ஓட்டம்

Running; speeding; galloping - ஓடுதல் speed, swiftness - வேகம் current, flow - நீர் ஓடுதல்

running, galloping; speeding race running race

Tamil Wiktionary

ஓட்டம்

ஓடு ஓட்டப்பாதை வெள்ளோட்டம் நீரோட்டம் காற்றோட்டம் மின்னோட்டம் வயிற்றோட்டம் தடையோட்டம் தொடரோட்டம்

Fabricius (1972)

ஓட்டம் — v. n.
  1. n. running, flight, speed, course, a run
  2. current, நீரோட்டம்
  3. defeat, rout, தோல்வி
  4. income, means, வருவாய்
  5. brilliance as in a gem
  • அவன் அங்கே யெடுத்த ஓட்டம் இங்கே வந்தோய்ந்தது — he run all the way hither.
  • ஒரே ஓட்டமாய்வா — come at once without halting on the way.
  • ஓட்டத்தில் விட — to gallop, to put off.
  • ஓட்டம் காட்ட — to run on inducing others to follow.
  • ஓட்டமாய் ஓட — to run with great speed.
  • ஓட்டம்பிடிக்க — to run off with speed, to flee; 2. to overtake in running.
ஓட்டம் — noun
  1. ஓஷ்டம், s. the upper lip, மேல் உதடு. lip in common.

Tamil Moli Akarathi (1928)

ஓட்டம் (ōṭṭam)
  1. உதடு, ஓடுதல், தோல்வி, நீரோ ட்டம், மேலுதடு
ஓட்டம் (ōṭṭam)
  1. உட்செலுத்தல், ஓடப்பண் ணல், செலுத்துதல்
ஓட்டம் (ōṭṭam)
  1. உதடு, ஓடுதல், தோல்வி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஓட்டம்¹ (ōṭṭam) — noun
  1. Running; speeding; galloping; ஓடு கை. (காஞ்சிப்பு. மணி. 18)
  2. Speed, swiftness; வேகம். வாசிப்பதில் ஏன் இவ்வளவு ஓட்டம்?
  3. Current, flowing; நீரோடுகை
  4. Brilliance, as in a gem; இரத்தினங்களின் நீரோட்டம்
  5. Defeat, rout, retreat; தோல்வி. (பிங்.)
  6. Income, means, resources; வருவாய். அவருக்கு முன்போற் செலவுசெய்ய இப்போது ஓட்டமில்லை
  7. Rising higher in price; விலைமதிப்பு ஏறுகை. நூறுவராக னுக்குமேல் இந்த நகைக்கு ஓட்டமில்லை
  8. Purifying by melting, as gold; உருக்கிச் சுத்தஞ்செய் கை. (சிலப். 5, 152, உரை.)
  9. Quickness of mind; மனஞ்செல்லுகை. அவனுக்குப் படிப்பில் ஓட்டமில்லை
ஓட்டம்² (ōṭṭam) — noun
  1. < ōṣṭha
  2. Upper lip; மேலுதடு. (பிங்.)
  3. Lip; உதடு. (திவா.)