ஏலம்

, (பெ) - 1) ஏலக்காய்(தி.நி) Elettaria cardamomum எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு வகை தாவரத்தின் நறுமணம் மிக்க விதைகளைக்கொண்ட காய்.

cardamom plant (Elettaria cardamomum) cardamom (Seed of Elettaria cardamomum, used as a medicine and spice, especially in curry powder) auction

Tamil Wiktionary

ஏலம்
  1. , (பெ) -
  2. 1) ஏலக்காய்(தி.நி)
  3. Elettaria cardamomum எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு வகை தாவரத்தின் நறுமணம் மிக்க விதைகளைக்கொண்ட காய்.
  4. சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு நறுமணப் பொருள்
  5. தேநீர், உணவு பதார்த்தங்களில் நறுமணத்திற்காக பயன்படும் ஒரு உலர் காய்.
  6. 2) (வணிகவியல்)
  7. வணிகவியலில், ஒரு பொருளை அல்லது சொத்தை பொதுவில் அதிக விலை கோருபவருக்கு விற்கும் முறைமையை ஏலம் எனப்படும்.

[object Object]

Winslow (1862)

ஏலம் (ēlam) — noun
  1. Cardamom, the plant or seed, ஆஞ்சி, Elettaria cardamomum. Wils. p. 173. ELA
  2. (p.) An unguent for perfuming the hair of women, மயிர்ச்சாந்து
  3. (சது.) Aromatic spices, வாசனைப்பண்டம்
  • ஏலக்காய் — The berries of the cardamom.
  • ஏலக்குழல்–ஏலவார்குழல் — A perfumed hair knot. (சத. 6.)
  • ஏலக்குழலார் — Ladies with fragrant hair.
  • ஏலப்பாட்டு — A waterman's song–the word ஏலம் occurring, கப்பற்பாட்டு.
  • ஏலரிசி–ஏலவரிசி — The seed of the cardamom.
  • ஏலாதிகடுகம் — An electuary, ஓர் மருந்து.
ஏலம் (ēlam)
  1. [port. leilam.] Auction, selling by auction, விலைகூறுகை.

Fabricius (1972)

ஏலம்
  1. (ஏலை) the cardamom plant
  2. its seed, ஏலரிசி
  3. an unguent for woman's hair, மயிர்ச்சாந்து
  • ஏலக்காய் — the berries of cardamom.
ஏலம் — s. (Port.)
  1. (Port.) auction, public sale.
  • ஏலங்கூற — to cryout the bid at an auction.
  • ஏலங்கேட்க — to bid at an auction.
  • ஏலச்சீட்டு — auction chit.

Tamil Moli Akarathi (1928)

ஏலம் (ēlam)
  1. ஆஞ்சி, இயங்கு, ஒருமரம், பஞ்ச வாசத்தொன்று, மயிர்ச்சாந்து, முதி ரை, வாசனைப்பண்டம், விலைகூறு கை
ஏலம் (ēlam)
  1. ஆஞ்சி, இலாஞ்சி, துடி
ஏலம் (ēlam)
  1. மயிர்ச்சாந்து, வாசனைப்பண்டம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஏலம்¹ (ēlam) — noun
  1. < ēlā
  2. Cardamom-plant
  3. sh., Elettaria cardamomum; செடி வகை
  4. Cardamom; ஒரு வாசனைப்பண்டம். (திவா.)
  5. Unguent for perfuming the hair of women; மயிர்ச்சாந்து. ஏலவார்குழலிமார் (திருவாச
  6. 3)
ஏலம்² (ēlam) — noun
  1. Spikenard. See சடாமாஞ்சி. (மலை.)
  2. Mistletoe berry thorn. See சங்கஞ்செடி. (மலை.)
  3. Satin-wood. See முதிரை. (மலை.)
ஏலம்³ (ēlam) — noun
  1. leilào [T. Tu. elamu, K. elām, M. ēlam.] Auction; போட்டி யிற் பலர்முன் ஏற்றும் விலை.

IndoWordNet

ஏலம் — noun
  1. பலர் கூடியுள்ள கூட்டத்தில் மிக உயர்ந்தபட்ச விலையில் கேட்போருக்குப் பொருளைக் கொடுக்கும் விற்பனை
ஏலம் — noun
  1. உணவுப் பண்டங்களில் சுவைக்காகச் சேர்க்கப்படுவது மருந்தாகப் பயன்படுவதுமான நறுமணம் உடைய சிறு விதைகள் கொண்ட காய்.
ஏலம் — noun
  1. கடனுக்காக வைத்த பொருட்களை மிக அதிக விலை கூறி விற்பதால் அந்த நபரின் கடன் அடையும் ஒரு முறைமிக அதிகமாக விலை கூறி அந்த பொருட்களை விற்று அதில் மனிதனின் கடன் அடையும் ஒரு முறை
ஏலம் — noun
  1. நறுமணமுள்ள விதை மசாலா பொருட்களாக பயன்படுத்தலாம்

வாக்கு கூற்று ஏலக்காய் பெரிய ஏலக்காய் பலர்முன் ஏற்றும் விலை விற்பனை பசுமை மரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஏலம்
  1. செடிவகை
  2. மணப்பொருள்
  3. மயிர்ச் ஏவல்வினா- ஏவும் நோக்கத்தோடு கேட்கும்