தாள்
காகிதம் - எழுதுவதற்கு அல்லது அச்சிடுவதற்கு அல்லது பை செய்வதற்குப் பயன்படும் மரநார் கொண்டு செய்யப்பட்ட மெல்லிய தட்டையான பொருள். பாதம்; கால் கால். எண்குணத்தான் றாளை (குறள், 9).
paper, sheet latch, bolt, lock key
Tamil Wiktionary
தாள்
காகிதம் - எழுதுவதற்கு அல்லது அச்சிடுவதற்கு அல்லது பை செய்வதற்குப் பயன்படும் மரநார் கொண்டு செய்யப்பட்ட மெல்லிய தட்டையான பொருள். பாதம்; கால் கால். எண்குணத்தான் றாளை (குறள் 9). மரமுதலியவற்றின் அடிப்பகுதி. விரிதான கயிலாய மலையே (தேவா. 1156 1). பூ முதலியவற்றின் அடித்தண்டு. தாணெடுங் குவளை (சீவக. 2802). வைக்கோல்.(பிங்.) விளக்குத் தண்டு. (W.) படி. குண்டுகண் கழிய குறுந்தாண் ஞாயில் (பதிற்றுப். 71 12). ஆதி. (சூடா.) சட்டைக் கயிறு. தாளுண்ட கச்சிற் றகையுண்ட (கம்பரா. பூக்கொய். 14). விற்குதை. (W.) வால்மீன் விசேடம். குளமீனொடுந் தாட்புகையினும் (புறநா. 395). ஒற்றைக் காகிதம். Mod. தாழ்ப்பாள். தம்மதி றாந்திறப்பர் தாள் (பு. வெ. 9 24). கொய்யாக்கட்டை. முட்டுவாயின் ஊடுருவச் செறிக்கும் கடையாணி. தாளுடைக் கடிகை நுழைநுதி நெடுவேல் (அகநா. 35). திறவுகோல். இன்பப் புதாத்திறக்குந் தாளுடைய மூர்த்தி (சீவக. 1549). தாடை. தாள் கிட்டிக்கொண்டது. கண்டம்
விடைத்தாள் வினாத்தாள் கேள்வித்தாள்
Winslow (1862)
தாள் (tāḷ) — noun
Stubble, நெல்முதலியவற்றின் தாள் Bolt, bar–as தாழ் Key, திறவுகோல் Sheet of paper, ஒற்றைக்காகிதம் The jaws, அலகு. (c.) [loc.] String of a jacket, சட்டையின்தாள் Stand of a lamp, candlestick, &c., விளக்குத்தண்டு [in combin.] Leg, foot, stem, pedicle; foot of a tree or mountain, கால், as மலைதாள் Ends of a bow, விற்குதை Energy, effort, exertion, enterprize, perseverance, application, முயற்சி Beginning, commencement, origin, ஆதி. (p.) துறக்கந்திறப்பதோர்தாள். A key which will open heaven. (அறநெறி.) தாள்கிட்டிக்கொண்டது. The jaws are set
தாட்பூட்டு — An iron pin run through, the cheeks, just above the jaw bones, by Tripaty pilgrims. தாளாண்மை — [prov. தாடாண்மை.] Energy, activity, spirit, ஊக்கம். 2. Perseverance, application, diligence, முயற்சி. தாளாளர் — Persons of enterprize, application, ஊக்கமுள்ளோர். 2. Any of the divisions of the third or வைசியர் caste. (p.)
Fabricius (1972)
தாள் — noun
stubble, the stem or stalk of corn etc a bolt, a bar, தாழ் a sheet of paper the jaws, அலகு foot, கால் energy, exertion, முயற்சி beginning, origin, ஆதி a key, திறவுகோல்
தாட்பாள்–தாழ்ப்பாள் — a bolt, a bar, . தாட்பூட்டு — a pin run through the cheeks, above the jaw bones, by pilgrims to Tirupati. தாளடி–அரிதாள் — stubble. தாளாண்மை — energy, perseverance. தாளாளர் — persevering characters. தாளிட — to bolt the door.
Tamil Moli Akarathi (1928)
தாள் (tāḷ)
அருவி, அலகு, ஆதி, ஒட்டு,ஒற் றைக்காகிதம், கதவுறுதாள், கால்
தாள் (tāḷ)
கடிகை, சீப்பு, தாழ், தாழ்ப்பாள்
தாள் (tāḷ)
ஆதி, கால், முயற்சி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தாள்¹ (tāḷ) — noun
prob. தள்ளு- [M. tāḷ.] Leg, foot; கால். எண்குணத்தான் றாளை (குறள், 9) Foot of a tree or mountain; மரமுதலியவற்றின் அடிப்பகுதி. விரிதாள கயிலாய மலையே (தேவா. 1156, 1) [K. tāḻ, M. tāḷ.] Stem, pedicle, stalk; பூ முதலியவற்றின் அடித்தண்டு. தாணெடுங் குவளை (சீவக. 2802) Straw; வைக்கோல். (பிங்.) Lampstand, candle-stick; விளக்குத் தண்டு. (W.) Energy, effort, perseverance, application; முயற்சி. தாளிற் றந்து (புறநா. 18) Stairs; படி. குண்டுகண் கழிய குறுந்தாண் ஞாயில் (பதிற்றுப். 71, 12) Origin, commencement, beginning; ஆதி. (சூடா.) Tying string of a jacket; சட்டைக்கயிறு. தாளுண்ட கச்சிற் றகையுண்ட (கம்பரா. பூக்கொய். 14) Ends of a bow; விற்குதை. (W.) A comet; வால்மீன் விசேடம். குள மீனொடுந் தாட்புகையினும் (புறநா. 395) [M. tāḷ.] Sheet of paper; ஒற்றைக் காகிதம். Mod cf. tāla. [K. tāḻ, M. tāḷ.] Bolt, bar, latch; தாழ்ப்பாள். தம்மதி றாந்திறப்பர் தாள் (பு. வெ. 9, 24) Wooden catch turning on a central screw that fastens a pair of shutters; கொய்யாக்கட்டை Pin that holds a tenon in a mortise; மூட்டுவாயின் ஊடுருவச் செறிக்கும் கடை யாணி. தாளுடைக் கடிகை நுழைநுதி நெடுவேல் (அகநா. 35) Key; திறவுகோல். இன்பப் புதாத் திறக்குந் தாளுடைய மூர்த்தி (சீவக. 1549)
தாள்² (tāḷ) — noun
cf. tālu. Jaws; தாடை. தாள் கிட்டிக்கொண்டது Adam's apple; கண்டம். Loc
சொல் அகராதி
சொல் தேடு