வருடம்

ஆண்டு என்னும் சொல்லே தமிழ் வழக்காகும். வருடம் என்பது பிறமொழிச் சொல் (சமஸ்கிருதம்) ஆகும். வருஷம் ஆண்டு.

year rain

Tamil Moli Akarathi (1928)

வருடம் (varuṭam)
  1. ஆண்டு, ஆயனம், சமை, தெய்வ ம், யாண்டு வற்சரம், இதன்பாதி, அயனம்
வருடம் (varuṭam)
  1. 60- பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங் கீரச, சீமூக, பவ, யுவ, தாது, ஈச்சுர, வெகுதானிய, பிரமாதி, விக்கிரம, விஷூ, சித்திரபானு, சுபானு, தா ரண, பார்த்திப, விய, (இவ்விருபது முத்தம் வருடம்) சருவசித்து, சருவ தாரி, விரோதி, விகிர்த்தி, கர, நந் தன, விசய, சய, மன்மத, துன் முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாவசு, பராபவ, (இவ்விருபதும் மத்திமவரு டம்) பிலவங்க, கீலக, சௌமிய, சா தாரண, விரோதிகிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராட்சச, நள, பிங்கள, காளயுத்தி, சித்தார்த்தி, இரௌத்திரி, துன்மதி, துந்துபி, உரு த்திரோற்காரி, இரத்தாட்சி, குரோ தன, அட்சய, (இவ்விருபது மதம வருடம்.)

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வருடம்¹ (varuṭam) — noun
  1. < varṣa
  2. Year; ஆண்டு. (பிங்.)
  3. Rain; மழை. (பிங்.) தேனென்னுங் காலவருடம் வருடிக்கவல்ல (தக்கயாகப். 68, உரை)
  4. See வருஷம்
  5. (நாமதீப. 484.)
வருடம்² (varuṭam) — noun
  1. See வர்ஷருது. (பிங்.)

IndoWordNet

வருடம் — noun
  1. ஒவ்வொரு வருடமும் கொடுக்கப்படுகிற ஏதாவது ஒரு கட்டணம் அல்லது வரி
வருடம் — noun
  1. பன்னிரண்டு மாதங்கள் கொண்ட கால அளவு.
வருடம் — noun
  1. பன்னிரண்டு மாதங்கள் கொண்ட கால அளவு.

ஆண்டு வருஷம் வருசம் வரி நேரம் லீப் ஆண்டு லீப் வருடம் அனுவத்சர் கடந்த வருடம் ஹிஜ்ரி ஆண்டு ஹிஜ்ரி வருடம் ஹிஜ்ரி வருஷம் ஷக் சகாப்தம் ஷக் கி.பி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வருடம்
  1. ஆண்டு
  2. மழை
  3. பூகண்டம்
  4. ஆவணி புரட்டாசி மாதங்களைக்கொண்ட மழைக் காலம்