செல்

இருக்கும்நிலையிலிருந்து, மற்றொரு நிலைக்கு நகர். செலவு, செல்கை, செல்வாக்கு பகுப்பு:வினைச்சொற்கள், பகுப்பு:தனிவினைச்சொற்கள்

to go to depart, leave to occur

Tamil Wiktionary

செல்

[object Object]

செலவு செல்கை செல்வாக்கு

Winslow (1862)

செல் (cel) — noun
  1. –செல்லு, கிறேன், சென்றேன், வேன், செல்ல, v. n. To go, pass, as water, money, a vehicle, the eye, the mind, &c., போக
  2. To lapse, or expire–said of time, life, &c., கழிய
  3. To be protracted, delayed. procrastinated, நேரஞ்செல்ல
  4. To extend or reach, to arrive at, to gain access to, சேர
  5. to be used up, to be required or wanted for any purpose, ஒழிய
  6. To be current–as a coin, a bill, &c., to be valid as a bond, or a point in law, வழங்க
  7. To be in force, to take, have influence, as one's word, &c., to extend as authority, அதிகாரஞ்செல்ல
  8. To be due to one, appertain to–as a right, தருவதாயிருக்க
  9. To follow–as the passions. அன்புமுதலியனசெல்ல
  10. (in the past tense) To die, சாவ
  11. (with the instrumental ablative.) To be able, possible, practicable, இயல. (c.) செல்லவா. Come by and by, after a time. [prov.] நேரஞ்செல்லவந்தான்-நேரஞ்சென்றுவந்தான். He came late, a little after the time, &c. அவர்சென்றுபோனார். He is dead. முன்னாளில்நபாபுக்குஅதிகாரஞ்சென்றது. At that time the Nabob had power. தவணைசென்றது. The term is expired. அவருடையஆட்டங்களிங்கேசெல்லாது. His influence does not extend here
  12. His tricks will not pass in this place. சிங்காசனமேறல்அரசர்க்குச்செல்லும். It is proper for kings to ascend a throne. அவனுக்குச்செல்லவேண்டியகடன். Debts due to him. அவனுக்கிதுசெல்காலம். It is the time of his influence, power, &c. அங்கேபோகஏத்தனைநாள்செல்லும். How many days will it take to get there? அந்தப்பணம்இங்கேசெல்லாது. That coin will not pass here. அவனுக்குச்சாப்பாடுசெல்லவில்லை. He cannot eat much. ஆயிரம்ஓடுசெல்லும். It will require one thousand tiles. சென்மின். Go ye. (p.)
  • செல்லுஞ்சீட்டு — An authentic hand writing. 2. As செல்லுச்சீட்டு.
  • செல்லுஞ்சுதந்திரம் — Inheritance due.
  • செல்லுஞ்செலவு — Requisite expenses, stores, &c.
  • செல்லுஞ்சொல் — See செல்லும்பேச்சு.
  • செல்லுமதி — A due.
  • செல்காரியம் — The matter in hand.

Fabricius (1972)

செல் — noun
  1. , செல்லு, s. white-ants, கறையான்
  2. (Tel.) endorsement of a bill கையொப்பம்
  3. thunderbolt, இடி
  4. cloud, மேகம்
  • செல்லடிக்க–செல்லரிக்க — to be eaten by white-ants.
  • செல்லு வைக்க — to endorse payment on a bill.
  • ஈசெல்–ஈசல் — white-ants when winged.
செல் — v. i.
  1. , செல்லு, I. v. i. go, pass, போ
  2. lapse, expire, கழி
  3. be current or valid, be good in law, வழங்கு
  4. be due
  5. be required, பிடி
  6. be able, possible, இயல்
  7. (in the past tense) die, சா
  8. arrive at, gain access to
  9. be protracted or delayed
  • அவர் சென்று போனார் — he departed this life, he is dead.
  • இராமன் செல்ல வந்தான்–சென்று வந்தான் — Rama came late, a little after the time.
  • அவனுக்கு இப்போது அதிகாரம் செல்லுகிறது — he is now in power.
  • அவனுக்குச் சாப்பாடு செல்லவில்லை — he cannot eat much, has no appetite.
  • வெகுபணம் செல்லும் — much money will be required.
  • அவன் வர வெகுநாள் செல்லும் — a long time will pass before he comes.

Tamil Moli Akarathi (1928)

செல் (cel)
  1. இடி, உண்டியற்சீட்டு, கறை யான் கையொப்பம், சொல்லென் னேவல், மேகம், வேல்
செல் (cel)
  1. இடி, கறையான், செல்லென் னேவல், மேகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செல்² (cel) — noun
  1. Career, swift course; போகை. செல்லொன்றுகணையால் (கம்பரா. இராவணன்வதை. 15)
  2. Payment of loan; வாங்கியகடனுக்குச் செலுத்திய தொகை. இந்தப் பத்திரத்துக்குச் செல் ரூபாய் ஐம்பது
  3. Loan, debt; கடன். கணக்குப் பார்த்ததில் அவனுக்கு ஆயிரரூபாய் செல் இருக்கிறது
  4. Note of payment; கடன் செலுத்தியதற்குப் பத்திரத்திலெழுதுங் குறிப்பு. கொடுத்த ரூபாயைச் செல் வைத்திருக்கிறதா?
  5. Period that has elapsed; சென்ற காலவளவு. சூரிய புக்தியிற் செல் நான்கு வருஷம்
  6. Cloud; மேகம். (பிங்.)
  7. Sky; ஆகாயம். (அக. நி.)
  8. Thunderbolt; இடி. வான்முழக்குச் செல் (பரிபா. 13, 44)
  9. Javelin; வேல். (அக. நி.)
செல்³ (cel) — noun
  1. cf. சிதல். White ant; கறை யான் (பிங்.) செல்லரித்திடவு மாண்டெழாதாள் (கம்பரா. காட்சி. 15).

IndoWordNet

செல் — noun
  1. அனைத்து உயிர்களையும் படைக்கக்கூடிய அடிப்படை மூலக்கூறு இதனால் உயிர்களை உருவாக்க முடிகிறது

அணு பிரிவு பிறப்பு செல் ரத்த செல்கள் ரத்த அணுக்கள் பிறக்காத செல் எலும்பு செல் தாய்ச்செல் கருமுட்டை செல் கரு அணு செல் புணரிச்செல் நியூட்ரான்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

செல்
  1. போகை
  2. வாங்கிய கடனுக்குச் செலுத் திய தொகை
  3. கடன்
  4. கடன் செலுத்திய தற்குப் பத்திரமெழுதுங் குறிப்பு
  5. கையொப் பம்
  6. சென்ற காலவளவு
  7. மேகம்
  8. வானம்
  9. குடி
  10. வேல்
  11. கறையான்