பொருள்

பொர் + உள் பொருள் புலன்களால் உணரக் கூடியது - a thought ,an idea, உடைமை - wealth, possession, object,கூர்நோக்குthing

thing, substance, matter, entity possession, belonging, item meaning, sense, signification

Winslow (1862)

பொருள் (poruḷ) — noun
  1. Meaning of a word, the sense, signification, சொற்பொருள்
  2. Property, wealth, riches, money, திரவியம்
  3. Thing, substance, matter, corporeal or incorporeal existence; entity, வஸ்து
  4. Stores, provisions, utensils, பலபண்டம். (c.)
  5. Truth, reality, verity, வாய்மை
  6. A thing of moment or importance, superiority, தலைமை
  7. Gold, பொன்
  8. A child, பிள்ளை
  9. Fruit of action, வினைப்பயன்
  10. [in ethics.] The four divisions of subjects. See நாற்பயன், நாற்பொருள்
  11. [in log.] Inference, from circumstances. See அருத்தாபத்தி
  12. Special quality, disposition, குணம். பொருளுங்கொடுத்துப்பழியுந்தேட. To go to expense and get ill-will by it. பொருடனைப்போற்றிவாழ். Use your wealth properly. (Avv.)
  • இருபொருள்–கல்விப்பொருள்–செல்வப்பொருள் — . A two-fold good, comprising , knowledge; and , wealth, riches.
  • முப்பொருள் — . A three-fold being, the 2. [among vedantists.] God, the soul, and illusion, as திரிபதார்த்தம்.
  • நாற்பொருள்–நால் — . Four advantages. See .
  • ஐம்பொருள்–ஏழுத்து–சொல்–பொருள்–யாப்பு–அணி–இலக்கணம் — . The five chief divisions of Tamil grammar. These are , , , , . See .
  • பொருட்சம்பந்தம்–சம்பந்தம் — . See .
  • பொருட்சிதைவு — Transition of meaning, &c. See சிதைவு.

Fabricius (1972)

பொருள் — noun
  1. meaning, sense, signification, அர்த்தம்
  2. property, wealth, திரவியம்
  3. matter, substance, being, வஸ்து
  4. utensils, various things, household furniture, பலபண்டம்
  5. truth, reality, the thing itself (as opposed to நிழல், the shadow or sign of a thing)
  6. gold, பொன்
  7. a child, பிள்ளை
  8. fruit of action, வினைப்பயன்
  9. special quality, disposition, குணம்
  10. (in ethics) the four divisions of subjects, நாற்பயன் (அறம், பொருள், இன்பம் & வீடு)
  11. (in logic) deduction or inference from premises given, அருத்தபத்தி
  • இருபொருள் — knowledge and wealth.
  • முப்பொருள்–திரி பதார்த்தம் — the Trimurthi:- Brahma, Vishnu and Rudhra; 2. god, the soul and illusion, .
  • நாற்பொருள்–பொருள் — as 10.
  • புதைபொருள்–மறை — a hidden, occult or secret meaning.
  • பொருட் சம்பந்தம் — connection in regard to ideas and subjects.
  • பொருட்சுவை — sweetness of the matter in a work

Tamil Moli Akarathi (1928)

பொருள் (poruḷ)
  1. அருத்தாபத்தி, உடமை, உண்மை, குணம், சம்பத்து இது நூற்பயனான்கி னொன்று, சொற் பொருள், தலைமை, பணம், பலபண் டம், பிள்ளை, பொன், வஸ்து
பொருள் (poruḷ)
  1. 2- கல்லிப்பொருள் செல் வப்பொருள்
பொருள் (poruḷ)
  1. 4- அறம், பொருள், இன்பம், வீடு
பொருள் (poruḷ)
  1. சொற்பொருள், தலைமை, பணம், பலபண்டம், பிள்ளை, பொன், வாய்மை

IndoWordNet

பொருள் — noun
  1. கண் முதலிய உறுப்புகளால் உணரக் கூடிய வகையில் இருப்பதும் உயிரில்லாததுமான ஒன்று.
பொருள் — noun
  1. திட நிலையில் அல்லது திரவ நிலையில் இருப்பதும் உயிரில்லாததுமான ஒன்று.

நிலை நிலமை பகுதி புராணகால பொருள் புராணகால வஸ்து அஸ்திவாரம் ஸ்தாபம் ஆதாரம் உயிருள்ள உயிரினம் வாழ்க்கை குறிக்கோள் இலட்சியம் லட்சியம் நோக்கம் பிரசாதம் உண்டைக்கட்டி காகிதம் தாள் பூஜைப்பொருள் மூட்டை முடிச்சு சில்லறை சாமான் சில்லறை ஜாமான் சில்லறை பொருள் உபசாதனம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பொருள்
  1. சொற்பொருள்
  2. செய்தி
  3. உண்மைக் கருத்து
  4. செய்கை
  5. தத்துவம்
  6. மெய்ம்மை
  7. நன்கு மதிக்கப்படுவது
  8. அறிவு
  9. கொள்கை
  10. அறம்
  11. பயன்
  12. வீடுபேறு
  13. கடவுள்
  14. பலபண்டம்
  15. பொன்
  16. மகன்
  17. தந்திரம்
  18. முலை
  19. உவமேயம்
  20. அருத்தாபத்தி
  21. அகமும் புறமுமாகிய திணைப் பொருள்கள்
  22. அர்த்தசாத்திரம்
  23. தலைமை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பொருள் (poruḷ) — noun
  1. prob. பொரு-. [K. poruḷu, M. poruḷ, Tu. porlu.]
  2. Thing, matter, entity; வஸ்து. விளங்கிய பொருள்க டம்மைப் பொய்வகை யின்றித் தேறல் (சீவக. 1436)
  3. Meaning, as of a word; sense, signification; சொற்பொருள். (சூடா.)
  4. Subject; subject-matter; விஷயம். எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் (குறள், 423)
  5. Essence, as of a treatise; true object or significance; உண்மைக் கருத்து. வேதங்கண்ணிய பொருளெலாம் (கம்பரா. இரணிய. 1)
  6. Object, affair; காரியம். ஒருபொருள் சொல்லுவ துடையேன் (கலித். 8)
  7. Essential principle; தத்துவம். நவையறு நன்பொரு ளுரை மினோ (மணி. பதி. 87)
  8. Immutability, reality, verity; மெய்ம்மை. பொருள்சேர் புகழ் புரிந்தார் (குறள், 5)
  9. That which is important or of moment; நன்குமதிக்கப்படுவது. பொருளே மன்ற பொருளே (குறுந். 174)
  10. Learning; கல்வி
  11. Knowledge; அறிவு. (உரி. நி.)
  12. Doctrine, belief; கொள்கை. பொய்யு மெய்யுமா மென்னும் பொருண்மேற்கொள்ளும் புரை நெறியார் (பெரியபு. நமிநந். 10)
  13. Virtue; அறம். துறத்தல் பொருளாமோ (சீவக. 2960)
  14. Fruit, result; பயன். மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள், 423)
  15. Final bliss; மோட்சம். புகலூர் புகழப் பொருளாகுமே (தேவா. 640, 8)
  16. God; கடவுள். பொருளு மான்மாவுங் காட்டி (குமர. பிர. கந்தர்கலி. 27)
  17. Property, wealth, riches, treasure; திரவியம். பெரும்பொருள்வைத்தீர் வழங்குமின் (நாலடி, 6)
  18. Stores, provisions, utensils; பலபண்டம். (சூடா.)
  19. Gold; பொன். (சூடா.)
  20. Son; புத்திரன். (பிங்.) தாரகனைப் பொருது பொன்று வித்த பொருளினை முன் படைத்துகந்த புனிதன் (தேவா. 622, 9)
  21. Stratagem, device; தந்திரம். பிரிக்கமுயல்வார் புணர்த்த பொருளாமிது (கம்பரா. சடாயு. 155)
  22. Beauty-spot, as on woman's breasts; சுணங்கு. போகமும் பொருளு மீன்ற புணர்முலைத் தடங்கள் (சீவக. 460)
  23. The thing compared in a simile; உவமேயம். பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினும் (தொல். பொ. 284)
  24. Objectives of human existence. See உறுதி
  25. அறம் பொருளின்பம் வீடென்னும் நான்கு பொருளி னும் (திருக்கோ. 1, உரை)
  26. (Log.) Deduction or conclusion from premises given, inference from circumstances; அருத்தாபத்தி. அபா வம் பொருளொப்பு (சி. சி. அளவை, 1, மறைஞா.)
  27. Affairs of life, as topics of poetry, in two classes, viz., akam, puṟam; அகமும் புறமுமாகிய திணைப்பொருள்
  28. Science of political economy; அர்த்தசாஸ்திரம். ஞாலத்தறம் பொருள் கண்டார் கணில் (குறள், 141)
  29. Headship, leadership; தலைமை. (யாழ். அக.)