பயம்
அச்சம். - fear - భయము
fear, dread, alarm profit, gain, advantage fruit
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பயம்¹ (payam) — noun
- perh. phala
- Profit, gain, advantage; பலன். (சூடா.) பயங் கெழு மாநிலம் (புறநா. 58)
- Fruit of one's action; வினைப்பலன்
- Fruit; பழம். Loc
- Sweetness, pleasantness; இன்பம். சீரமை பாடற் பயத்தாற் கிளர்செவிதெவி (பரிபா. 11, 69)
- King's revenue; அரசிறை. (சிலப். 2, 2.)
- Nature; தன்மை. அங்கையு ணெல்லி யதன்பய மாத லால் (பு. வெ. 2, 13)
பயம்² (payam) — noun
- < bhaya
- Fear, apprehension, alarm; அச்சம். (பிங்.) வேதியரும் பயந் தீர்ந்தார் (கம்பரா. கும்பகர்ண. 362)
- (Poet.) Sentiment of terror, one of nava-racam, q.v.; அச்சச்சுவை. (திவா.)
பயம்³ (payam) — noun
- < payas
- Water; நீர். (திவா.) மாகமூட்டப் பயங்கொண்டு (திருவாலவா. 30, 4)
- Milk; பால். (பிங்.) புலியுழை மடிப்பய முண்டு (உபதேசகா. கைலை. 9)
- Tank; வாவி. (திவா.)
- Nectar; அமுதம். (சூடா.)
Winslow (1862)
பயம் (payam) — noun
- Fear, dread, apprehension, concern, alarm, அச்சம்
- Reverence, awe, solemnity of mind, ஒடுக்கவணக்கம். W. p. 613. B'HAYA. (c.)
- பயங்காட்ட — To menace, to threaten, to put in fear.
- பயங்காளி–பயங்கோளி — A coward.
- பயந்தமனம் — A fearful mind full of apprehensions.
- பயந்தவன் — One who is afraid.
- பயந்திருக்க — To be afraid, frightened, alarmed.
- பயந்தீர–பயந்தெளிய — To be relieved of fear.
பயம் (payam) — noun
- Water, நீர்
- Milk, பால்; [also பயசு.] W. p. 502. PAYAS
- Tank, குளம்
- Nectar, அமிர்தம்
- Utility, பயன்
- பயோததி — Sea, கடல். 2. The sea of milk, பாற்கடல்; [ex உத்தி.]
- பயோதரம் — A cloud, மேகம். 2. Female breast, முலை. 3. Sea, கடல்; [ex உதரம்.] (சது.)
- பயோதரப்பத்து — A poem containing ten stanzas on the female breast. See பிரபந்தம்.
- பயோதி — As பயோநிதி. Colloq. in the south. (R.)
- பயோநிதி — Ocean, கடல்; [ex நிதி, fulness.]
Fabricius (1972)
பயம் — noun
- fear, fright, alarm, அச்சம்
- reverence, awe, ஒடுக்கவணக்கம்
- water
- milk
- nectar, அமிர்தம்
- utility,பயன்
- பயங்காளி–பயங்கோளி — a coward.
- பயந்தெளிய — to get rid of fear.
- பயபக்தி — reverential awe, devotion with godly fear.
- பயப்பட–பயங்கொள்ள–பயமாயிருக்க–பயந்திருக்க — to fear, .
- பயப்படுத்த — to frighten, terrify.
- பயமுறுத்த–பயங்காட்ட — to threaten, to frighten.
Tamil Moli Akarathi (1928)
பயம் (payam)
- அச்சம், அது சுபாவகுண மொ ன்பதினொன்று, அமிர்தம், குளம், சுதை, நீர், பயன், பால், பிரமா, ம யையாக்கை, பதினெண் குற்றத்து மொன்று, மன்னர் விழைச்சி
பயம் (payam)
- அச்சம், குளம், சுதை, நீர், பயன், பால்
IndoWordNet
பயம் — noun
- கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு.
பயம் — noun
- தீங்கு, இழப்பு, ஆபத்து முதலியவை நேரக் கூடிய சூழ்நிலையில் ஒருவருக்கு ஏற்படும் உணர்வு.
அச்சம் மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம் வீண்பயம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பயம்
- அச்சம்
- அச்சச்சுவை
- வாவி
- அமுதம்
- பால்
- நீர்
- பலன்
- வினைப்பயன்
- பழம்
- இன்பம்
- அரசிறை
- தன்மை