உதிர்

autumn

Tamil Wiktionary

உதிர்
  1. இலை போன்றவை கிளையில் இருந்து கழன்று
  2. விடுபட்டுக் கீழே விழுவது போன்றவற்றைக் குறிக்கும் வினை.
  3. சிந்து
  4. சொரி

Winslow (1862)

உதிர் (utir) — noun
  1. The root of the Cyperus juncifol, முத்தக்காசு.
உதிர் (utir) — noun
  1. –உதிரு, கிறது, உதிர்ந்தது, உதிரும், உதிர, v. n. To drop off, fall off–as leaves, fruits, &c.; to be blasted, nipped, to fall off–as the hair, by disease or age, சொரிய
  2. To be shaken with the wind or otherwise, அசைக்கப்பட்டுதிர
  3. To crumble, fall to pieces as cakes (பிட்டு), பிதிர
  4. To fall as tears, சிந்த
  5. To die (used in imprecations), சாவ. நீசீக்கிரமுதிர்ந்துபோவாய். You shall die soon (a curse). தாரகையுதிர்ந்த. The stars fell. (ஸ்காந்தம்.) பூவுதிரப்பிஞ்சுதிரக்காயுதிரக்கனியுதிர. Let blossoms, buds, unripe fruits, and fruits drop off; i. e. let people of all ages die–an imprecation
  • உதிர்ந்தசருகு — Withered leaves fallen from the tree. உதிர்ந்தசருகுணவொழியவுணவில்லான். He who feeds upon dry leaves abstaining from all kinds of food. (பாரதம்)
  • உதிர்பருவம் — The quality or consistency of a thing that easily crumbles.
  • உதிர்மணல் — Loose sand a little moist.
  • இலையுதிர்காலம் — The season of the fall of the leaf.
  • உதிரி — That which falls off, or is separated, exfoliation, உதிர்ந்தது. 2. A disease, small-pox of various kinds, so called from the scabs falling off, ஓர்வைசூரி. 3. A species of plantain, ஓர்வகைவாழை.
  • உதிரிக்குத்து — Aching pain incident to one attacked with உதிரி.
உதிர் (utir) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To shed, cast leaves, fruits, &c.–as trees; to cause to drop or fall in numbers or succession, to shake off, beat off, peel off, blast, nip, உகுக்க
  2. To break to pieces, பொடியாக்க
  3. (p.) To shed tears, கண்ணீருகுக்க
  • உதிர்ப்பு — Shedding, shaking off, blasting, உகுக்கை. 2. Crumbling, உதிர்வு.

Fabricius (1972)

உதிர் — v. i.
  1. , உதிரு, II. v. i. fall off, drop down. சொரி
  2. crumble, பிதிரு
  3. die, சா
  4. demolished, குலைந்துபோ
  • மரம் மாவாய் உதிர்கிறது — the wood crumbles into dust.
  • நீ சீக்கிரம் உதிர்ந்துபோவாய் — you shall die soon (a curse).
  • உதிரி–உதிர்ந்தது–பிட்டு — what falls down or separated, ; 2. a kind of small-pox; 3. a confectionery made of flour, .
  • உதிர்ந்த சருகு — withered leaves which have dropped down.
  • இலையுதிர்காலம் — the season of the fall of leaves, autumn.
உதிர் — v. t.
  1. v. t. (caus. of உதிர்) shake off, drop, உகு
  2. shed tears, கண்ணீர் சிந்து
  3. cause to drop or fall, சொரிவி
  4. break to pieces, பொடியாக்கு
  • உதிர்த்தல்–உதிர்ப்பு — shedding.
உதிர் — noun
  1. crumb, piece, fragment, துகள்
  2. straight-sedge tuber, முத்தக்காசு, (the root of the cyperus juncifol.)

Tamil Moli Akarathi (1928)

உதிர் (utir)
  1. துகள், முத்தக்காசு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உதிர்³ (utir) — noun
  1. < உதிர்¹-
  2. Crumb, piece, fragment; துகள். உடைந்தன வுதிராகி (கந்தபு. சதமக. 13)
  3. Straight-sedge tuber; முத்தக்காசு. (W.)

IndoWordNet

உதிர் — verb
  1. சிறு சிறு பகுதிகளாக விழுதல்

கொட்டு விழு இரு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உதிர்
  1. கோரைக்கிழங்கு
  2. துகள்