அறம்
தருமம். () புண்ணியம் தகுதியானது. ( 29,)
moral or religious duty, virtue, performance of good works merit that which is fitting, excellent
Fabricius (1972)
அறம் — noun
- , அறன், s. virtue, ஒழுக்கம்
- charity, benefaction, தருமம்
- merit புண்ணியம்
- letters or words in a verse which cause ruin as in அறம் வைத்துப் பாடுதல்
- goddess of virtue
- Yama
- அறக்கருணை–மறக்கருணை — ( x ) benign divine grace ( x grace beslowed through trials).
- அறச்சாலை — an alm-house.
- அறஞ்செய்ய — to give alms.
- அறநெறி–அறத்தாறு–அறத்துறை — path of virtue .
- அறத்துணைவி — wife as helping the husband in acts of virtue.
- அறவர்–அறவோர் — virtuous or chari- table men.
Tamil Moli Akarathi (1928)
அறம் (aṟam)
- கையறம், தருமம், நீர்மை, நூற் பயன் நான்கினொன்று, பெரியோ ரியல்பினொன்று
அறம் (aṟam)
- சுகிர்தம், தருமம், நல்வினை, புண் ணியம், வீறு, ஒழுக்கம், ஆசாரம், உறுதி கை, தவம்
அறம் (aṟam)
- 32 - ஆதுலர்க்குச்சாலை, ஓது வார்க்குணவு, அறுசமயத்தார்க்குண் டி, பசுவுக்குவாயுறை, சிறைச்சோறு ஐயம், தின்பண்டநல்கல், அறவைச் சோறு, மகப்பெறுவித்தல், மகவுவளர் த்தல், மகப்பால் வார்த்தல், அற வைப்பிணஞ்சுடுதல், அறவைத்தூரி யம், சுண்ணம், நோய்க்கு மருந்து, வண்ணார், நாவிதர், கண்ணாடி, காதோ லை, கண்மருந்து, தலைக்கெண்ணெய், பெண்போகம், பிறர்துயர் காத்தல், தண்ணீர்ப்பந்தல், மடம், தடம், சோ லை, ஆவுரிஞ்சுதறி, விலங்கிற்குணவு, ஏறுவிடுத்தல், விலைகொடுத்துயிர்கா த்தல், கன்னிகாதானம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அறம்
- தருமம்
- புண்ணியம்
- அறச்சாலை
- தரும தேவதை
- யமன்
- தகுதியானது
- சமயம்
- ஞானம்
- நோன்பு
- இதம்
- இன்பம்
- தீப்பயன் உண்டாக்கும் சொல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அறம் (aṟam) — noun
- Moral or religious duty, virtue, performance of good works according to the Šāstras, duties to be practised by each caste; தருமம். (பிங்.)
- Merit; புண்ணியம். அறம்பாவ மென்னு மருங்கயிற் றாற் கட்டி (திருவாச. 1, 52)
- That which is fitting, excellent; தகுதியானது. (இறை. 29, பக். 136.)
- Religious faith; சமயம். (சீவக. 544.)
- Wisdom; ஞானம். அறத்தின் விருப்புச் சிறப்பொடு நுந்த (ஞானா. பாயி. 5)
- Feeding house; அறச் சாலை. அறத்துக்குப் புறத்தன் (T.A.S. i, 9)
- Fasting; நோன்பு. (சீவக. 386.)
- Letters or words in a verse which cause harm; தீப் பய னுண்டாக்குஞ்சொல். அறம்விழப் பாடினான்
- Goddess of virtue; தருமதேவதை. (குறள், 77.)
- Yama; யமன். அறத்தின் மைந்தனுக்கு (பாரத. வாரணா. 112)
அறம் (aṟam) — noun
- < அறு-
- Happiness; சுகம். (சம். அக. Ms.)
- That which is salutary; இதம். அறத்துறை மாக்க டிறத்திற் சாற்றி (சிலப். 14, 28)