பக்கம்
: side, page : côté, page
side page contiguity, nearness
Tamil Wiktionary
பக்கம்
[object Object], [object Object]
Fabricius (1972)
பக்கம் — noun
- பக்ஷம், பட்சம், s. side, புறம்
- vicinity, proximity, சமீபம்
- affection, friendship, நட்பு
- the half of a lunar month or fortnight அபரபக்ஷம் or பூர்வ பக்ஷம்
- an argument, a thesis, கோட்பாடு
- wing or feather, புட்சிறகு
- பக்கக்கிரகணம் — eclipse of the sun and moon or the contrary in succeeding changes of the moon.
- பக்கச்சூலை — a pain in the side, inflammation of the liver.
- பக்கச்சொல் — a word in one's favour, a friendly word.
- பக்கச்சொல்லாளி — a spokesman, an advocate.
- பக்கத்திலே போக — to walk alongside of a person.
- பக்கத்தெலும்பு–பக்கவெலும்பு — a rib.
Tamil Moli Akarathi (1928)
பக்கம் (pakkam)
- பக்கம், புறக்கதவு
பக்கம் (pakkam)
- அம்பிறகு, அருகு, அருத்தாபத் திப்பொருள், அவயவம், இடம், இ ராசயானை, இறகு, உணா, ஏதிரிடை, ஒருகையணி, கனிவு, சந்திரனாள், சமீபம், சுத்தம், செட்டை, சேனை, தகுதி, நட்பு, நாரை, பட்சம், பதினை ந்துநாள், புட்பொது, புறம், வகுப்பு, வமிசம், வால், வீடு
பக்கம் (pakkam)
- இடை, சிறை, ஞாங்கர், பாங்கர், பாங்கு, பாரிசம், பால், புடை, புறம், மருங்கு, மாடு
பக்கம் (pakkam)
- அருகு, இடம், இறகு, சந்திர னாள், நட்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பக்கம்¹ (pakkam) — noun
- < pakṣa
- Side; பாரிசம். பக்கநோக்கி நிற்கும் (திவ். திருவாய். 5, 5, 5)
- Neighbourhood, nearness; அருகு. (சூடா.)
- Place; இடம். ஊழையு முப்பக்கங் காண்பர் (குறள், 620)
- Country, region; தேசம்
- House; வீடு. (யாழ். அக.)
- Side of the body extending from the shoulder to the hip; விலாப்புறம்
- Wing, feather; சிறகு. இசை படு பக்க மிருபாலுங் கோலி (பரிபா. 21, 31)
- Wing of the arrow; அம்பிறகு. (யாழ். அக.)
- Tail; வால். (யாழ். அக.)
- Affection, friendship; நட்பு. (சூடா.)
- Love, kindness; அன்பு. (யாழ். அக.)
- Relation; சுற்றம். பக் கஞ் சூழ வடமீன் காட்டி (கல்லா. 18)
- Family; வமிசம். (யாழ். அக.)
- Army; சேனை. தாவரும் பக்க மெண்ணிரு கோடியின் றலைவன் (கம்பரா. இலங்கைக்கேள்வி. 40)
- Royal elephant; அரசுவா. (யாழ். அக.)
- Lunar fortnight; பதினைந்து திதிகொண்ட காலம். பகலிராப் பக்கமே திங்கள் (காஞ்சிப்பு. காயாரோகண. 2)
- Lunar day; திதி. (திவா.)
- Portion, section; கூறு. அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் (தொல். பொ. 75)
- Page; புஸ்தகத்தின் பக்கம்
- Treatise; நூல். வாயினுங் கையினும் வகுத்த பக்கமொடு (தொல். பொ. 41)
- Theory; opinion; கோட்பாடு. Colloq
- (Log.) Proposition to be proved; அனுமானத்தின் உறுப்பினுள் மலை நெருப் புடைத்து என்றதுபோன்ற பிரதிஞ்ஞாவசனம். (மணி. 29, 59.)
- (Log.) Minor term in a syllogism; துணிபொருளுள்ளவிடம். பக்கந் துணிபொருளுக் கிடமாம் (சி. சி. அளவை, 9)
- Necessary assumption. See அர்த்தாபத்தி. (யாழ். அக.)
- State, quality; தன்மை. வாலிதாம்பக்க மிருந்தைக் கிருந்தன்று (நாலடி, 258)
- Ornament for the hand; கையணி. (யாழ். அக.)
- Greyness of the hair; நரை. (யாழ். அக.)
பக்கம்² (pakkam) — noun
- Lustre, brilliance, as of gems; ஒளி. பக்கஞ்செய்து (திவ். திருநெடுந். 21, பக். 175).
பக்கம்³ (pakkam) — noun
- Food; உணவு. (யாழ். அக.)
IndoWordNet
பக்கம் — noun
- சுட்டப்படும் திசையில் அமைந்திருக்கும் பகுதி.
பக்கம் — noun
- பக்கம், புத்தகத்தாள்
பக்கம் — noun
- ஒன்றிற்குப் பரிமாண அமைப்பைத் தருகிற பகுதி அல்லது பரப்பு.
பக்கம் — noun
- ஒரு பொருளுக்குப் பரிமணத்தைத் தருகிற தட்டையான பகுதி அல்லது பரப்பு
பக்கம் — noun
- பக்கம், திசை
புறம் இடம் ஸ்தானம் புத்தகத்தாள் காகிதம் தாள் அட்டைப்பக்கம் கோடு திசை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பக்கம்
- அருகு
- இடம்
- பாரிசம்
- நாடு
- வீடு
- விலாப்புறம்
- வால்
- அரசுவா
- சிறகு
- அம்பிறகு
- நட்பு
- அன்பு
- சுற்றம்
- கொடிவழி, வமிசம்
- சேனை
- பதினைந்து திதிகொண்ட காலம்
- இதி
- கூறு
- நூலின் பக்கம்
- கோட்பாடு
- அனுமானத்தின் உறுப்பினுள் மலை நெருப்பு உடைத்து என்றதுபோன்ற உறுதிசெய் வசனம்
- துணிபொருள் உள்ளவிடம்
- தன்மை
- கையணி
- ஒளி
- நரை
- உணவு