அமிர்தம்
(பெ) - தேவர் உணவு, அமுதம், அமிழ்தம் காயகல்பம்
amrita, ambrosia, nectar water milk
Tamil Moli Akarathi (1928)
அமிர்தம் (amirtam)
- அமிழ்தம், இரவாமை, இனி ப்பு, உணர்வு, சோறுதேவவூண், நஞ் சுநீர், நெய், பாக்கியம், பால், பொன், முத்தி, மூர்ச்சைதீர்த்துயிர்தரு மரு ந்து, யாகசேடம், வெண்ணெய்
Tamil Wiktionary
அமிர்தம்
- (பெ) -
- தேவர் உணவு, அமுதம், அமிழ்தம்
- காயகல்பம்
- இனிய சுவை
- பசுவின் பால்
- அழியாத அமரத்துவம் தரவல்லது; அழிவின்மை அமிர்தா என்ற வடமொழிச் சொல்லிலிருந்து வந்த அயற்சொல் ஆகும்.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அமிர்தம் (amirtam) — noun
- < a-mṛta
- Immortality; அழிவின்மை
- Ambrosia, nectar, as conferring immortality; தேவருணவு. தோ ளான் . . . அமிர்த மன்னாளை யெய்தி (சீவக. 268)
- Pleasantness, agreeableness; இனிமை. அமிர் தங்கொள வுயிர்க்குங் கருங்கா ழகிலி னறும்புகை (சீவக. 349)
- Food; உணவு. தந்தவ ளமிர்த மூட்ட வுண்டு (சீவக. 1178)
- Water; நீர். (W.)
- Cow's milk; பசுவின்பால். (தைலவ. தைல. 1.)
- Unsolicited alms; யாசியாமற் கிடைக்கும் பிட்சை. ஒன் றிரவாமல் வருவதே அமிர்தம் (காஞ்சிப்பு. ஒழுக். 36)
- Final liberation; மோக்ஷம்
அமிர்தம் (amirtam) — noun
- (நாநார்த்த.)
- Ghee; நெய்
- Svarga; சுவர்க்கம்
- Remains after a sacrifice; யாகசேடம்
- Gold; பொன்