வரி

மக்களாட்சி முறையில் அரசை நடத்த மக்களிடம் இருந்த பணம் வாங்கும் முறை உறுப்பினர் குழுவிற்கு செலுத்த வேண்டிய பங்கு. வரித்தல்

tax line, stripe

Tamil Wiktionary

வரி — பெயர்ச்சொல் (Noun)
  1. மக்களாட்சி முறையில் அரசை நடத்த மக்களிடம் இருந்த பணம் வாங்கும் முறை
  2. உறுப்பினர் குழுவிற்கு செலுத்த வேண்டிய பங்கு.
  3. வரித்தல்

[object Object]

வரிசை வரிக்குதிரை வரிப்புலி வரிப்பணம் வரிவிலக்கு வரிவில்லை வரிவிதி வரிபோடு வரிவாங்கு வரிசுமத்து வரிகட்டு வரியேற்று வரிக்குறைப்பு சுங்கவரி வருமானவரி நுழைவுவரி தலைவரி நீர் வரி சொத்துவரி சாலைவரி முதலீட்டு வரி மறைமுக வரி கொடை வரி விற்பனை வரி இரட்டைவரி வீட்டுவரி மதிப்புக் கூட்டு வரி பாடல் வரி கட்டுரை வரி

Winslow (1862)

வரி (vari) — noun
  1. A line; a streak, வரை
  2. The streak on shells grained streaks in timber, சங்குவரி
  3. Tribute, impost, toll, tax, duty, குடியிறை
  4. A letter, a line of writing, ஏழுத்து
  5. A course, as of stones of bricks, கல்வரி. (Beschi.)
  6. A dot; spots on, the face, &c., தேமல்
  7. Length, distance, நீளம்
  8. Rice in the husk, நெல்
  9. A beetle, வண்டு
  10. A road, வழி
  11. A melody in general. இசைப்பாட்டு
  12. The lines in the palm of the hand, விரலிறை. அதுவரிவரியாயிருக்கிறது. It is striated. ஒற்றைவரி. A single line
  • புல்வரி — Tax on pasturage–For தலைவரி, மனைவரி, நிலவரி, see in their places.
  • வரிக்கடை — A chafer, வண்டு. (சது.)
  • வரிக்குதிரை — A horse with marks, or having different colors. 2. A horse not saddled.
  • வரிக்குயில் — The striped koil bird.
  • வரிக்கோரை — A kind of grass.
  • வரிச்சந்தி — A place where four streets meet, a cross-way, நாற்றெருகூடுமிடம், (சது.)
வரி (vari) — noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To write, to draw lines, ஏழுத
  2. To paint, சித்திரமெழுத
  3. To bind sticks in regular order for covering a hut, வலிச்சல்வரிய
  4. To tie together the openings of two bags to be laid on a bullock, சாக்குவரிய. (c.) அவன்சும்மாவரிகிறான். He is going on writing. வேஷ்டியைவரிந்துகட்டிக்கொண்டான். He gathered up and tied the folds of his garment round his waist. வீடுவரிந்தாயிற்று. The roof-sticks are regularly tied
  • வரிகயிறு — A rope to tie the loading of a cart.
  • வரிகோணியல் — A bag joined with another.
  • வரிவடிவெழுத்து — Written, in distinction from spoken, letters.
வரி (vari)
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To bind, to join as a bridegroom and bride, கட்ட
  2. To smear, to paint, பூச. (p.)

Fabricius (1972)

வரி — noun
  1. a line, கோடு
  2. tribute, tax, duty, குடியிறை
  3. a spot in the face etc. தேமல்
  4. a letter, a line of writing
  5. a beetle, வண்டு
  6. a road, வழி
  7. a melody in general, இசைப் பாட்டு
  8. the lines in the palm of the hand, விரலிறை
  9. length, distance
  10. rice in the husk, நெல்
  • வரிக் கடை–வண்டு — a chafer, .
  • வரிக்குதிரை — the zebra.
  • வரிச்சந்தி — a quadrivium, a cross-way.
  • வரிதண்ட — to gather a tax.
  • வரி பிளந்தெழுத — to interline.
  • வரிப்புலி — a striped tiger.
வரி — v. t.
  1. v. t. write, draw a line, எழுது
  2. bind in a regular order sticks for covering a hut, வரிச்சல் வரி
  3. tie together the openings of two bags intended to be laid on a bullock
  • வரி கயிறு — a rope to tie the loading of a cart.
  • வரிக்குதிரை — a horse not saddled.
  • வரிவடிவெழுத்து — written letters (, ஒலி வடிவு).
வரி — v. t.
  1. v. t. bind, join, கட்டு
  2. smear, paint, பூசு

Tamil Moli Akarathi (1928)

வரி (vari)
  1. அக்கினி, இசைப்பாட்டு, ஏழுத் து, கடல், குடியிறை, தேமல், நிறை, நீளம், நெல், வடிவு, வண்டு, வரியென் னேவல், வழி, விரலிறை
வரி (vari)
  1. 8- கண்கூடுவரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சி வரி, ஏடுத்துக்கோள்வரி
  2. இவற்றுள் கண்கூடு வரியாவது பிரியதரிசனம் அஃதாவது காட்சிஅஃது ஒருவர் கூட்டவன்றித்தானேவந்து நிற்கும் நிலைமை
  3. ஆகவே ஏதிர்முகமாக நின்று நடிக்கும் நடிப்பு
வரி (vari)
  1. இசைப்பாட்டு, ஏழுத்து, குடியி றை, தேமல், நீளம், நெல், வண்டு, வரி யென்னேவல், வழி, விரலிறை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வரி¹ (vari) — noun
  1. cf. valī. Line, as on shells; streaks, as in timber; stripe; கோடு. நுண்ணிய வரியொடு திரண்டு . . . கண் (சீவக. 1702)
  2. Ornamental marks on the breast; தொய்யில் முதலிய இரேகை. மணி வரி தைஇயும் (கலித். 76)
  3. (Palmistry.) Lines at the joint of fingers or on the palm of hand; கையிரேகை. (பிங்.)
  4. Course, as of bricks; line, as of writing; series, as of letters; orderly line, as of ducks in flight; row; ஒழுங்கு நிரை. குருகி னெடு வரி பொற்ப (பதிற்றுப். 83, 2)
  5. Letter; எழுத்து. (நாமதீப. 673.)
  6. Dot; புள்ளி. வரிநுதற் பொருதொழி நாகம் (நெடுநல். 117)
  7. Spreading spots on the skin; தேமல். பொன்னவி ரேய்க்கு மவ் வரி (கலித். 22)
  8. Beetle; வண்டு. (திவா.)
  9. Sea; கடல். (பிங்.)
  10. Tie, bandage; கட்டு. வரிச்சிலை யாற் றந்த வளம் (பு. வெ. 1, 16)
  11. Junction of streets; பலதெருக்கூடுமிடம். (பிங்.)
  12. Way; வழி. (உரி. நி.)
  13. Music; இசை. (நாமதீப. 678.)
  14. Tune; melody; இசைப்பாட்டு. வரிநவில் கொள்கை (சிலப். 13, 38)
  15. (Nāṭya.) See வரிக்கூத்து. கண்கூடு வரியும் (சிலப். 3, 14)
  16. A poem of the last Šaṅgam; கடைச்சங்கத்து நூல் களுள் ஒன்று. (இறை. 1, பக். 5.)
  17. Loftiness; உயர்ச்சி. (பிங்.)
  18. Length; நீளம். (சூடா.)
வரி⁵ (vari) — noun
  1. Impost, tax, toll, duty; contribution; குடியிறை. (பிங்.)
வரி⁶ (vari) — noun
  1. prob. அரி⁷
  2. Fire; தீ. (அக. நி.)
  3. Colour; நிறம். வரியணிசுடல் வான் பொய்கை (பட்டினப். 38)
  4. Beauty; அழகு. வரிவளை (பு. வெ. 11, 12)
  5. Form, shape; வடிவு. (அக. நி.)

IndoWordNet

வரி — noun
  1. வரி

சொத்து நிலவரி கிஸ்தி மேய்ச்சல் நிலம் மேய்ப்பு நிலம் தரகு ஊதியம் தரகுக்கூலி குறியீடு கள்ளுக்கடை கட்டணம் பரம்பரை சொத்துக்கான வரி இறப்பு வரி பிரதான சந்தை சுங்கவரி மரங்களுக்கான வரி வருமானவரி வருட வரி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வரி
  1. கோடு
  2. தொய்யில் முதலிய வரி
  3. கைரேகை
  4. ஒழுங்குநிரை
  5. எழுத்து
  6. புள்ளி
  7. தேமல்