சிவன்

மும்மூர்த்திகளுள் ஒருவரான சங்காரக்கடவுள் சிவபத்தர்க்கு வழங்கிய சிறப்புப்பெயர் வைடூரியம் ()

Shiva a male given name, Sivan or Shivan, from Sanskrit

Tamil Wiktionary

சிவன்
  1. மும்மூர்த்திகளுள் ஒருவரான சங்காரக்கடவுள்
  2. சிவபத்தர்க்கு வழங்கிய சிறப்புப்பெயர்
  3. வைடூரியம் ()

Winslow (1862)

சிவன் (civaṉ) — noun
  1. A precious stone, cat's eye, வைடூரியம். (M. Dic.)
சிவன் (civaṉ) — noun
  1. Siva, the third of the Indian Triad, in the character of destroyer, or reducer of things to their primitive atoms. By his votaries he is considered the supreme god. the other deities being subject to him, சங்கரன்.
  • சிவகணம் — The attendant demigods of Siva, commonly in companies, சிவன் சேனை.
  • சிவசமயம் — The Siva religion.
  • சிவசிந்தை — Divine contemplation, meditation on Siva–as சிவத்தியானம்.
  • சிவஞானசித்தியார்–சிவஞானசித்தி — A commentary on சிவஞானபோதம். See சித்தியார்.
  • சிவஞானபோதம் — A celebrated work consisting of twelve rules translated from the ரௌரவம், or the sixteenth Agama, being almost the only part of the Agamas known in Tamil. It is regarded as divine, without origin, and as not to be read unless the person has attained a competent degree in the religion. Other works–as சித்தியார், சிவப்பிரகாசம், தத்துவப்பிரகாசம், &c., are commentaries on this or other treatises in support of its doctrines, ஓராகமநூல்.
  • சிவஸ்தலம்–சிவஸ்தானம்–சிவதலம் — Temples, places, &c., sacred to Siva; Saiva temples.

Fabricius (1972)

சிவன் — noun
  1. Siva, the third in the order of the Hindu Triad, the destroyer, சங்காரன்.
  • சிவசமயம் — the Siva religion.
  • சிவசன் — Sukra, as born of Siva.
  • சிவசிவ — an exclamation of pity.
  • சிவசின்னம் — emblems of Saiva religion.
  • சிவஸ்தலம் — temples or places sacred of Siva.
  • சிவஞானம் — knowledge of God.

Tamil Moli Akarathi (1928)

சிவன் (civaṉ)
  1. கடவுள், சங்கரன், வைடூரியம், தி ரிமூர்த்திகளுளொருவரென்று விஷ் ணுபுராணங்களும், அம்மூவரையும் அதிஷ்டித்து நிற்கும் பரப்பிரமமெ ன்று சைவபுராணங்களும் கூறும் சிவன் ஏன்னுஞ் சொல்லுக்கு மங்கள ரூபி ஏன்பது பொருள்,சிவனை முழு முதற் கடவுளாகக் கொண்டு வழி படுவோர் சைவரெனப்படுவர்.அவர் கள் சமயம் சைவசமயமெனப்படும்
  2. பதினெண் புராணங்களுள்ளே சிவ பரமாகவுள்ள புராணங்கள் பத்து, சிவனை வழிபாடுவோர்க்கு ஆதாரமா கிய நூல்கள் சிவாகமங்களாம்.அவை இருபத்தெட்டு, சிவன்ரூபமும் அரூ பமம் ரூபா ரூபமும் ஆகிய மூன்று திருமேனிகளுடையர், அரூபத்திரு மேனியோடு கூடியவிடத்துச் சிவ னென்றும், ரூபாரூபத் திருமேனி யில் சதாசிவமூர்த்தியென்றும், ரூப த்திருமேனியில் மகேசுவரனென்றும்
  3. சொல்லப்படுவர்
  4. பிரமனை சிருஷ்டி கர்த்தாவென்றும் விஷ்ணுவை ரக்ஷக கர்த்தாவென்றும் வைதீகர்யாவரும் கூறு வர்
  5. சங்காரகிருத்தியம் சிருஷ்டிஸ்தி திகளுக்கு ஏதுவாகக் செய்யப்படுவ தல்லது நாஸ்தியாக்கும் பொருட்ட ன்று
  6. ஆதலால் சங்கார கிருத்தியத் தில் மற்றை இரண்டு கிருத்தியங்க ளும் அடங்கும்
  7. அடங்கவே சங்கார கர்த்தாவே மற்றை இருவரையும் அதிஷ்டித்து நின்றுநடாத்தும் முழு முதற் கடவுளென்பார்கள்
  8. விருஷ பத்துவசன், உமாபதி, சர்மவாசன், நந்திவாகனன், சூரி, கபாலமாலா தரன், சர்ப்பகுண்டலன், கால காலன், நீலகண்டன், கங்காதரன், திரிநேத்திரன்,சந்திரசேகரன், திரி புராந்தகன் முதலிய அநந்த நாமங் கள் பெருவர்
  9. லோககண்டகாரகிய திரிபுராசுரரைச் சங்காரஞ்செய்தரு ளினமையால் திரிபுராந்தகன் ஏனப் படுவர்
  10. திருபுரதனகஞ்செய்யப்பட்ட போது பூமியை இரதமாகவும் சூரிய சந்திரர்களை இரதசக்கிரங்களாகவும், வேதங்களைக் குதிரைகளாகவும், பிர மனைச் சாரதியாகவும், மேருமலையை வில்லாகவும், சாகரத்தை அம்புக்கூ டாகவும், விஷ்ணுவை பாணமாகவும் கொண்டு சென்றார்
  11. இவ்விஷயத்தி லே அத்தியற்பு தத்துவார்த்தம் அ டங்கி யிருக்கின்றது
  12. அதனை ஈண்டு விரிப்பிற் பெருகும்
  13. பிரமவிஷ்ணுக் களது கபாலத்தை மகா கற்பாந்த ரங்களிலே தரித்து தனித்துநின்று ஆநந்தத் தாண்டவஞ் செய்தலால் கபாலமாலாதரன் ஏன்னும் நாமம்பெ றுவர்.சிவன் மூன்றுகண்கள் உடை யார்,ஒன்று நெற்றியிலுள்ளது, அத னால் கண்ணுதல் ஏனப்படுவர்
  14. இந் தக் கண்ணினாலே காமதகனஞ்செய் தாராதலின் காமநாசன் காமாரி முத லிய நாமம்பெறுவர்
  15. பகீரதன் தன் பிதிரரை சுவர்க்கஞ்சேர்க்கும் பொ ருட்டுப் பெற்ற கங்கையின் பிரவாக வேகத்தைச் சடைக்கொழுந்து ஒன் றினால் அடக்கினமையால் கங்கா தரன்கங்கைவேணியின் முதலியநாம ங்களைப் பெறுவர்
  16. திருப்பாற் கடல் கடைந்தகாலத்தில் அதில் தோன்றி னவிஷத்தைக்கண்டத்தில் அடக்கித் தேவரைக்காத்தருளினமையால் நீலகண்டன், காளகண்டன் முதலி ய நாமங்களைப் பெறுவர்
  17. அந்தக்கால த்திற்றானே உண்டான சந்திரசே கரன், சந்தரமௌலி முதலிய நாமங் களைப் பெறுவர்
  18. மார்க்கண்டனைகாக் கும்பொருட்டு யமனை உதைத்தரு ளினமையாலும் காலவரையறைக்கப் படாத அனாதி நித்தியராதலினாலும் காலகாலன் காலாந்தகன் முதலிய நாமங்களைப்பெறுவர்
  19. இந்தச் சிவபி ரானை மகாலிங்கம் அர்த்தநாரீசுவரர்
  20. நடேசர் முதலிய இருபத்தைந்து மூர்த்தத்திலே தியானித்து வழிபடு வர்
  21. இவருக்குச் சத்தி உமாதேவி யார் ஏனப்படுவர்
  22. இருபத்தைந்து மூர்த்திகளாவார், லிங்கமூர்த்தி, சுகாசனமூர்த்தி, உமா சகமூர்த்தி, கல்யாணசுந்தரமூர்த்தி, அர்த்தநாரீசுவரமூர்த்தி, சோமாஸ் கந்தமூர்த்தி, சக்கரப்பிரதானமூர்த் தி, திதிமூர்ததி, அர்த்தாங்கவிஷ்ணு மூர்த்தி, தக்ஷிணாமூர்த்தி, பிக்ஷாடன மூர்த்தி, கங்காளமூர்த்தி, காமசம் ஹாரமூர்த்தி, காலாரி ஜலந்தராரி
  23. திரிபுரசம்ஹாரமூர்த்தி, சரபமூர்த் தி, ஏகபாதமூர்த்தி, வைரவமூர்த்தி, விருஷபாரூடமூர்த்தி, நடராஜமூர் த்தி, கங்காதரமூர்த்தி, அக்குரூரன் தம்பி
சிவன் (civaṉ)
  1. உருத்திரன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிவன்¹ (civaṉ) — noun
  1. < Šiva
  2. One of the great gods, the third of the Hindu triad, whose special function is Destruction; மும்மூர்த்திகளுள் ஒருவரான சங்காரக்கடவுள்
  3. Title of Šaiva devotees; சிவபத்தர்க்கு வழங்கிய சிறப்புப்பெயர். கயிலாயன் ஆரூரான் தர்ம்மசிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி (S. I. I. ii, 254)
சிவன்² (civaṉ) — noun
  1. Cat's-eye, a variety of quartz; வைடூரியம். (மூ. அ.)

IndoWordNet

சிவன் — noun
  1. இநது மதத்தில் அழித்தல் தொழிலுக்குறிய கடவுள்

இறைவன் கடவுள் தெய்வம் சுவாமி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சிவன்
  1. மும்மூர்த்திகளுள் ஒருவரான அழிக்கும் கடவுள்
  2. சிவனடியார்க்கு வழங்கிய சிறப்புப் பெயர்