இரு

இருண்ட இரண்டு black, swarthy

to be, exist, be present to have to live, stay, reside

Tamil Wiktionary

இரு — வினைச்சொல் (Verb)
  1. அமர்
  2. தங்கு
  3. இருண்ட
  4. கரிய
  5. பெரிய
  6. இரண்டு

[object Object]

இருப்பு இருத்து இருமை இருமுடி இருமடி இருவர் காத்திரு பார்த்திரு சேர்த்திரு தனித்திரு விழித்திரு பசித்திரு

Winslow (1862)

இரு (iru) — verbal noun
  1. , க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, v. n. To sit, sit down, உட்கார
  2. To live, be alive, exist, உயிர்வாழ
  3. To abide, reside, dwell, sojourn or stay in an appropriate place–as men in houses–beasts in the forest–fishes in water, &c., தங்க
  4. To be, wait, remain, be present, be at hand, சமுகத்திலிருக்க
  5. To be in reserve, in store, to remain–as an overplus, மீந்திருக்க
  6. To be ready, prompt, waiting for any duty or project, to be on the point of acting, going, &c., ஆயத்தமாயிருக்க
  7. To settle in a place, become fixed, established, நிலைபெற
  8. To last, remain, continue, endure, நீடிக்க. (c.) With ஏன்று prefixed, it expresses expectation, desire, &c.–as வருவானென்றிருக்கிறோம். We expect him. In the past tense with the gerund of a verb it serves to express the plu-perfect tense of that verb–as வந்திருந்தான். He had come. The gerund is often used with the locative and expresses the idea of procession–as நகரத்திலிருந்துநீங்கினான். He departed from the city. Sometimes இருந்து is an expletive (அசைச்சொல்)–as ஏழுந்திருந்தான். He is risen. இரு இரு. Wait, wait
  9. Sit down. இருக்கச்சொல்லியும்போய்விட்டான். Although I told him to wait, he went away. இருக்கட்டும் இருக்கட்டும். Let it be (emphatically). இருக்கிறதவ்வளவுதான். That is all there is. இருந்தல்லவோபடுக்கவேண்டும். Is it not necessary to sit before lying down? a phrase used to express the necessity of caution or deliberation in any pursuit. இருந்தாற்போலே செத்துப்போனான். He died unexpectedly. இருந்திருந்துகாரியமிறுகிக்கொண்டது. The case has at length assumed a serious aspect. மீன்பிடிக்க இருக்கிறான். He is about to go afishing. அவனின்னமிருக்கிறானா? Is he still alive? Is he still there, not gone yet? காரியமிப்படியிருக்கிறது. Such is the state of affairs. அந்தத்துரையிருக்கிறநாளிலே. During the period of that governor. நெடுநாளிருப்பார்கள். They will live long
  10. They will remain here long. அதுமெய்யென்றிருந்தேன். I thought it was true. அவனிருந்தாகிறதென்ன? அவனிருந்தும்பயனென்ன? Of what use is he?
  • இருக்கை — Sitting, உட்கார்ந்திருக்கை. 2. A seat, ஆசனம். 3. Being, a state, or condition of being–chiefly applicable to the human species, இருப்பு. 4. s. (p.) Residence, dwelling, situation, இருப்பிடம். 5. A town, village, ஊர்ப் பொது.
  • இருப்பு — Sitting, mode of sitting–as of ascetics, &c., இருக்கை. 2. Being, condition state of being–chiefly of the human species, நிலை. 3. s. Residence, abode, dwelling, வாசஸ்தலம். 4. The appropriate place of any person or thing, the place where a person or thing is established, உரியவிடம். 5. A seat, பீடம். 6. Surplus, balance in hand, remainder of cash in hand after an expenditure, கையிருப்பு. 7. Money in reserve, amount in a treasury, பொக்கசத்திருப்பு. 8. Remaining commodities, residue, மீந்திருப்பவை. 9. Stores, merchandise, wares, சரக்கிருப்பு. அவனிருந்த இருப்பிலே சம்பாதித்துக்கொண்டான். He acquired his wealth in one place; i. e. without running hither and thither. உன்னிடத்திலின்ன மிருப்பென்ன? How much still remains in your hand (in money or goods)? அவனிடத்திலிருப்பிருக்கிறது. He has got money in hand.
  • இருப்பிடம் — Habitation, place of residence, appropriate, customary or established place of a person or thing, உறைவிடம். 2. The seat, the posteriors, ஆசனம்.
  • இருப்புப்பார்க்க — To see how mush still remains in the store.

Fabricius (1972)

இரு — adjective
  1. (from இரண்டு used before a consonant) two, double, both, இரட் டிப்பான
  2. great, spacious, vast, இருநிலம், spacious earth
  3. black, கரிய
  • இருகாலும் — both the feet; 2. twice.
  • இருதலைக்கொள்ளி — a brand burning on both ends.
  • இருதலைக்கொள்ளி யெறும்புபோலாக — to be like an ant betwixt two fires.
  • இருதாரைக் கத்தி — a two-edged sword or knife.
  • இருதிணை — (gram), the two classes of nouns.
  • இருதிறத்தார் — both parties.
இரு — v. i.
  1. v. i. be, exist, be present, உண்டாயிரு
  2. live, சீவி
  3. be in reserve or in store மீந்திரு
  4. wait, remain, தரி
  5. stay, so journ, lodge, reside, தங்கு
  6. sit down, sit, உட் காரு
  7. (with preceding inf.) be about, intend
  8. (with preceding என்று) think, consider
  9. (with preceding. வேண்டும் என்று) will
  10. if preceded by அய் it expresses quality. For its use as auxiliary verb see grammar. Sometimes it is a mere expletive as in, எழுந்திரு, get up; II. fancy, expect, hope, உத்தேசி
  • மீன்பிடிக்க–பிடிக்கலாம் என்று–இருக்கி றான் — he is about (intends) to go a fishing.
  • அது மெய்யென்றிருந்தேன் — I thought it was true.
  • அவர்கள் என்னோடிருக்க வேண்டுமென் றிருக்கிறேன் — I will that they be with me.
  • சுகமாயிருக்கிறான் — he is well.
  • இரும் — sit down, remain.
  • உன் தகப்பனார் இன்னும் இருக்கிறாரா — ? Is your father still alive?.

Tamil Moli Akarathi (1928)

இரு (iru)
  1. பெரிய அதிதியின் நாமாந்தரம், இரண்டு
இரு (iru)
  1. வார், இரண்டு, உட்காரு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இரு² (iru) — adj
  1. < இரு-மை
  2. Great, spacious, vast; பெரிய. மாயிரு ஞாலம் (குறள், 999)
  3. Black; கரிய. இருமலர்க் குவளை யுண்கண் (சீவக. 1171)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இரு
  1. பெரிய
  2. கரிய
  3. இரண்டு