தொடர்

1)continue, 2)follow, 3)pursue, 4)takeup தொடர் - தொடர்ச்சி - தொடர்பு தொடர்வண்டி, தொடர்பியல், தொடரோட்டம்

to follow uninterruptedly, to continue in unbroken succession to be linked to form

Tamil Wiktionary

தொடர் — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

தொடர்ச்சி தொடர்பு தொடர்வண்டி தொடர்பியல் தொடரோட்டம் சொற்றொடர் அடுக்குத்தொடர் வினைத்தொடர் தொலைக்காட்சித்தொடர் கூட்டத்தொடர் சங்கிலித்தொடர் போட்டித்தொடர் மலைத்தொடர் பின்தொடர்

Winslow (1862)

தொடர் (toṭar) — noun
  1. Yarn, cotton thread, பஞ்சினூல்
  2. Gum, glue, பிசின்
  3. Flower garland, பூமாலை
  4. Chain, சங்கிலி
  5. Fetter, விலங்கு
  6. (fig.) Love. (Beschi.)
  7. Antiquity, lineal succession, பழமை
  8. Following, succession, connection, series, பின்சேறல்
  9. Phrase, sentence, words forming a complete idea, சொற்றொடர்
  • தொடர்ச்சொல்–தொடர்மொழி — A compound word; also a phrase, clause, sentence.
  • தொடர்ச்சொற்புணர்த்தல் — Combining or giving rules for the composition of words; one of the thirty-two உத்தி.
  • தொடர்ப்பாடு — Connexion, attachment, சம்பந்தம்.
தொடர் (toṭar) — noun
  1. , கிறேன், ந்தேன், வேன், தொடர, v. a. To succeed each other reciprocally as the tree and seed, the body and its actions, and vice versa. பீசவிருட்சநியாயமாத் தொடர
  2. To proceed or succeed each other–as letters in the formation of words, &c., ஏழுத்துமுதலியதொடர
  3. To follow continually, to continue, இடையறாதுவர
  4. To insist, to engage with energy, முயல
  5. To follow, to attend as on a great man, to pursue, பின்செல்ல
  6. To seek, to go in quest of to apply to from day to day, தேட
  7. To follow in order, in unbroken succession, &c., தொடர்ந்துநிற்க
  8. To prosecute, to claim in law, to sue வழக்காட. (c.)
  9. To connect, to tie, to bind, கட்ட
  10. to assail, to attack, தாவ. கருமத்திற்றொடர்ந்துநிற்கிறான். He perseveres in his undertakings
  • தொடராமுறி — A deed of renunciation or relinquishment, an agreement not to prosecute to law, விடுதலைப்பத்திரம். (c.)
  • தொடரி — A kind of thorny shrub whose fruit is edible, Rhamnus circumissus, L. See முன்றொடரி and பின்றொடரி.
  • தொடரெழுத்து — A letter elided or changed in the combination of words according to the rules of permutation, தொடர்ந்துநிற்குமெழுத்து, as அவனிருந்தான், for அவன் இருந்தான், and வந்தடித்தான்–for வந்து அடித்தான்.
  • தொடர்நிலைச்செய்யுள் — A poem in which several connected actions are related, epic poetry, ஓர்வகைச்செய்யுள்.
  • தொடர்ந்தஅன்பு — Continued love, (R.)
  • தொடர்ந்தார்–தொடர்ந்தோர் — Friends, companions, மித்திரர்.

Fabricius (1972)

தொடர் — noun
  1. cotton thread, பஞ்சுநூல்
  2. chain, fetter, விலங்கு
  3. connection, following, series, தொடர்ச்சி
  4. a phrase, a combination of words
  5. a train, வண்டித்தொடர்
  6. a flower garland, பூமாலை
  7. gum, glue, பிசின்
  • தொடர்ச்சொல்–மொழி — a compound expression, a phrase.
  • தொடர்பாடு–தொடர்ப்பாடு — con- nection, சம்பந்தம்.
தொடர் — v. t.
  1. , தொடரு, II. v. t. succeed each other, follow, pursue a person or a thing, பின்செல்லு
  2. prosecute, pursue legally, வழக்காடு
  3. continue
  4. seek, go in quest of, தேடு
  5. connect, tie, bind, கட்டு
  6. assail, attack, தாவு
  • தொடராமுறி–விடுதலைப் பத்தி ரம் — a deed of renunciation or relinquishment, .
  • தொடர் எழுத்து — a letter elided or changed in linking words together.
  • தொடர்ச்சி — continuance, effect; 2. union, affinity, 3. pursuit, perseverance; 4. a cluster or bunch of flowers; 5. demoniacal possession, பேய்த்தொடர்ச்சி, see தொடர்பு also.
  • தொடர்ச்சிக்காரன் — a plaintiff. a claimant.
  • தொடர்ச்சி பண்ண — to prosecute in law, to sue.
  • தொடர்ச்சியான காரியம் — an actionable matter.

Tamil Moli Akarathi (1928)

தொடர் (toṭar)
  1. கோவை,சங்கிலி, தொடரென் னேவல், தொடர்பு, நூல், பஞ்சி நூல், பழமை, பிசின், பூமாலை, வா சம், விலங்கு
தொடர் (toṭar)
  1. சங்கிலி-தொடரென்னேவல், பஞ்சிநூல், பழமை, பிசின், பூமாலை, விலங்கு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தொடர்² (toṭar) — noun
  1. < தொடர்-
  2. Following, succession; தொடர்கை
  3. [K. toḍar, M. toṭar.] Chain; சங்கிலி. தொடர்ப்படு ஞமலியின் (புறநா. 74)
  4. Fetters; விலங்கு. தொடர் சங்கிலிகை (திவ். பெரியாழ். 1, 7, 1)
  5. Series; வரிசை. (W.)
  6. Phrase; clause; sentence; compound-word; சொற்றொடர்
  7. Friendship, love; நட்பு. நல்லார் தொடர்கைவிடல் (குறள், 450)
  8. Connection, relation; உறவு. (சூடா.)
  9. Lineal succession; வமிசபரம்பரை. (W.)
  10. Long-standing connection; பழமை. (யாழ். அக.)
  11. Flower garland; பூமாலை. (யாழ். அக.)
  12. Thread; நூல். (யாழ். அக.)
  13. Gum, glue; பிசின். (யாழ். அக.)
தொடர் (toṭar) — noun
  1. Earthen pot for melting metals; உலோகங்களை யுருக்க உதவும் மண்பாத்திரம். தொடரிலிட்ட ஈயம்போலே துடியா நிற்கும் (திவ். திருமாலை, அவ. வ்யா. பக். 4).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தொடர்
  1. தொடர்கை
  2. சங்கிலி
  3. விலங்கு
  4. பஞ்சு
  5. வரிசை
  6. பிசின்
  7. பூமாலை
  8. மரபுவழி
  9. சொற்றொடர்
  10. பழைமை
  11. நட்பு
  12. உறவு
  13. உலோகங்களை உருக்க உதவும் மட்பாண்டம்