தொடர்பு
Tamil Wiktionary
தொடர்பு — பெயர்ச்சொல் (Noun)
- connection
- contact
- relationship
Tamil Moli Akarathi (1928)
தொடர்பு (toṭarpu)
- உறவு, ஒழுங்கு, சினேகம், சேர்மானம், தொடர்ச்சி, பழமை, பா, பாட்டு, முறைமை
தொடர்பு (toṭarpu)
- உறவு, சினேகம், பழமை, பாமுறைமை, வினையெச்சம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தொடர்பு (toṭarpu) — noun
- < தொடர்-
- See தொடர்ச்சி, 1, 2, 3, 4, 6
- 2. Attachment, friendship; நட்பு. அஞ்சுக கேள்போற் பகைவர் தொடர்பு (குறள், 882)
- Verse, poem; பாட்டு. (பிங்.) ஏனோர் வனங்கெழு தொடர்புபோலு மற்றைய பழமும் (பிரபுலிங். ஆரோக. 36)
- Rule, principle; நியதி. உயிரெலா மெய்தி யோருழைத் தோற்றுழிப் பிரிந்துபோந் தொடர்பு (சேதுபு. கந்தமா. 82)
- Stickiness; ஒட்டுகை. (W.)