இறைவன்

Winslow (1862)

இறைவன் (iṟaivaṉ) — noun
  1. The supreme Being, Lord, கடவுள்
  2. Siva, சிவன்
  3. Brahma, பிரமன்
  4. King, an emperor, governor, அரசன்
  5. A chief, a lord, master, a superior, senior, தலைவன்
  6. A father, தந்தை
  7. Priest, குரு
  8. Elder brother, மூத்தோன். (p.)
  • இறைவி — A queen, அரசி. 2. A lady, a mistress, தலைவி. 3. Mother, அன்னை. 4. A priest's wife, குருவின்மனைவி.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இறைவன்¹ (iṟaivaṉ) — noun
  1. God, the all-abiding; எப்பொருளிலுந் தங்குதலுடைய கடவுள். (சிலப். 10, 184, உரை.)
இறைவன்² (iṟaivaṉ) — noun
  1. < இறை¹
  2. Chief, master, superior; தலைவன். இவ்வூ ரிறைவனை யிழந்து (சிலப். 22, 144)
  3. Supreme God; கடவுள். இறைவன் மலரடி (பாரத. இராசசூ. 146)
  4. Viṣṇu; திருமால். (குறள், 610, உரை.)
  5. Šiva; சிவன். (பரிபா. 11, 78, உரை.)
  6. Brahmā; பிரமன். (பிங்.)
  7. King; அரசன். இறைவற் கிறை யொருங்கு நேர்வதுநாடு (குறள், 733)
  8. Husband; lord, in relation to a wife; கணவன். நற்புலி தனக் கிறைவன் (திவ். பெரியதி. 2, 3, 5)
  9. Elder, venerable person; மூத்தோன். (திவா.)
  10. Preceptor; குரு. (பிங்.)
  11. Wiry indigo. See சிவனார்வேம்பு. (மூ. அ.)

Fabricius (1972)

இறைவன் — noun
  1. (fem. இறைவி) a king, அரசன்
  2. the Supreme Being, Lord, கடவுள்
  3. a chief, master, தலைவன்
  4. priest, குரு
  • எல்லாம்வல்ல இறைவன் — omnipotent, God.

Tamil Moli Akarathi (1928)

இறைவன் (iṟaivaṉ)
  1. இறையோன்
இறைவன் (iṟaivaṉ)
  1. அரசன், கடவுள், குரு, சிவனார்வேம்பு, சிவன், தலைவன், பிதா, பிரமன், மூத்தவன், ஏப்பொ ருளினுந் தங்குவோன்

IndoWordNet

இறைவன் — noun
  1. உலகம், உயிர் ஆகியவற்றின் தோற்றத்திற்கு காரணமாகக் கருதப்படும் மனித ஆற்றலால் அறிய முடியாத படி இருப்பதாக நம்பப்படும் மேலான சக்தி.
இறைவன் — noun
  1. சர்வ வல்லமை உடைய எல்லோராலும் வழிபடக்குடியவராக இருப்பவர்
இறைவன் — noun
  1. ஒரு கோயிலைக் குறிப்பிட்டுச் செல்லும் போது எழுந்தருளியிருக்கும் ஆண்டவன்.

கடவுள் தெய்வம் சாமி தேவன். ஆண்டவன் கிருஷ்ணன் அல்லா ஹரிஹரன் நரசிம்மர் நிர்குண பிரமம் சற்குண பிரமம் சுவாமி பழங்கால நபர் புராணக்கால நபர் காமதேவன் காமன் அனுமன் ஆஞ்சநேயர் சிவன் புவன் விஷ்ணு திருமால் பெருமாள் பிரம்மா நான்முகன்