விடுதலை

கட்டுப்பாடுகள் எதுவுமற்ற ஒரு நிலை. சிறையடைக்கப்படாத அடிமைப் படுப்படுத்தப்படாத நிலை. கட்டற்ற ஆங்கிலம் - freedom, liberty, independence, release(of prisoner, etc.).

deliverance, liberty, freedom rest

Winslow (1862)

விடுதலை (viṭutalai) — noun
  1. Release, liberty, deliverance, நீங்குகை. (c.)
  • விடுதலைப்பத்திரம் — The Habeas corpus, granted to some persons.
  • விடுதலையாக்க — To set at liberty.

Fabricius (1972)

விடுதலை — noun
  1. release, liberty நீங்குகை.
  • விடுதலைப்பத்திரம் — the Habeas Corpus, granted to some persons; a release bond.
  • விடுதலையாக்க–செய்ய — to set at liberty, to release.

Tamil Moli Akarathi (1928)

விடுதலை (viṭutalai)
  1. இட்டம், தன்னிட்டம், நீக் குதல், முடிவு, விடுந்தலைப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விடுதலை (viṭutalai) — noun
  1. Rest; ஓய்வு
  2. Release, deliverance; பந்தநீக்கம்
  3. Liberty; சுதந்திரம். புலை யருக்கும் விடுதலை (பாரதி. தேசீய. விடுதலை. 2)

IndoWordNet

விடுதலை — noun
  1. சிறை, கூண்டு போன்றவற்றிலிருந்து வெளியே வரும் அல்லது வெளியேவிடப்படும் நிலை
விடுதலை — noun
  1. சிறை, கூண்டு போன்றவற்றில் அடைபட்ட நிலையிலிருந்து நீங்கிய கட்டுப்பாடற்ற நிலை.

செயல் சாபவிமோசனம் சாபநிவாரணம் காப்பாற்றுதல் விடுவித்தல்