கம்பளம்
Carpet
Winslow (1862)
கம்பளம் (kampaḷam) — noun
- Woolen or hair cloth, கம்பளி. Wils. p. 190. KAMBALA
- The name of a country, ஓர்நாடு
- A red cloth or carpet, செவ்வாடை
- A ram of the fleecy kind, &c., துருவாட்டேறு
- A ram, செம்மறிக்கடா
- கம்பளர் — Inhabitants of agricultural districts, husbandmen, மருதநிலமாக்கள். 2. The inhabitants of the கம்பளம் country, கம்பளநாட்டார்.
- ரத்தினக்கம்பளம் — A carpet richly variegated.
Fabricius (1972)
கம்பளம் — noun
- கம்பலம், s. woollen cloth, wool, blanket, carpet, கம்பளி
- the Thottiya caste
- a fleecy ram, செம் மறிக்கிடா
- கம்பளர்–கம்பலை — men of the Thottiya caste; 2. inhabitants of agricultural districts (derived probably from ).
- ரத்தினக் கம்பளம் — a carpet of divers colours.
Tamil Moli Akarathi (1928)
கம்பளம் (kampaḷam)
- கம்பளி, செவ்வாடை, மேற் கட்டி
கம்பளம் (kampaḷam)
- ஒருநாடு, கம்பளி, செம்மறிக்க டா, செவ்வாடை, துருவாட்டேறு
கம்பளம் (kampaḷam)
- கம்பளி, செம்மறிக்கடா, செவ் வாடை, துருவாட்டேறு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கம்பளம்¹ (kampaḷam) — noun
- < kambala
- Woollen shawl; blanket; கம்பளிப்போர்வை
- Red cloth; செம்படாம். (திவா.)
- Woollen rug to be spread on the floor; மயிர்ப்படாத்தாலாகிய ஆசனம். இந்திரன் பாண்டுகம்பளந் துளக்கியது (மணி. 14, 29)
- The Toṭṭiya caste; தொட்டியசாதி. கம்பளவல்லக்கர் குலன் (தனிப்பா. i, 339, 51)
- Ram of the fleecy kind; செம்மறிக் கடா. (சூடா.)
கம்பளம்² (kampaḷam) — noun
- Squash Gourd, See சர்க்கரைப்பூசணி. Loc.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கம்பளம்
- ஆட்டுமயிரினாற் செய்யப்பட்ட போர்வை முதலியன
- கம்பளிப் போர்வை
- செவ்வாடை
- செம்மறிக்கடா
- மயிர்ப்படாத் தாலாயெ இருக்கை
- தொட்டியச் சாதி
- சருக்கரைப் பூசணி