செலவு

பொருள்: செல் என்றால் செல்லுதல் (போதல்). செல் (வினை). செல்லுதல் செலவு. பணத்தின் வரவு செலவு என்னும் பயன்பாட்டில்

expense, cost, expenditure, charges going, passing journey

Tamil Wiktionary

செலவு

செல் செலவினம் பயணச்செலவு வழிச்செலவு மேற்செலவு வரவுசெலவு வீண்செலவு

Winslow (1862)

செலவு (celavu) — verbal noun
  1. noun. (used substantively.) Expenses, charges, cost; expenditure of money, time, life, &c., disbursement, பண முதலியவற்றின்செலவு
  2. Consumption of stores, &c., materials used, consumed, worked up, செலவழிகை
  3. Provisions, &c., given out or purchased for daily consumption. சாமக்கிரியை. (c.)
  4. [loc] Permission, leave, license, விடை
  5. Way, passage, route, வழி
  6. (p.) Conduct, behavior, நடக்கை
  7. Lapse of time, காலக்கழிவு
  8. Current, issue of a stream, &c., discharge from a sore, &c., நீர்பரவுகை
  9. Removal, detachment, separation, departure, movement, நீங்குகை. (தீ 358.)
  10. Going, passing, progress, procedure, procession, course, career, journey, செல்லுகை; [ex செல், to go.] செலவோடுசெலவாய். Together with other expenses. செலவாய்ப்போனான். He has passed away, is dead. செலவுக்கில்லை. I have no money for my expenses. ஏனக்குஅதுசெலவில்லை. I have no call for it. ஏச்செலவுந்தள்ளி–ஏல்லாச்செலவுந்தள்ளி.... Clearing all expenses
  • செலவழிக்க — To spend, to consume, to use up–as stores. 2. To give out, give away, to sell off, dispose of, விற்றுப்போட. நான் இந்தப்பல்லக்கைச் செலவழித்துப்போட வேண்டும். I wish to dispose of this palankeen.
  • செலவழிய — To be spent, exausted, used or worked up, consumed; to be all gone. 2. To be squandered, wasted, lavished, சீரழிய.
  • செலவழிவு — Disbursements and expenditures. 2. Loss and gain.
  • செலவுகொடுக்க — To give out stores for consumption. 2. To bear, or pay expenses. 3. [loc.] To give leave, விடைதர.
  • செலவாக–செலவாய்ப்போக — To be spent, exhausted, &c.–as செலவழிய, 1.
  • செலவுபெற — To take leave.
செலவு (celavu) — infinitive
  1. [prov.] A hole or small cavity resorted to by rats, crabs, &c., ஏலிவளைமுதலியன; [ex செல், v.] (c.)
  • செலவுபோக — To be circuitous–as some holes commonly that of the field rats.

Fabricius (1972)

செலவு — v. n.
  1. n. (செல்) passing, progress. செல்லுகை
  2. leave, permission, விடை
  3. expense, charges, disbursement, செல விடுகை
  4. consumption of stores etc. செலவழிகை
  5. provisions for daily consumption, செலவு சிற்றாயம்
  6. way, passage, route, வழி
  • எச்செலவும்–ந்–தள்ளி — clear, of all expenses.
  • எனக்குச் செலவுக்கில்லை — I have no money for my expenses.
  • எனக்கு அது செலவில்லை — I have no call for it.
  • செலவழிய–செலவாக–செலவாய்ப் போக — to be spent, consumed.
  • செலவழிக்க–செலவு பண்ண–செலவிட — to spend, to expend, to sell up, to dispose of.
  • பிராணனைச் செலவழிக்க — to lay down one's life.

Tamil Moli Akarathi (1928)

செலவு (celavu)
  1. உத்தரவு, செலவிடுதல், செல் லும் பொருப்பு, பயணம், பெருங் காப்பியவுறுப்புளொன்று, போக்கு, போதல், முடிவு, வழி
செலவு (celavu)
  1. கதி, தாவு, படர்
செலவு (celavu)
  1. செலல், வழி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செலவு (celavu) — noun
  1. Going, passing; போக்கு. செலவினும் வரவினும் (தொல். சொல். 28)
  2. Running, flowing; ஓட்டம். வெருவருஞ் செலவின் வெகுளி வேழம் (பொருந. 172)
  3. Manner or mode of walk; நடை. சாமனார் தம்முன் செலவு காண்க (கலித். 94)
  4. Pace of a horse; குதிரைக்கதி. ஐந்து செலவொடு மண்டிலஞ் சென்று (பு. வெ. 12, வென்றிப். 14)
  5. Journey; பயணம். நீளிடைச் செலவொழிந்தனனால் (கலித். 10)
  6. Expedition of an army; படையெடுப்பு. நாடிய நட்புப் பகை செலவு (பு. வெ. 9, 37, உரை)
  7. Taking up a position of strategic importance in a fight, one of pañca-kiruttiyam, q.v.; பஞ்சகிருத்தியங் களுள் கொள்ளுநிலமறிந்து கொள்ளுகை. (சீவக. 1676, உரை.)
  8. Full height; நீட்சியளவு. ஒளிநிற வண்ணனைச் செலவுகாணலுற்றா ரங்கிருவரே (தேவா. 1209, 2)
  9. Elaboration of a tune on the yāḻ, one of eight kalai-t-toḻil, q.v.; கலைத்தொழில் எட்டனுள் ஒன்றாகிய ஆலாபனம். ஆளத்தியிலே நிரம் பப்பாடுதல் செலவு (சீவக. 651, உரை)
  10. Way, passage, route; street; வழி. (திவா.) செஞ் ஞாயிற்றுச் செலவும் (புறநா. 30)
  11. Conduct, behaviour; ஒழுக்கம். தன்செலவிற் குன்றாமை (திரிகடு. 29)
  12. [T. K. selavu, M. celavu.] Expense, charges; பணவிரயம். தாங்குகோடி தனஞ் செல வென்பவே (சிவரக. சுகமுனி. 41)
  13. Provisions needed for consumption; வீட்டுக்கு வேண்டிய உணவுப்பண்டம். கடைக்குப்போய்ச் செலவு வாங்கிவந்தேன்
  14. Demand, necessity, need; தேவை. இந்தத் துணிக்கு வீட்டில் செல வில்லை. Loc
  15. Marriage presents; மொய். Loc
  16. Expenditure, as of provisions, lapse, as of time, life, etc.; காலம் பண்டம் முதலியவற்றின் கழிவு
  17. (Gram.) Past tense; இறந்தகாலம். பாந்தஞ்செல வொடு வரவும் (நன். 145)
  18. Death; சாவு. ஊரில் செலவு அதிகம். Loc
  19. Separation, departure; பிரிவு. செலவழுங்கியது (அகநா. 191)
  20. [T. K. selavu.] Permission, leave, order; உத்தரவு. செலவு பெற்றுக்கொள்கிறேன்
  21. Hole, as of rat; எலி முதலியவற்றின் வளை. எலிச் செலவாயினுந் தனிச்செலவு வேண்டும். (J.)

IndoWordNet

செலவு — noun
  1. பணம், நேரம், சக்தி போன்றவற்றைப் பயன்படுத்தும் அல்லது பயன்படுத்த வேண்டிய நிலை
செலவு — noun
  1. ஒன்றைப் பெற அல்லது செய்ய பணம், நேரம், சக்தி போன்றவற்றைப் பயன்படுத்தும் அல்லது பயன்படுத்த வேண்டிய நிலை.

வேலை பணி வீண்செலவு தென்டச்செலவு சீரானசெலவு மிதமானசெலவு குறைந்த அஞ்சல் செலவு தபால் செலவு முதலீடு வீண் செலவு நாணயம் காசு பைசா

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

செலவு
  1. பணவழிவு
  2. போக்கு
  3. ஓட்டம்
  4. நடை
  5. குதிரைநடை
  6. பயணம்
  7. படையெடுப்பு
  8. ஐந்தொழில்களுள் கொள்ளும் நிலம் அறிந்து கொள்ளுகை
  9. நீட்சியளவு
  10. ஆலாபனம்
  11. வழி
  12. ஒழுக்கம்
  13. தேவை
  14. மொய்
  15. ஆணை
  16. சிறந்த காலம்
  17. பிரிவு
  18. சாவு
  19. காலக்கழிவு
  20. எலிவளை முதலியன
  21. வீட்டுக்கு வேண்டிய உணவுப் பண்டம்