him or it] remain so
  • வாக்குக்கண் — [appel. வாக்குக்கண்ணன்.] Squint eye, மாறுகண்.
  • வாக்கெடுக்க — See வாகெடுக்க.
வாக்கு (vākku) — noun
  1. Word, speech, வார்த்தை
  2. The mouth, as one of the five organs of the body. See இந்திரியம். [ex Sa. Vach.]
  • வாக்கு–4–சூக்குமை–பைசந்தி–மத்திமை–வைகரி–அவருடையதுநல்லவாக்கு–அவன்வாக்கிலேகேட்டேன் — . Four different sounds; 1. , the sound from the navel–the supposed source of the air, or wind which gives intonation; 2. , sound from the breast or lungs; 3. , sound from the throat or epiglottis; 4. , articulate sound, from the tongue or mouth. . His poetical composition is good. . I heard it from his mouth.
  • அமிர்தவாக்கு — A sweet word, a word of good omen–oppos. to விஷவாக்கு.
  • வாக்காட — To say, to speak. 2. To quarrel, as வாயாட.
  • வாக்காள் — Sarasvati, as வரகேசுரி.
  • வாக்குக்குற்றம் — A mistake, or fault, in speech, as வாய்க்குற்றம்.
  • வாக்குக்கெட்டாதது — That which is unspeakable.

Fabricius (1972)

வாக்கு — noun
  1. manner, way, வீதம்
  2. side, direction, பக்கம்
  3. irregularity, ஒழுங்கின்மை
  • உடம்பு ஒரு வாக்காயிருக்கிறது — my body is a little out of order.
  • கிடந்தவாக்கிலே கிடக்கட்டும் — let him remain so.
  • வாக்குக்கண் — squint eyes.
வாக்கு — noun
  1. word, speech, வார்த்தை
  2. the mouth, வாய்
  • வாக்காட — to say; 2. to quarrel.
  • வாக்கிட — to promise, to declare.
  • வாக்குக் குற்றம் — a fault in speech.
  • வாக்குக் கெட்டாது — that which is unspeakable.
  • வாக்குக்கொடுக்க–ச்சொல்ல–ப்பண்ண–வாக்கிட — as .
  • வாக்குச் சகாயம்பண்ண — to speak in one's behalf, to recommend.

Tamil Moli Akarathi (1928)

வாக்கு (vākku)
  1. சொல், திரும்பினபார்வை, நே ரிலக்கற்றவளைவு, பக்கம், முப்பொ றியினொன்று, மெய்மை, வாக்கென் னேவல், வாய் அது ஐம்பொறியி னொன்று, விதம்
வாக்கு (vākku)
  1. கருமேந்திரிய மைந்திலொன் று, சொல், வாக்கென்னேவல்

IndoWordNet

வாக்கு — noun
  1. ஒருவரால் சொல்லப்பட்டு மதிக்கப்படுவது.
வாக்கு — noun
  1. ஒன்றைப் பற்றிய தன் கருத்தை வாய்மொழியாகவோ எழுத்து வடிவிலோ வெளிப்படுத்தியது
வாக்கு — noun
  1. சார்பாளனைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக வாக்களிக்கும் செயல்
வாக்கு — noun
  1. ஒன்றைச் செய்கிறேன், செய்யமாட்டேன் என்பது போன்ற வகையில் அமையும் உறுதி அளிக்கும் பேச்சு.
வாக்கு — noun
  1. ஜனநாயக முறையில் நடக்கும் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பு, தலைமைப்பொறுப்பு போன்றவற்றுக்கானவர்களை தாங்களே தேர்ந்தெடுக்க மக்களில் குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் உள்ள அடிப்படை உரிமை.

கூற்று செய்தித்தொடர்பு வீண்பேச்சுவளர்த்தல் மிகைப்படக்கூறுதல் வதந்தி புரளி குற்றச்சாட்டு வேண்டுகோள் சுயசரிதம் தன்வரலாறு பதில் விடை பேச்சு வார்த்தை கேலிப்பேச்சு கிண்டல்பேச்சு குத்தல்பேச்சு சொல் சொற்பொழிவு விளக்கம் சாட்சியம் எடுத்துரைத்தல் எடுத்துக்கூறுதல் எடுத்துச்சொல்லுதல் சூத்திரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வாக்கு
  1. சொல்

Tamil Wiktionary

வாக்கு

வாக்களி வாக்காளர் வாக்குறுதி வாக்குவாதம் வாக்குமூலம் வாக்குச்சீட்டு வாக்குச்சாவடி வாக்குவங்கி செல்வாக்கு அருள்வாக்கு நல்வாக்கு கள்ளவாக்கு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வாக்கு¹ (vākku) — noun
  1. cf. bhāga. [T. bāga, M. Tu. vāga.]
  2. Perfection; correctness; திருத்தம். வாக்கணங்கார் மணிவீணை (சீவக. 1473)
  3. Refined form, shape; திருத்திய வடிவு. வாக் கமை கடுவிசைவில் (கலித். 137)
வாக்கு² (vākku) — noun
  1. < வாங்கு-
  2. Bend; வளைவு. கோட்டிய வில்வாக் கறிந்து (நாலடி, 395)
  3. Irregularity; ஒழுங்கின்மை. (W.)
வாக்கு³ (vākku) — part
  1. A participial suffix, signifying purpose; ஒரு வினையெச்சவிகுதி. கொள் வாக்கு வந்தான் (தொல். சொல். 231, உரை).