கடவுள்

கடவுள் பாக்தியூடையவார் கட + உள் : க்அட்அ + வ் + உள் கடவுள் தமிழர் : முன்னோர்களை இறைவனாக வழிபடும் பொருட்டு கடவுள் என்ற சொல் பயன்படுகிறது.

God, Supreme Being god, deity celestial being

Winslow (1862)

கடவுள் (kaṭavuḷ) — noun
  1. The Deity, the Supreme Being, தெய்வம்
  2. A god, a demigod, வானவன்
  3. A sage, முனிவன்
  4. A guru, குரு
  5. Goodness, நன்மை; [ex கட, surpassing, or கடம், bounded in, or by whom all are bound, the all-comprehensive being by whom universal nature is bounded.]–Note. Some philologists identify this word with the Anglo-Saxon word, God
  • கடவுட்பணி — The serpent ஆதிசேடன். 2. Divine service, கடவுளூழியம்.
  • கடவுட்பாம்பு — Demigod of a serpent race supposed to support the earth, ஆதிசேடன்.
  • கடவுண்மூர்த்தி — Argha, the deity worshipped by the Jainas, அருகன்.
  • கடவுளர் — The gods, வானவர்.
  • கடவுளர்தாரம் — A medicinal tree, தேவதாரம், Sethia Indica, L. (M. Dic.)
  • கடவுள்வணக்கம் — Invocation addressed to a god or the gods at the commencement of a treatise, மங்களாசரணை மூன்றினுளொன்று. 2. Worship of the Deity, தெய்வத்தைவணங்குகை.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கடவுள் (kaṭavuḷ) — noun
  1. God, who transcends speech and mind; இறைவன். (பிங்.)
  2. Celestial Being; வானவன். கடவுள ரதனை நோக்கி (கந்தபு. தாரக. 59)
  3. Sage; முனிவன். தொன்முது கடவுட்பின்னர் மேய (மதுரைக். 41)
  4. Guru, spiritual preceptor; குரு. (பிங்.)
  5. Goodness, auspiciousness; நன்மை. கடிமண மியற்றினார் கடவு ணாளினால் (சீவக. 1490)
  6. Divine nature; தெய்வத்தன்மை. கடவுட் கடிஞையொடு (மணி. 15, 57)

Fabricius (1972)

கடவுள் — noun
  1. (கட, surpassing + உள்) God, the Supreme Being
  2. sage
  3. guru
  • கடவுணதி–கடவுள்–நதி — (+) the river Ganges (of divine origin).
  • கடவுள் வணக்கம்–வாழ்த்து — an invo- cation to God added at the commencement of a treatise.
  • கடவுட்பணி–கடவுள்–பணி — ( + ), service to God; 2. Adisesha, the king of serpents.
  • கடவுட்பள்ளி — a Buddist temple.
  • கடவுளர்–வானவர் — the celestials, .

Tamil Moli Akarathi (1928)

கடவுள் (kaṭavuḷ)
  1. குரு, தெய்வம், நன்மை, முனி வன், வானவன்
கடவுள் (kaṭavuḷ)
  1. அகண்டாகண்டன், அகநிலை, அகாரி, அசலன், அச்சயன், அச்சுத ன், அடிகள், அதிகுணன், அமலன், அருட்குடையோன், அருளாழி, வே ந்தன், அரூபி, அறக்கொடியோன், அறவாழி மன்னன், அறுகுணன், அனகன், அனந்தஞானி, அனந்த லோசனன், அனந்தன், அனாதி, ஆதி, ஆதிபுங்கவன், இறையோன், ஈசன், ஈச்சரன், ஈறிலி, உள்வழி, கடந்தோ ன், உள்ளத்துறைவோன், ஏண்குண த்தோன், ஏகதேவன், ஏகன், ஐ, ஐம்பு லத்தடங்கான், கருணாலயன், கருத்தா குணநிதி, குணபத்திரன், சகநாதன், சகலவியாபி, சச்சிதானந்தன், சதாநந் தன், சுயம்பு, சருவேச்சுவரன், சாமி, சீபதி, சோதி, கற்பரன்தனிக்கோலா ன், தாபரன், தேவன், தேவாதிநாய கன், நிதானன், நித்தன், நிமலன், நிரஞ்சனன், நிரந்தரன், நிரம்பன், நிராமயன், நிருநாமன், நிருமலன், நிரூபன், நீதிபரன், பகவன், பகாக் பொருள், பரஞ்சோதி,பரதுக்கதுக் கன், பரப்பிரமம், பரமம், பரமேச்சுர ரன், பரம், பராபரம், பிதா, பிரமம், பிரான், பிறப்பிறப்பில்லான், புங்க வன், பூரணன், மயேச்சுரன், மாசே னன், முக்குற்றங் கடிந்தோன், முத லோன், முத்தொழிற் பகவன், முழு தொருங் குணர்ந்தோன், முன்னூற் கேள்வன், முன்னோன், மூவுலகாதா ரன், மூவுலகாளி, மூவுலகேந்தி, விதி த்தோன், விமலன், வினை விநாசன், வேதன், வேதா, வேதாந்தன், வே தார்த்தன்

IndoWordNet

கடவுள் — noun
  1. உலகம், உயிர் ஆகியவற்றின் தோற்றத்திற்கு காரணமாகக் கருதப்படும் மனித ஆற்றலால் அறிய முடியாத படி இருப்பதாக நம்பப்படும் மேலான சக்தி.
கடவுள் — noun
  1. சர்வ வல்லமை உடைய எல்லோராலும் வழிபடக்குடியவராக இருப்பவர்
கடவுள் — noun
  1. ஒரு கோயிலைக் குறிப்பிட்டுச் செல்லும் போது எழுந்தருளியிருக்கும் ஆண்டவன்.
கடவுள் — noun
  1. உலகம், உயிர் ஆகியவற்றின் தோற்றத்துக்குக் காரணமாகவும் மனித ஆற்றலால் அறிய முடியாதபடி இருப்பதாகவும் நம்பப்படும் மேலான சக்தி

தெய்வம் இறைவன் சாமி தேவன். ஆண்டவன் கிருஷ்ணன் அல்லா ஹரிஹரன் நரசிம்மர் நிர்குண பிரமம் சற்குண பிரமம் சுவாமி பழங்கால நபர் புராணக்கால நபர் காமதேவன் காமன் அனுமன் ஆஞ்சநேயர் சிவன் புவன் விஷ்ணு திருமால் பெருமாள் பிரம்மா நான்முகன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கடவுள்
  1. இறைவன்
  2. வானவன்
  3. முனிவன்
  4. குரு
  5. நன்மை
  6. மேன்மை
  7. தெய்வத்தன்மை