தீர்வை
வரி, சுங்கம் கலியாணஞ் செய்து கொண்டவனை விலக்கி விடுதற்குரிய செலவுத் தொகை. முடிவு
solution
Tamil Wiktionary
தீர்வை — பெயர்ச்சொல் (Noun)
- வரி
- சுங்கம்
- கலியாணஞ் செய்து கொண்டவனை விலக்கி விடுதற்குரிய செலவுத் தொகை.
- முடிவு
- நிச்சயம்
- பிராயச்சித்தம்
- தப்பும் வழி
- விதி
- நியாயத் தீர்ப்பு
- கணக்கு
- கீரிப்பிள்ளை
- மாந்தரம்
Winslow (1862)
தீர்வை (tīrvai) — noun
- Decision, நியாயத்தீர்ப்பு
- Conclusion, issue, result, முடிவு
- Custom, duty, excise, toll, tax, impost, சங்கம்
- Divine judgment, fate, விதி. (c.)
- [loc. also தீர்வைக்காரியம்.] Funeral obsequies, கருமாந்தம்
- (சது.) A mungoose, கீரி
- தீர்வைகொடுக்க — To pay duty.
- தீர்வைச்சரக்கு — Customable goods.
- தீர்வைதீர — To lay duty on goods.
- தீர்வைத்துறைமுகம் — A port where duty is received.
- தீர்வைப்பணம் — Toll-money, money paid for duty.
- தீர்வையில்லாதசரக்கு — Goods not chargeable with duty.
Fabricius (1972)
தீர்வை — noun
- decision, judgment, தீர்ப்பு
- duty, toll, custom, tax, சுங்கம்
- divine judgment, fate, விதி
- a mungoose, கீரி
- funeral obsequies
- தீர்வைகொடுக்க — to pay duty.
- தீர்வைச்சாவடி — a Custom-house.
- தீர்வைதீர — to lay duty on goods.
Tamil Moli Akarathi (1928)
தீர்வை (tīrvai)
- கீரி, சங்கம், தீர்மானம், பிரே தக்கிரியையினொன்று, விதி
தீர்வை (tīrvai)
- இறை, கீரி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தீர்வை (tīrvai) — noun
- < id
- Conclusion, result, end; முடிவு. தீர்வையிற் சாக்காடுமின்றி சிறந்தார் கொல்லோ (பிரபோத. 13, 9)
- Certainty; நிச்சயம். ஒன்றையே யடைகுவ ரிதுதீர்வை (கைவல். சந். 45)
- Expiation; பிராயச்சித்தம். சிந்தையாகுல மிதற்குத் தீர்வையன்று (திருவாலவா 48, 8)
- Escape; தப்பும்வழி. Loc
- Divine judgment, fate; விதி. (W.)
- Judgment, decree; நியாயத்தீர்ப்பு. (J.)
- [T. tīruva, K. tīruve, Tu. tīrve.] Duty, tax, toll; வரி. Colloq
- Divorce fee; கலியாணஞ்செய்துகொண்டவளை விலக்கிவிடுதற்குரிய செலவுத் தொகை. Kaḷḷar
- (Arith.) Sums; கணக்கு. உபாத்தியார் இன்று எத் தனை தீர்வை போட்டார் Loc
- Mongoose; கீரிப்பிள்ளை. அரவுக்குறும் பெறிந்த சிறுகட் டீர்வை (மலைபடு. 504)
- Funeral rites, obsequies; கருமாந்தரம். (W.)