விலாசம்

Address

Winslow (1862)

விலாசம் (vilācam) — noun
  1. Dalliance of men and women, ஆடவர்மகளிர்விளையாட்டு. (சது.)
  2. Affected aversion or bashfulness of a female, நாணக்குறிப்பு
  3. Beauty, அழகு. W. p. 783. VILASA
  4. A kind of dramatic rhyme, ஓர்பிரபந்தம்
  5. [also விளாசம்.] Superscription of a letter, as மேல்விலாசம். வீதிவிலாசம். Taking a walk in the street for pleasure
விலாசம் (vilācam) — noun
  1. [by transposition of letters for விசாலம்.] Spaciousness, extension, width
  2. A saloon; a large hall in a palace. விலாசமானவீடு. A spacious house. அதைக்கொஞ்சம்விலாசமாக்கவேணும். I must make it a little wider

Fabricius (1972)

விலாசம் — noun
  1. dalliance of men and women, விளையாட்டு
  2. affected aversion or bashfulness of a woman, நாணம்
  3. beauty, அழகு
  4. spaciousness, width, extension, விசாலம்
  5. a large hall in a palace
  6. superscription of a letter, மேல்விலாசம்
  7. a kind of dramatic rhyme, ஓர் பிரபந்தம்
  • விலாசமான வீடு — an airy and spacious house.

Tamil Moli Akarathi (1928)

விலாசம் (vilācam)
  1. அழகு, ஆடவர்மகளிர் விளை யாட்டு, இலீலாவிநயம், நாணயக்கு றிப்பு, பத்திரிகையின் பறவெழுத்து, பொழுதுபோக்கு, விளையாட்டு, வி னோதம், வேடிக்கை
விலாசம் (vilācam)
  1. ஆடவர், மகளிர்விளையாட்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விலாசம்¹ (vilācam) — noun
  1. < vi-lāsa
  2. Sport, play, pastime, pleasure, diversion; விளையாட்டு. வீதியில் விலாச முற்றிடு நாளில் (பாரத. சம்பவ. 119)
  3. Amorous act or gesture; coquetry; காமக்குறிப் போடு கூடிய செய்கை
  4. Bashfulness; கூச்சம். (W.)
  5. Beauty; அழகு. (W.)
  6. Dramatic composition; நாடகநூல். அரிச்சந்திர விலாசம், டம்பாசாரி விலாசம்
  7. Pleasure-house; retreat; சுகானுபவத்துக்குரிய இடம்
  8. Address, superscription; கடிதம் பெற்றுக்கொள்பவரின் பெயர் இருப்பிடம் முதலிய குறிப்பு
  9. Abbreviated name, as of a firm or individual; கூட்டுவியா பாரக்கடை அல்லது தனிநபரின் பெயரை யுணர்த்துங் குறியீடு
  10. Trade mark, property mark; ஆடை முதலியவற்றில் இடும் வியாபாரக்குறி. இந்தச் சேலையிற் குத்தியிருக்கும் விலாசமென்ன ?
  11. Secret code-word or sign marked on articles by traders to indicate the price; வியாபாரிகளால் பண்டங்களிற் குறிக்கப்படும் விலைக்குறியீடு
விலாசம்² (vilācam) — noun
  1. prob. višāla
  2. Spaciousness, extension, width; விசாலம். விலாச மான வீடு
  3. Plantain; வாழை. (அரு. நி.)
  4. See நீபம்¹, 1, 2, 3
  5. (அரு. நி.)

IndoWordNet

விலாசம் — noun
  1. குறிப்பிட்ட இடத்தை குறிக்கிற அடையாளம்
விலாசம் — noun
  1. குறிப்பிட்ட இடத்தை குறிக்கிற அடையாளம்

பொருள் முகவரி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

விலாசம்
  1. முகவரி, கடிதம் பெற்றுக்கொள் பவரின் பெயர், இருப்பிடம் முதலிய குறிப்பு
  2. பண்டம். அழகு
  3. காமக்குறிப்போடு கூடிய செய்கை
  4. விலைச்சேரி - பலபண்டம் விற்குமிடம். கூச்சம்
  5. நாடகநூரல்
  6. வணிகர்களால் பண்டங் விலைசவுத்தல் - விலைகுறை தல். களிற் குறிக்கப்படும் விலைக்குறியீடு
  7. அகலம்
  8. ' விலைத்தீட்டு - விலையாவணம்