மதம்
Winslow (1862)
மதம் (matam) — noun
- High exhileration, joy, களிப்பு
- Juice from the male elephant's temples when in rut, மதநீர்
- Strength, வலி
- Pride, arrogance, self-consequence, presumption, recklessness, செருக்கு
- Animal or vegetable gluten, essence, juice, சாரம்
- Passion as one of the eighteen infirmities of the body. See பதினெண்குற்றம்
- Wantonness, lasciviousness, venerial heat or fury, காமவிகாரம்
- Richness of land, &c., strength, நிலவளம்
- Inebriety, intoxication; infatuation; fanaticism, religious frenzy, மயக்கம். W. p. 636. MADA
- Opinion, sentiment, கருத்து
- Belief, religious tenet; religion, சமயமதம்
- Consent, சம்மதம். (Sa. Mata.) (சது.)
- மதகஜம்–மதகயம்–மதயானை — A rutting elephant.
- மதகரி — A male elephant, ஆண்யானை.
- மதங்கொள்ள — To become arrogant, wanton, vain, mettlesome. 2. To become luxuriant or rank.
- மதச்சுவடு–மதம்பாய்சுவடு — An elephant's cheek from which juice flows.
- மதஸ்தன்–மதத்தன் — A religionist, a follower of a religious system, சமயத்தான்.
- மதஸ்தாபனம் — A religious institution. 2. A polemical discussion.
Fabricius (1972)
மதம் — noun
- high exhileration, joy, களிப்பு
- inebriety, intoxication, fanaticism, மயக்கம்
- venereal heat or fury, passion, காமவிகாரம்
- animal or vegetable gluten, juice, சாரம்
- pride, arrogance, செருக்கு
- strength, வலி
- richness of land, கொழுமை
- opinion, கருத்து
- religion, religious sect, சமயம்
- consent, சம்மதம்
- மதகஜம்–கயம்–யானை–மதங்கொண்ட யானை–மதப்பட்ட — a rutting elephant.
- மதகரி–களிறு — a male elephant, .
- மதஸ்தன்–மதத்தன் — a follower of a religious system.
- மதஸ்தாபனம் — a religious institution; 2. a polemical discussion.
- மதநீர் — juice from the male elephant's temples when in rut.
- மதமத்தகம்–கஞ்சா — the plant, bang.
Tamil Moli Akarathi (1928)
மதம் (matam)
- அறிவு, கருத்து, கன்மதம், கொ ழுப்பு, சந்தோஷம், சமயம், சம்மதம், செருக்கு அது உட்பகையாறி னொ ன்று, தாது, நாவிசட்டம், நோக்க ம், பெருமை, பைத்தியம், போதனை, மதாளிப்பு, மஸ்துள்ளது,மாயையா க்கை பதினெண் குற்றத்துளொன் று, யானைமதம், வலி, விகாரமெட் டினுமொன்று, விருப்பம், வெறி
மதம் (matam)
- 7- உடன்படல், மறுத்தல், தாஅ னாட்டித் தனது நிறுப்பு
- பிறர்தம்மத மேற்கொண்டு களைவு
- இருவர் மாறு கோளொருதலைதுணிவு, பிறதூற்கு ற்றங்காட்டல்
- பிறிதொடுபடான்தன் மதங்கொளல்
மதம் (matam)
- கருத்து, சமயமதம், சமமதம், செருக்கு, யானைமதம், வலி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மதம்
- கருத்து, கொள்கை
- சமயம்
- அறிவு
- இசைவு
- போதனை
- பெற்றதைப் பெரிதாக மதிப்பது
- பல
- ஆறு
- மகிழ்ச்சி
- யானையின் மதநீர்
- வலிமை
- செருக்கு
- சாரம்
- தேன்
- வெறி
- காமவிகாரத்தின் மிகுதி
- நிலவளம்
- மதுக்களிப்பு
- கத்தூரி
- கன்மதம்
- வீரியம்
- மிகுதி
- பெருமை. ்
Tamil Wiktionary
மதம் — பெயர்ச்சொல் (Noun)
- குறிப்பிட்ட கடவுள்கள் பற்றிய வழியியல் முறை.
- இந்து மதம்
- பௌத்த மதம்
- கிறித்தவ மதம்
- இசுலாம் போன்றவை.
- சமயம்
[object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மதம்¹ (matam) — noun
- < mata
- Opinion, belief; கொள்கை. எழுவகை மதமே (நன். 11)
- Religious tenet, sect, religion; சமயம். தத்த மதங்களே யமைவதாக (திருவாச. 4, 52)
- Knowledge; அறிவு. (யாழ். அக.)
- Agreement, consent; சம்மதம். (யாழ். அக.)
- Teaching; போதனை. (யாழ். அக.)
- Esteeming highly any favour received; பெற்றதைப் பெரிதாக மதிப்பது. (சி. சி. 2, 80, மறைஞா.)
- Many; பல. (நாமதீப. 772.)
- The number '6', as from the six 'matam'; ஆறு. Cant
மதம்² (matam) — noun
- < mada
- Exhilaration, exultation, joy; மகிழ்ச்சி. காதலி சொல்லிற் பிறக்கு முயர்மதம் (நான்மணி. 7)
- See மதசலம். மத யானை (சீவக. 2485)
- Strength; வலிமை. படிமதஞ் சாம்ப வொதுங்கி (பரிபா. 4, 18)
- Pride, arrogance, presumption; செருக்கு. (பிங்.) போரெதிர்ந் தேற்றார் மதுகை மதந்தப (பரிபா. 18, 1)
- Animal or vegetable gluten; essence, juice; சாரம். (W.)
- Honey; தேன். மதங்கமழ் கோதை (சீவக. 2584)
- Madness, frenzy; வெறி. (சங். அக.)
- Wantonness, lasciviousness; venereal heat; காம விகாரத்தின் மிகுதி. (திருக்கோ. 69, உரை)
- Richness of land, fertility; நிலவளம். (W.)
- Inebriety, intoxication; மதுக்களிப்பு. (மலைபடு, 173, உரை.)
- Musk; கஸ்தூரி. மாலையுஞ் சாந்து மதமு மிழைகளும் (பரிபா. 10, 92)
- Rock alum; கன்மதம். (தைலவ. தைல. 125.)
- Semen; வீரியன். (யாழ். அக.)
- Abundance; மிகுதி. (யாழ். அக.)
- Greatness; பெருமை. (யாழ். அக.)