பகட்டு

மினுக்கம், வெளிவேடம், ஆடம்பரம், இறுமாப்பு, சின்னல் ஆங்கிலம் - pomp, ostentation, extravagance, foppery,

show off

Tamil Wiktionary

பகட்டு
  1. மினுக்கம்
  2. வெளிவேடம்
  3. ஆடம்பரம்
  4. இறுமாப்பு
  5. சின்னல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பகட்டு² (pakaṭṭu) — noun
  1. Foppery, affectation, ostentation; ஆடம்பரம். எல்லாம் பகட்டுக்காண் (திவ். திருநெடுந். 28, 236)
  2. Bragging; தற்பெருமை
  3. Lustre, brightness, splendour; பிரகாசம். Colloq
  4. Attraction; fascination; allurement; கவர்ச்சி. Colloq
  5. Pretence; deception; plausibility; ஏமாற்று. Colloq
  6. Bluff, bluster; அதட்டு. Colloq

Winslow (1862)

பகட்டு (pakaṭṭu) — noun
  1. (Tel. ஈ”œ?.) Lustre, brightness, splendor, பிரகாசம்
  2. Attraction, fascination, allurement, மயக்கம்
  3. False show, pretence, deception, plausibility, வெளிவேஷம்
  4. Foppery, finicalness, affection, நாகரீகம்
  5. Bullying, bluster, ostentation, pomposity, இறுமாப்பு. (c.)
  • பகட்டானவேலை — Neat, fine or splendid work. 2. Unsubstantial work –as சொற்பவேலை.
பகட்டு (pakaṭṭu) — infinitive
  1. , கிறேன், பகட்டினேன், வேன், பகட்ட, v. n. To make a false show, to be foppish, finical, நாகரீகங்காட்ட
  2. (R.) To loathe, அரோசிக்க
  3. To be drowsy, நித்திரைமயக்க
  4. v. a. To charm, fascinate, allure, attract, மயக்க
  5. To deceive, circumvent, misrepresent–as in selling goods, வஞ்சிக்க
  6. To menace, bully, hector, threaten, in order to affect an object, அமட்ட. போசனம்பண்ணினபின்பு பகட்டிவாந்தி பண்ணினான். After he has eaten he loathed, and vomited, the food. தூக்கம்பகட்டுகிறது. I am drowsy
  • பகட்டிப்பறிக்க — To wheedle away money, as a fraudulent dealer, a juggler, or a dancing woman.

Fabricius (1972)

பகட்டு — s. (Tel.)
  1. (Tel.) lustre, brightness, மினுக்கு
  2. attraction, allurement, மயக்கம்
  3. false show, வெளிவேஷம்
  • பகட்டான வேலை — fine attractive work but not substantial.
பகட்டு — v. i.
  1. v. i. make a false show, சளுக்குப்பண்ணு
  2. loathe, அரோசி
  3. be drowsy, மயங்கு; v. t. charm, fascinate, மயக்கு
  4. deceive, delude one by ostentation or flattery, வஞ்சி
  5. menace, bully, hector, threaten in order to effect an object, அமட்டு
  • தூக்கம் பகட்டுகிறது — drowsiness comes on.
  • பகட்டிப்பறிக்க — to wheedle away money as a juggler.

Tamil Moli Akarathi (1928)

பகட்டு (pakaṭṭu)
  1. அதட்டு, இறுமாப்பு, தந்திரம் பகட்டென்னேவல், பார்வை, பிர காசம், மயக்கம், மினுக்கம், வெறுட் டு, வெளிவேடம்

IndoWordNet

பகட்டு — noun
  1. தற்பெருமை காணப்படும் நிலை
பகட்டு — noun
  1. பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.
பகட்டு — noun
  1. சிறப்பை காண்பிப்பதற்காக அல்லது பொய்யான ஆடம்பரத்திற்காக கூறப்படுவது
பகட்டு — noun
  1. பலமான ஏற்பாடு அல்லது மிகவும் அதிகமாக தயாராக இருப்பது
பகட்டு — noun
  1. அலங்கார நோக்கம் அதிகம் இருக்கும் செயல்

தற்பெருமை தற்புகழ்ச்சி வீண்பிரதிஷ்டை தன்மதிப்பு அகந்தை அகங்காரம் கர்வம் கருவம் தலைக்கனம் செருக்கு மமதை தருக்கு மிடுக்கு முறுக்கு முறைப்பு விறைப்பு இராங்கி பிகு ஜம்பம் அகம்பாவம் திமிர் ஆணவம் மதம் வீம்பு வீராப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பகட்டு
  1. ஆடம்பரம்
  2. தற்பெருமை
  3. கவர்ச்சி
  4. ஏமாற்று
  5. அதட்டு