கதி

implement (கருவி என்னும் பொருளில் வரும்போது மட்டும் ) 1. விரைதல்; to hasten, move rapidly,

motion, movement speed way, path

Tamil Wiktionary

கதி
  1. 1. விரைதல்;
  2. to hasten, move rapidly,
  3. அரியேறு கதித்த்து பாய்வதுபோல்(கம்பரா.பஞ்சசே. 56);.
  4. 2. நடத்தல் (வின்.);;
  5. to go, move proceed.
  6. 3. எழுதல் (பிங்.);;
  7. to rise, to be high, to grow high; to start.
  8. 4. நற்கதியடைதல்;
  9. to attain final bliss.
  10. கதிப்பவ ரில்லை யாகும்(சி.சி.146 சிவஞா.);
  11. 5. பருத்தல்;
  12. to become large, to grow big.
  13. கதித்தெழுந்த தனம்". (தஞ்சைவா. 235);,
  14. 6. மிகுதல்;
  15. to abound.
  16. மல்கதிக்க(இரகு. நகரம் 74);.
  17. 7. ஒலித்தல்;
  18. to sound.
  19. க. கதெ; தெ.கதி.
  20. [கது → கதி. கதித்தல் விரைதல் (முதா.58); ஒ.நோ. கதழ்தல் அசைதல், நடத்தல்.]
  21. 1. நடை;
  22. movement.
  23. 2. இயக்கம்;
  24. motion.
  25. 3. விரைவு;
  26. swiftness, rapiditly.
  27. கதிகெழு களிறு (கந்தபு.திக்.35);.
  28. 4. குதிரை நடை;
  29. pace of a horse.
  30. ஈரிரு கதியு முண்டாங் குலப்பரி யினங்கள்(திருவாத. திருப்பெரு. 114);.
  31. [கது → கதி. கதித்தல் விரைதல். கதி விரைவு, வேகம்.]
  32. 1. வழி ;
  33. way, path.
  34. கதிநடந் திளைத்த செங்கமலம் பற்றுவோம்(செவ்வந்திப்பு. தாயான. 25);
  35. 2. புகலிடம்;
  36. refuge.
  37. எனக்கினிக் கதியென் சொல்லாய் (திவ்.திருமாலை,30);.
  38. 3. அமர ருலகு;
  39. heaven, final beatitude, deliverance from further births, absorption into the deity.
  40. காதலும் வெறுப்பு நீங்கிக் கதிவிழைந் திருக்கின்றோம்(குற்றா.தல. திருமால். 60);.
  41. 4. நிலை;
  42. state, condition.
  43. அவன் கதி என்ன வாயிற்று? (உ.வ.);
  44. 5. உயிர்கள், தேவகதி, மக்கட்கதி, விலங்குகதி நரககதி என நான்கு நிலைகளாக எடுக்கும் பிறப்பு (சீவக. 374. உரை.);;6. ஆற்றல்;
  45. ability, means,
  46. கொடுக்கக் கதியில்லை (உ.வ.);.
  47. [கது → கதி.]
  48. 1. பற்றுக்கோடு;
  49. support.
  50. 2. நிலைமை, இயல்பு;
  51. nature, quality, character,
  52. யானை முழக்கங் கேட்ட கதியிற்றே(பரிபா 8:17);.
  53. 3. ஆகூழ் (வின்);,
  54. luck, fortune,
  55. 4. படலம் (பிரபுலிங்);;
  56. section, chapter.
  57. 5. மெய்யியலின் (தத்துவம்); அடிப்படைக் கோட்பாடுகள்;
  58. true principles or elementary properties according to sankhya philosophy.
  59. முதலிரு பத்தைந் தாங்கதி(பிரபுலிங் துதி. 13);.
  60. 6. கருவி;
  61. means, instrument.
  62. உலகிற் றிரியுங் கரும கதியாய் (திவ். திருவாய். 6,9,7);.
  63. [கது → கதுவுதல் பற்றுதல். கது → கதி பற்றுக்கோடு, தாங்குதல் உற்ற துணை.]
  64. 1. நேர்;
  65. straight.
  66. 2. செம்மை, செப்பம்;
  67. correct.
  68. 3. ஒழுங்கு;
  69. regularity.
  70. மரா; சிந். சீதே; Turkh kader.
  71. [குத்து → குது குது கதி.]
  72. பகுப்பு:பெயர்ச்சொற்கள்

[object Object]

Winslow (1862)

கதி (kati) — noun
  1. Progression, locomotion, tendency, நடை
  2. A way, path, வழி
  3. Gait, pace, போக்கு
  4. Swiftness, rapidness, fleetness, விரைவு
  5. The five paces of a horse, குதிரைநடை. (See துரகம்.)
  6. Stage or degree, நிலை
  7. Condition, state or mode of existence, embracing the four divisoins of living beings or stages through which the soul may pass, நால்வகைப்பிறப்பு, viz.:
  8. Celestials, தேவகதி
  9. Human, மக்கட்கதி
  10. Infrahuman; i. e. inferior animals, விலங்கின்கதி, and
  11. Infernals, நரககதி
  12. The procession of the planets in their orbits, கிரகநடை
  13. Pecuniary ability, wealth, ஐசுவரியம்
  14. Luck, fortune, uncontrollable events, fate, அதிட்டம்
  15. Exemption from future births, final beatitude, absorption of the soul in the deity, பரமகதி
  16. Refuge, asylum, அடைக்கலம்
  17. Section, chapter, படலம்
  18. Strength, ability, திராணி. Wils. p. 279. GATI. (p.) கொடுக்கக்கதியில்லை. There exist no means of payment
  • கதிமாற — To pass from one mode of existence into another, பிறவிமாற.
  • கதியற்றவன்–கதிகெட்டவன் — An impoverished man, or disabled person.
  • கதியுள்ளவன் — An able, powerful, rich man.
  • கதிவிட — To ride a horse swiftly in any of the five paces.
  • ஐங்கதி — The five paces which horses are taught. See துரககதி.
  • அவரோகணகதி — Descent, downward tendency–opp. to ஆரோகணகதி.
கதி (kati) — noun
  1. , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To go, move, proceed, நடக்க
  2. To rise, be high, grow high, ஏழ
  3. To be excessive, மிக
  4. To sound, ஒலிக்க
  5. To exceed in quality, weight, &c., to out-weigh, preponderate, surpass, predominate, augment in degree, quantity, price, &c.; to increase in learning, &c.; to be superior, be better, &c.; to outdo, outstrip, outmatch, கடக்க. இதுகதிக்கிறது. This is more, greater, heavier, &c., than that. அவர்கதித்துப்பேசுகிறார். He talks too much, above his rank, too assumingly
  • கதித்தபங்கு — A larger share.
  • கதித்தபுகழ் — High swelling praise.
  • கதித்தவிலை — A high price. 2. A higher price. 3. An exorbitant price.
  • கதித்தல் — An increase. 2. (p.) The act of sounding. (சது.)
  • கதிப்பு — Excess, increase, thickness, eminence, &c., augmentation, preponderance.
  • கதிமை — Largeness, greatness, ability, பருமை.

Fabricius (1972)

கதி — noun
  1. progression, கடை
  2. way, வழி
  3. gait, pace of a horse, போக்கு
  4. swiftness, விரைவு
  5. condition, state of existence in the present birth, பிறப்பு
  6. ability, wealth, திராணி
  7. happiness, bliss, heaven, salvation, மோட்சம்
  8. support, refuge
  9. section, chapter அதிகாரம்
  • கொடுக்கக் கதியில்லை — he is not able to give; he is too poor to give.
  • காலகதியாய்விட — to die.
  • கதியற்றவன்–கெட்டவன் — an impove- rished or disabled person.
  • கதிபெற — to obtain salvation.
  • கதியுள்ளவன் — a powerful, rich man.
  • பரகதி–பரமகதி — salvation, heavenly bliss.
கதி — v. i.
  1. v. i. go, proceed, நட
  2. rise, grow high, ஏழு
  3. grow thick, out- match, கட
  4. become excessive, increase, மிகு
  5. attain final bliss, நற் கதியடை; v. t. outweigh, exceed in quality, out-match, கட
  6. know, understand, அறி
  • கதிப்பு — eminence, thickness, increase, excess, preponderance.
  • கதிமை–கதுமை — thickness, ability.

Tamil Moli Akarathi (1928)

கதி (kati)
  1. அடைக்கலம், அதிட்டம், ஆதரவு, ஐசுவரியம், கதியென்னேவல் கிரக நடை, குதிரைநடை, திராணி நடை நிலை, படலம், பதவி, பரமகதி பிற ப்பு, புகலிடம் போக்கு, மோட்சம், வழி, விரைவு
கதி (kati)
  1. 4 - தேவகதி, மக்கட்கதி, விலங்கின் கதி, நரககதி
கதி (kati)
  1. உபாயம், கதியென்னேவல், குதி ரை நடை, சரண்புகல், நாற்கதி, பர கதி, வழி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கதி³ (kati) — noun
  1. < gati
  2. Motion, movement; நடை. (பிங்.)
  3. Way, path; வழி. கதிநடந் திளைத்த செங்கமலம் பற்றுவோம் (செவ்வந்திப்பு. தாயான. 25)
  4. Swiftness, rapidity, fleetness; விரைவு. கதிகெழு களிறு (கந்தபு. திக். 35)
  5. Refuge; புக லிடம். எனக்கினிக்கதியென்சொல்லாய் (திவ். திருமாலை, 30)
  6. Heaven, final beatitude, deliverance from further births, absorption into the deity; மோக்ஷம். காதலும் வெறுப்புநீங்கிக் கதிவிழைந் திருக் கின்றோம் (குற்றா. தல. திருமால். 60)
  7. Pace of a horse; குதிரைநடை. (குறள், 814, உரை.)
  8. (Jaina.) Stages of existence, through which the soul may pass, of which there are four, viz. தேவகதி, மக்கட்கதி, விலங்குகதி, நரககதி; உயிரெடுக்கும் பிறப்பு. (சீவக. 374, உரை.)
  9. State, condition; நிலை. அவன் கதி என்னவாயிற்று?
  10. Ability, means; சக்தி. கொடுக்கக் கதியில்லை
  11. Nature, quality, character; இயல்பு. யானைமுழக்கங்கேட்ட கதியிற்றே (பரிபா. 8, 17)
  12. Luck, fortune; அதிட்டம். (W.)
  13. Section, chapter; படலம். (பிரபுலிங்.)
  14. True principles or elementary properties according to Šāṅkhya philosophy. See தத்துவம்¹. பார்க்கதிமுத லிருபத்தைந் தாங்கதி (பிரபுலிங். துதி. 13)
  15. Means, instrument; சாதனம். உல கிற்றிரியுங் கருமகதியாய் (திவ். திருவாய். 6, 9, 7)

IndoWordNet

கதி — noun
  1. சந்தம், கதி

சந்தம் ஞானம் அறிவு