ஓடு

கால்களை வேகமாக அசைத்து நகர்வது. கூரையில் வேயப் பயன்படும் சுடப்பட்ட மண் பொருள். - गलाना; चलाना

to run, flee, fasten to flow, as a stream or river to go, pass, sail

Tamil Wiktionary

ஓடு
  1. கால்களை வேகமாக அசைத்து நகர்வது.
  2. கூரையில் வேயப் பயன்படும் சுடப்பட்ட மண் பொருள்.
  3. தோடு

[object Object], [object Object]

ஓட்டு ஓட்டம் ஓடி ஓடுதளம் ஓடுபாதை ஓடுகாலி ஓட்டுவீடு திருவோடு மண்டையோடு

Winslow (1862)

ஓடு (ōṭu) — noun
  1. The shell of an animal, ஆமைமுதலியவற்றினோடு
  2. The shell of a nut, a pod, an egg, வித்துமுதலியவற்றினோடு
  3. A tile, தட்டோடு
  4. A piece of broken earthen ware, உடைந்தபானையோடு
  5. A skull, மண்டையோடு
  6. A mendicant's vessel for receiving alms, being commonly a shell or sherd, இரப்போர்கலம்
  7. (fig.) Length, extension, நீளம். கேடுகாலத்துக்கு ஓடுகப்பறை. In time of distress a sherd may serve for an eating vessel; i. e. in time of need any thing will do
  • ஓடன் — A tortoise, ஆமை. (M. Dic.)
  • ஓடுபரப்ப–ஓடுமூட–ஓடுவேய — To tile, cover with tiles.
  • ஓடுபிரிக்க — To take the tiles from a house.
  • ஓடுமாற்ற–ஓடுதிருப்ப — To turn the tiles of a house.
  • ஓட்டடை–ஓட்டப்பம் — A pan- cake.
  • ஓட்டடைசுடுதல் — Frying a pan-cake.
ஓடு (ōṭu)
  1. A form of the third case or social ablative; i. e. with, together with–having sometimes an instrumental application, மூன்றனுருபு. வீட்டோடிருக்கிறான். He is at home
  2. He is unemployed. வில்லோடுபொருதான். He fought with a bow. ஏன்னோடுவியாபாரஞ்செய். Be partner with me in merchandise
ஓடு (ōṭu) — verbal noun
  1. , கிறேன், ஓடினேன், வேன், ஓட, v. n. To run, flee, flee away, pass quickly, விரைந்துசெல்ல
  2. [used with the impers. terminations.] To grow long, extend, be long, go far, நீள
  3. To divide, split, crack, வெடிக்க. ஓடவுமாட்டான் பிடியுங்கொடான். He will neither run, nor suffer himself to be caught. அவனுக்குஏழுத்துநடையோடாது. He cannot read freely. ஊரோடுகையிலொக்கவோடு. Run when your fellow-countrymen do; i. e. do as others do. வேரோடுகிறது. The root runs (into the ground). கப்பலோடுகிறது. The ship is sailing, is under sail
  • ஓடவைத்தல் — Refining metals, புடம்வைத்தல். இழிவினோடொன்றிநின்றவாடகத்தையோடவைக்குமாறுபோல். As refining gold spoiled by mixture with the same metal of inferior quality. (பார.)
  • ஓடவைத்தபொன் — Refined gold.
  • ஓடாணி — [in jewelry.] A pin or bolt passed into an ornament as a fastening, ஆபரணக்கடைப்பூட்டு.
  • ஓடித்திரிய — To run about. 2. To assume airs. 3. To take great pains, &c., to attain an object.
  • ஓடிப்படர — To run and spread as a creeper.
  • ஓடிப்பிடிக்க — To overtake in running.

Fabricius (1972)

ஓடு — noun
  1. a potsherd, கல்லோடு
  2. tile, தட் டோடு
  3. skull, மண்டையோடு
  4. a pod, the shell of a nut, an egg etc
  5. mendicants' vessel, திருவோடு
  • ஓடுபிரிக்க — to remove tiles from a house.
  • ஓடுபோட–பரப்ப–வேய — to cover with tiles.
  • ஓடுமாற்ற–திருப்ப — to turn the tiles of a house.
  • ஓட்டடை–ஓட்டப்பம் — a pancake.
  • ஓட்டாங்கிளிஞ்சில் — broken oyster shells.
  • ஓட்டாண்டி — a mendicant; 2. a destitute man.
ஓடு
  1. sign of the 3rd case, the social ablative, with, together with.
  • புருஷனோடு வாழுகிறாள் — she lives with her husband.
  • மரத்தை வேரோடு வெட்டினான் — he cut out the tree from the root.
  • கட்டோடு — entirely.
ஓடு — v. i.
  1. v. i. run, sail, pass quickly, flee, விரைந்துசெல்
  2. extend, grow long, நீளு
  3. happen, occur. சம்பவி, as in "இவளுக்கோடுகிற நோவும்"; be determined, resolved, தீர்மானிக்கப்படு
  4. be dismantled, குலை
  5. go, as a watch; pass as time; to sail, செல்லு
  • வோரோடுகிறது — roots run into the ground.
  • கப்பல் ஓடுகிறது — the ship sails or is under sail.
  • ஓடாணி — a pin or bolt for fastening the parts of a jewel.
  • ஓடிப்பிடிக்க — to overtake in running.
  • ஓடிப்போக — to run away, to fly off.
  • ஓடியாடிப்பார்க்க — to go about, to endeavour.

Tamil Moli Akarathi (1928)

ஓடு (ōṭu)
  1. ஆமைமுதலியவற்றினோடு, இரப் போர்கலம், உடைந்த மண்பாண் டம், ஓடென்னேவல், கொட்டை களினுறை, நீளுதல், மூன்றனுருபு, வீடுவேயு மோடு
ஓடு (ōṭu)
  1. ஓடு, ஓடென்னேவல், நீளுதல், வே ற்றுமையுருபு, (உ.ம்.) சாத்தனோடு வந்தான்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஓடு² (ōṭu) — noun
  1. Shell, as of a tortoise, of an egg; ஆமைமுதலிய வற்றினோடு
  2. Hard outer covering, as of a nut; பழம்முதலியவற்றின் தோடு. ஓட்டி னொட்டாப் புளிம் பழம் (தணிகைப்பு. நந்தியு. 149)
  3. Roofing tile; வீடுவேயும் ஓடு
  4. Piece of broken earthenware; potsherd; மட்பாத்திரவுடைசல். குடமுடைந் தாலவையோடு (திருமந். 158)
  5. Earthen vessel; மட்பாத்திரம். புத்தோடு தண்ணிர்க்குத் தான்பயந் தாங்கு (நாலடி, 139)
  6. Brick; செங்கல். தளியெடுப்ப தற்கு ஓடுசுடக்கொண்ட நிலம் (S. I. I. i, 150)
  7. Skull; மண்டையோடு. என்னோட்டெழுத்தோவிது (பாரதவெண். வாசுதேவன்றூ. 16)
  8. Mendicant's bowl for receiving alms, as a potsherd; இரப் போர்கலம். நீசர் மனைதொறு மோட்டிரந் துழல்கை (ஞானவா. முமுட்சு. 15)
ஓடு³ (ōṭu) — part
  1. With, together with, sign of the instrumental case; மூன்றனுருபு. (தொல். சொல். 74, உரை.)

IndoWordNet

ஓடு — noun
  1. வீடுகளுக்குக் கூரையாகப் பயன்படுத்தும் சிறு பலகை போன்ற சுட்ட மண் துண்டு.
ஓடு — verb
  1. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லுதல்
ஓடு — verb
  1. மனிதன், விலங்கு ஆகியவை கால்களை வேகமாக முன்னோக்கி எடுத்து வைப்பதன் மூலம் நடப்பதை விட விரைந்து செல்லுதல்.
ஓடு — verb
  1. ஒரு பெண்ணோடோ அல்லது மனைவியுடோ ஓடுதல்
ஓடு — verb
  1. ஒரு முயற்சியில் அங்கும் இங்கும் சுற்றுதல்

கலைப்பொருள்கள் கூரை போ செல் விலகு உடன்செல் வேலைசெய் வேலை செய் மறைந்துபோ நட நிகழ் முன்னேறிச் செல் மோகியா