போர்
Winslow (1862)
போர் (pōr) — noun
- Fight, single combat, duel, அமர்
- Battle, skirmish, engagement, contest, சண்டை
- War, யுத்தம்
- Struggle, wrestling, encounter, மல்
- Rivalry, competition, ஏதிரித்தனம்
- A heap of unthreshed corn, corn-stack, தானியப்போர். (c.)
- The twenty-fourth lunar asterism, சதய நாள்
- [prov.] Hollow of a tree, மரப்பொந்து. போர்த்தொழில்புரியேல். Shun war and strife. (Avv.)
- போரடி — Playing with cocoa-nuts.
- போரடிக்க — To thresh or beat out corn. 2. [fig.] To haggle. போரடிவைக்கோல். Threshed straw. 2. (R.) The first layer of straw.
- போரறைகூவ — [com. போருக்கழைக்க.] To challenge to fight; [(ex) அறைகூவ.] (p.)
- போராட — [v. noun போராட்டம்.] To struggle, to wrestle, மற்கட்ட. 2. To fight, to carry on war, பொர. 3. To haggle, cavil, chaffer, வாக்குவாதஞ்செய்ய.
- போராட்டம் — . A combat, a struggle.
- போராயுதம் — A weapon of war. போராயுதவர்க்கங்கள். Weapons of different kinds, panoply, complete armor. [Christ. usage.]
போர் (pōr) — infinitive
- , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To wrap one's self in a cloth or garment, to put on, or wear a cloak, மூட
- To cover entirely–as does the skin–to envelope, முழுதுமூட. (c.) ஏன்புதோல்போர்த்தவுடம்பு. The bone and skin-covered body. (p.)
- போர்த்துக்கொண்டிருக்க — To put on a cloak.
Fabricius (1972)
போர் — noun
- fight, struggle, சண்டை
- battle, war, யுத்தம்
- rivalry, competition, போட்டி
- a heap of unthreshed corn, corn-stack
- the 24th lunar asterism, சதயநாள்
- hollow of a tree, மரப்பொந்து
- போரடிக்க — to thresh.
- போரட–போரிட — to fight, to combat, to struggle.
- போராட்டம் — a combat, a struggle.
- போருடலல்–போருடன்றல் — being engaged in battle.
- போரேறு–செவ்வாய் — a champion, a hero; 2. Mars, the planet, .
- போர் கலக்க — to join battle or combat.
போர் — v. i.
- , போரு, II. v. i. improper for போது, be sufflcient.
- போர்ந்த–போரும்–போராது–போந்த–போதும்–போதாது — see , , .
போர் — v. t.
- v. t. put on, wear, cloak, அணி
- cover entirely, envelope, மூடு
- வஸ்திரத்தைப் போர்த்துக்கொள்ள — to wrap one's self in a cloth, to put on a cloak.
Tamil Moli Akarathi (1928)
போர் (pōr)
- சதயநாள், நெற்போர், பொந்து, போரென்னேவல், யுத்தம்
போர் (pōr)
- அமர், ஆகவம், ஆயோதனம், ஆர்ப்பு, இகல், இரணம், உறழ்வு, கணைபம், கதனம், கலகம், கலி, காளையங்கம், குறும்பு, கூட்டம், சங் கரம், சிங்கிராமம், சமரம், சமர், சமி தி, சமீரம், செரு, ஞாட்பு, தாக்கு, திறல், தும்மை, தெவ், நிகம், நிகர் ப்பு, பண்டனம், மலைப்பு, மலைவு, மறல், முயல், முரண், மொய், யுத் தம், விதர்ப்பு, விறப்பு, வினை
போர் (pōr)
- சும்மை, போர்ப்பு இது நெல்லு முதலியவற்றிற்குரித்து
போர் (pōr)
- சதயநாள், நெற்போர், பொ ருதல், போரென்னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
போர்² (pōr) — noun
- < போர்-
- Joining fast together; செறிந்து பொருந்துகை. திண்போர்க் கத வம் (மதுரைக். 354)
- Heap; accumulation; குவியல். சாணிப்போர்
- Heap of unthreshed grain, straw stack; கதிர் வைக்கோல்களின் படப்பு. போரிடை யுறங்கு மன்னம் (கம்பரா. நாட். 6)
- The 24th nakṣatra; சதையம். (பிங்.)
- Hollow of a tree; மரப்பொந்து. (J.)
போர்³ (pōr) — noun
- Fight, battle, war; சண்டை. குன் றேறி யானைப்போர் கண்டற்றால் (குறள், 758)
- Wrestling; மல்யுத்தம்
- Rivalry, competition; இகல். வீணைவாட் போர்க்கலாம் (சீவக. 620)
போர்⁴ (pōr) — noun
- < புகர்¹
- Tawny colour; புகர் நிறம். போர்க்காளை. Colloq
- Spot; புள்ளி. கரும் போர்க்காளை. Nāñ