ஊர்

- அடையாளங்களுள்ள மக்கள் வாழிடம் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மக்கள் வாழும் கிராமம் , நகரம் போன்ற எந்த இடத்தையும் குறிக்கும் சொல். கடலைச்சார்ந்த சமவெளியில் மக்கள் சேர்ந்து வாழும் இடங்களை தமிழில் ஊர் அல்லது பாக்கம் என்றே அழைத்தனர்.

city, town, village, place, locality habitation, dwelling, residence going, riding

Winslow (1862)

ஊர் (ūr) — noun
  1. A country, a village, town, or city, புரம். ஊரறிந்தபார்ப்பான். A brahman who knows the whole country or town; i. e. a person competent for business. ஊருடன்கூடிவாழ். Prosper in the society of your fellow citizens. ஊரோடேபோய்ச்சேர்ந்தான். He arrived at home.
  • ஊரன் — The chief of an agricultural district, மருதத்தலைவன். (p.)
  • ஊரவர்கள்–ஊரார் — Inhabitants of a village, town, country, &c. 2. Others, strangers, not one's own people, அன்னியர்.–Used adjectively, the ர் is often dropped–as ஊராகாரியம், others' affairs; ஊராசொத்து, others' property; ஊராகாணி, others' land. ஊராருடைமைக்குப்பேராசைகொள்ளுதல்..... Coveting other men's property–துஷ்டப்பிள்ளைக்குஊரார்புத்திசொல்லுவார்கள்... An unruly child will be chastized by the magistrates.
  • ஊரார்கையிற்கொடுக்க — To deliver into another man's hand.
  • ஊராளி — The ruler, magistrate, or headman of a district, ஊரதிகாரி.
  • ஊரிலிகம்பலை — [prop. ஊர்கலிகம்பலை.] A village quarrel, tumult, &c.
  • ஊரின்னிசை — A poem concerning the heroes of a town, or country, ஓர்பிரபந்தம். See பிரபந்தம்.
ஊர் (ūr) — infinitive
  1. , கிறேன், ந்தேன், வேன், ஊர, v. n. To move slowly, crawl as an infant, creep as a snake, a reptile, &c., தவழ
  2. To run, or flow as water, or as blood in the veins, eruption, scall, &c.; to extend over a surface–as spots on the skin which are considered beautiful, பரவ
  3. To itch, தினவுற
  4. (p.) To get upon a horse, a carriage, &c., ஏற
  5. v. a. To ride, to cause to go–as a horse; to despatch, to drive a vehicle, செலுத்த. இந்தஊரும்பிள்ளையோரிடத்திலேகிடக்கிறதில்லை... This creeping child will not stay in any one place. ஏறும்பூரக்கல்லுந்தேயும். Even a stone will be worn away by the continual passage of ants. [prov.] கையூருகிறது. The hand is ready for action. வாயூருகிறது. The mouth waters. தாரூருஞ்சடை. Ringlets decked with garlands. நீரூரும்புவி. The sea-girt earth. காப்பன்பசபசென்றூருகிறது. The eruption itches. நிலைக்கழுவிலூர்ந்திடல். Being impaled on a stake. (அறநெறித்தீபம்.)
  • ஊரப்பார்க்க — To put in motion, to cause to pass away or out–as poison is removed by a magician.
  • ஊருகால் — A chank, a snail, சங்கு.
  • ஊர்வது — A creeping child. 2. Reptiles.
  • ஊர்புல் — A species of grass, ஓர்புல்.
  • ஊர்வன — Reptiles, தவழுஞ்செந்துகள்.
  • மடலூர்தல் — Riding the stem of a palmyra leaf-feigned of a disappointed lover. See மடல்.

Fabricius (1972)

ஊர் — noun
  1. a village, a town, புரம்
  2. a country, நாடு
  3. halo round the sun or moon, பரிவேடம்
  4. shield, கேடயம்
  • ஊரோடேபோய்ச் சேர்ந்தான் — he arrived at home.
  • ஊரோடிருக்கிறான் — he is at home with his kinsfolk.
  • ஊராண்மை — nobleness of mind, magnanimity, clemency etc.
  • ஊரார்–ஊர் மனுஷர் — the townsmen, the people of the place; 2. others, strangers, not one's own people.
  • ஊரார் உடைமை — other's property.
  • ஊரார் கையிலே கொடுக்க — to deliver into another man's hand.
ஊர் — v. i.
  1. , ஊரு, II. v. i. move slowly, creep, crawl, தவழ்
  2. circulate as blood
  3. itch, தினவுறு; v. t. ride, cause to go (as a horse), drive a vehicle, செலுத்து; mount, ஏறு
  • எறும்பூரக் கல்லும் குழியும் — even a stone will become hollow by the continued passage of ants.
  • நத்தை ஊருகிறது — the snail creeps.
  • ஊரல் — friction, உரிஞ்சல்; 2. creeping.
  • ஊருகால் — a snail, a chank.
  • ஊர்வன — reptiles.
  • ஊர்தி — a vehicle or conveyance in general, bullock, horse, palanguin etc.
ஊர் — v. i.
  1. v. i. (caus. of ஊர்) suck, ஊற்று.

Tamil Moli Akarathi (1928)

ஊர் (ūr)
  1. ஊரென்னேவல், நாடு, பரிவே டம், நகர், தேசத்தினுட்பிரிவு
ஊர் (ūr)
  1. அகலுள், அருப்பம், இருக்கை உறையுள், ஏயில், ஒக்கம், காடு காண்டகம், குடம், குடி, குடிக் காடு, குப்பம், சும்மை, சேரி, நத்தம், நி வேசனம், பக்கணம்பட்டினம், பதி பாக்கம், பாடி, பாழி, புரி, பூக்கம் பூண்டி, பூரியம், பேடு, முட்டம், மேடு வாசம், வாழ்க்கை, வேலி, வைப்பு, அன்றியும், சிற்றூரின் பெயர்-நொ ச்சி, பட்டி, பட்டு,பள்ளி இராஜ தானியின் பெயர் - நகரம், பரம், புரி பட்டணம், நூறு குடியூரின் பெயர் கிராமம் ஐந்நூறு குடியூரின் பெயர் பெருங்கிராமம் ஐந்நூறு கிரமங்கட் குத்தலைக்கிராமத்தின்பெயர் -மடப் பம் மலைகள் செறிந்தவூரின் பெயர் கேடகம், மலையும்யாறும் சூழ்ந்த வூரின்பெயர் கார்வடம் மலைமேலே ற்றிய வூரின்பெயர்சம்வாகம்
  2. பகை மேற் சென்றோ ருறைவிடத்தின் பெயர் பாசறை, பாடிவீடு, முனைப் பதி அன்றியும் பகைவரூர் பாழி அன்றியும் குறிஞ்சி முதலைந்தினை யூரின்பெயர் தத்தம்வரியிற் காண்க
ஊர் (ūr)
  1. ஊரென்னேவல், ஊர்

IndoWordNet

ஊர் — verb
  1. சிறிய - சிறிய பூச்சிகள் ஊர்வது

நெளி மெல்ல வா மெதுவாக வா மெல்லமாய் வா

Tamil Wiktionary

ஊர் — பெயர்ச்சொல் (Noun)
  1. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மக்கள் வாழும் கிராமம்
  2. நகரம் போன்ற எந்த இடத்தையும் குறிக்கும் சொல்.
  3. மக்கள் எறும்புகளைபோல் ஊர்ந்து வந்து சேரும் செழிப்பான வாழத்தகுந்த இடம் என்பதனால் 'ஊர்' என்று அழைக்கப்பட்டது.

[object Object], [object Object]

ஊர்வலம் ஊர்ப்பெயர் சிற்றூர் பேரூர் புத்தூர் திருச்செந்தூர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஊர்³ (ūr) — noun
  1. < ஊர்¹-
  2. Going, riding; ஊர்கை. ஊருடைத்திண்புரவியுலைத்தனள் (சேதுபு. தேவி. 43)
  3. [T. Tu. ūru, K. M. ūr.] Village, town, city; வசிக்கும் ஊர். (தொல். பொ. 37.)
  4. Place; இடம். ஒரூ ரிரண்டஃக மாயிற்றென்று (சீவக. 2087)
  5. Resident population; ஊரிலுள்ளார். ஊரு மயலுஞ் சேரியோரும் (இலக். வி. 563)
  6. Halo round the sun or moon; சந்திரசூரியரைச் சூழும் பரிவேடம். செங்கதிர் தங்குவதோ ரூருற்றது (கம்பரா. சரபங். 9)