வைப்பு

Deposit

Winslow (1862)

வைப்பு (vaippu) — noun
  1. Greatness, பெருமை. (சது.)
  2. See வை, v

Fabricius (1972)

வைப்பு — noun
  1. greatness, பெருமை
  2. (v. n. of வை) a treasure laid up, சேமத் திரவியம்
  3. concubinage
  4. preparation of medicines, மருந்து வைப்பு
  5. placing, வைத்திருக்கை
  6. a place, இடம்
  7. a town, ஊர்
  • வைப்புச்செப்பு — a pot wherein treasure is kept.
  • வைப்புச் சரக்கு — prepared medicine.

Tamil Moli Akarathi (1928)

வைப்பு (vaippu)
  1. இடம், ஊர், உண்டாக்கல், சேம திரவியம், பெருமை, வைத்தல்
வைப்பு (vaippu)
  1. இடம், ஊர், பெருமை, வைத்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வைப்பு (vaippu) — noun
  1. < வை³-
  2. Placing; வைக்கை. பிறபொருள் வைப்போடு (சிலப். 10, கட்டுரை, 17)
  3. Deposit, hoard, treasure; சேமநிதி. நல்லடியார்மனத் தெய்ப்பினில் வைப்பை (தேவா. 818, 2)
  4. Buried treasure, treasure-trove; புதையல். செண்டெறிந்து வைப்பெடுத்த செயலும் (திருவிளை. மேருவை. 1)
  5. Place; இடம். (பிங்.)
  6. Land; நிலப்பகுதி. கண்ணகன் வைப் பிற்றாயினும் (புறநா. 18)
  7. Town; ஊர். வேறு பல் வைப்பும் (திருமுரு. 224)
  8. World; உலகம். வேதமுற் றியங்கு வைப்பின் (கம்பரா. பிணிவீட். 113)
  9. That which is artificial; செயற்கையானது
  10. Artificial preparation; செயற்கைச்சரக்கு. வைப் புப் பாஷாணம்
  11. See சூனியம், 6
  12. 11. Concubinage; கூத்தியாள் வைத்துக்கொள்கை
  13. See வைப்பாட்டி
  14. (Pros.) Short, final lines of certain kinds of kali verse. See சுரிதகம்
  15. (தொல். பொ. 448.)

IndoWordNet

வைப்பு — noun
  1. நகை, பாத்திரம் போன்ற பொருளை ஈடாகப் பெற்றுப் பணம் தரும் முறை.

அடமானம் அடகு ஈடு. பொருள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வைப்பு
  1. வைக்கை
  2. பாதுகாப்பு நிதி
  3. புதையல்] இடம்
  4. நிலப்பகுதி
  5. ஊர்
  6. உலகம்
  7. செயற்கை யானது! செயற்கைச் சரக்கு
  8. வைப்பாட்டி
  9. கலிப்பாவகையின் இறுதியுறுப்பு