அறிவு

கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு. உணர்வு விவேகம்

knowledge, wisdom intelligence, intellect, reason, brains sense

Tamil Wiktionary

அறிவு — பெயர்ச்சொல் (Noun)
  1. கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு.
  2. மதி
  3. உரம்
  4. ஞானம்
  5. உணர்வு
  6. மேதை
  7. விவேகம்

[object Object], [object Object], [object Object]

அறிவுரை அறிவிலி அறிவாளி அறிவுஜீவி அறிவாற்றல் அறிவொளி அறிவாட்சி சுடர் கொழுந்து அறிவறி அறிவிழ அறிவுபெறு ஓரறிவு ஈரறிவு மூவறிவு நான்கறிவு ஐந்தறிவு ஆறறிவு பகுத்தறிவு பட்டறிவு கற்றறிவு எழுத்தறிவு நுண்ணறிவு கல்வியறிவு படிப்பறிவு எண்ணறிவு பிறப்பறிவு இயல்பறிவு கம் library

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அறிவு (aṟivu) — noun
  1. < அறி-
  2. Knowledge, wisdom; ஞானம்
  3. Intelligence; புத்தி. (குறள், 429.)
  4. Perception by the senses; பொறியு ணர்வு
  5. Soul; ஆன்மா. அறிவுரு வதனோ டநித்த மன்மையின் (ஞானா. 44, 5)
  6. Learning, erudition; கல்வி. (திவா.)
  7. Things which it is necessary to know; அறியவேண்டியவை. (குறள், 61.)

Winslow (1862)

அறிவு (aṟivu) — noun
  1. Knowledge, wisdom, learning, science, erudition, one of the four ஆடூஉக்குணம், ஞானம்
  2. Intelligence, intellect, reason, புத்தி
  3. Feeling, perception, comprehension, உணர்வு
  4. The senses as the medium of knowledge or knowledge acquired by them, பொறியுணர்வு
  5. Instruction, advice, போதனை. (c.)
  • அறிவழி — Toddy or other inebriating liquor, கள். 2. A devil, பிசாசம்; [ex அழி, to ruin.] (p.)
  • அறிவழிய — To lose one's reason, be bereft or sense, be under a delusion, be infatuated.
  • அறிவறை — One destitute of spiritual knowledge. 2. Destitution of spiritual knowledge, delusion, infatuation, illusion; [ex அறை, bereft.] (p.). அறிவறைபோயினர். They became bewildered.
  • அறிவன் — A wise man, a skilful or learned person, அறிவுடையோன். 2. An artificer, கம்மாளன். 3. The planet Mercury, புதன். 4. The twenty-sixth lunar mansion, உத்திரட்டாதிநாள். 5. The planet Mars, செவ்வாய். 6. God, கடவுள். 7. Argha, அருகன். 8. Vishnu, விட்டுணு. 9. Siva, சிவன். (p.)
  • அறிவனாள் — The twenty-sixth lunar mansion.
  • அறிவாகரன் — A person of profound erudition; [ex ஆகரம், seat.] (p.)

Tamil Moli Akarathi (1928)

அறிவு (aṟivu)
  1. அறிதல், ஆடுஉக்குணம், நான்கி னொன்று, உணர்வு, கல்வி, புத்தி, போதனை
அறிவு (aṟivu)
  1. உணர்வு, உண்மை, உரன், உறழ் வு, ஒண்மை, ஓதி, காட்சி, சேதனம், சைதன்னியம், ஞாபகம், ஞானம், தீ, துப்பு, தெருட்சி, தெளிவு, புத்தி புந்தி, புலன், பொறி, போதம், மதி, மேதை, விவேகம், அன்றியும், பேர றிவு, முகரிமை முதுக்குறைவு
அறிவு (aṟivu)
  1. அறிதல், கல்வி

IndoWordNet

அறிவு — noun
  1. அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.
அறிவு — noun
  1. அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாகப் பெற்றத் தெரிந்துவைத் திருப்பது.
அறிவு — noun
  1. அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.
அறிவு — noun
  1. ஞானம், அறிவு
அறிவு — noun
  1. அனுபவம், சிந்தனை, கல்வி, போன்றவற்றின் மூலமாகப் பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.

ஞானம் புத்தி மதி விவேகம் சித்து மதிநுட்பம் புத்திநுட்பம் அனுபவம் பக்குவம் தெரிந்தவை நினைவு ஞாபகம் நனவு நினைப்பு ஓர்மை பிரஞ்ஞை ஆத்மஞானம் ஆத்துமவிவேகம் நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை மனக்கூர்மை மனத்தெளிவு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அறிவு
  1. ஞானம்
  2. புத்தி
  3. பொறியுணர்வு
  4. அறிய வேண்டியவை
  5. கல்வி
  6. ஆன்மா