பொருள். இது தமிழ் உயிர் எழுத்துக்களில், மூன்றாமெழுத்தாகும். விளக்கம்.

The third vowel in Tamil.

Tamil Wiktionary

அழகி செல்வி திசைகாட்டி மண்வெட்டி பலுக்கல் எழுத்து மெய்யெழுத்து உயிர்மெய்யெழுத்து

Winslow (1862)

(i) — noun
  1. A short letter, similar to I in English, ஓர்குற்றெழுத்து
  2. A demonstrative prefix, சுட்டெழுத்து–as இந்த, this
  3. A termination of the second person singular, முன்னிலையொருமைவிகுதி–as உண்டி, thou hast eaten
  4. An imperative second person singular, முன்னிலையேவலொருமைவிகுதி–as சொல்லுதி, say thou
  5. A feminine appellative termination, பெண்பால்விகுதி–as கூனி, a hump-backed woman
  6. A singular termination, common to the masc. and fem., உயர்திணையொருமைவிகுதி–as மானி, an honorable person–பாவி, a sinner
  7. A termination in the singular, common to each gender, இருதிணைமுக்கூற்றொருமைவிகுதி –as செவியிலி, a man, woman, or animal without ears
  8. An expletive inserted at pleasure, when the preceding word ends with any letter except ய், and the following word begins with ய், சாரியை–as காலியாது, from கால், foot and யாது, which
  9. A termination of some participles, வினையெச்சவிகுதி–as ஏண்ணி, சொல்லி, &c
  10. A prefix to Sanscrit words beginning with ய, ர, ல–as யந்திரம், இயந்திரம், machine–ராகம், இராகம் harmony, melody–லங்கை, இலங்கை, Lanka. (p.)
  • இக்கணம் — Now, immediately, this moment.
  • இக்குறி — This time, this once, இம்முறை. 2. This mark, இவ்வடையாளம்.
  • இக்குறிகேட்போன் — One who has learnt once, now.
  • இக்கூறு — This part, இப்பங்கு. 2. This manner, இப்பிரகாரம்.
  • இங்ஙனம் — This place, இவ்விடம், [adverbially.] here, hither, இங்கே. 2. Thus, so, in this manner, இப்படி.
  • இத்துணை — So much, so many, இவ்வளவு. 2. This aid, இந்த உதவி. See துணை.

Fabricius (1972)

  1. trative prefix, this, இந்த. As to combine. see, அ dem. Note இப்பால், இம்மாத்திரம், இத்தனை, இவ் வளவு, etc. – are combinations
  2. a feminine appell, termination as, கூனி
  3. see any grammar for other termi- nations

Tamil Moli Akarathi (1928)

(i)
  1. தமிழ் மொழியின் நெடுங்கணக்கில் வரும் மூன்றாம் ஏழுத்து, உயிர் முய ற்சியாற் பிறக்கும் ஏழுத்துக்களுள் அண்பல்லடியை நாவினது விளிம்பு பொருந்த ஒலிக்கும் ஒரு குற்றுயிர், அன்பு,ஆச்சரியம், இகழ்ச்சி, ஓரெ ழுத்து, ஒரு சுட்டு, முப்பாலொரு மை முன்னிலை வினைவிகுதி (உ-ம்) உண்டி, முப்பாலொருமை, முன் னிலையேவல்விகுதி (உ-ம்) கேட்டி உயர்திணைப் பெண்பாலொருமைப் படர்க்கைப் பெயர்விகு (உ-ம்) குறத்தி, உர்திணையாண்பற்படர்க் கையொருமைப்பெயர்விகுதி (உ-ம்) வில்லி, அஃறிணைப்படர்க்கையொரு மைப்பெயர் மிகுதி (உ-ம்) ஊருணி விரவுத்திணை யொருமைப் பெயர் விகுதி (உ-ம்) செவியிலி, வினையெச் சவிகுதி(உ-ம்) ஏண்ணி
(i)
  1. ஓரெழுத்து
  2. ஆண்பாற்பெயர்விகுதி (உ-ம்.பிறைசூடி, மானேந்தி) பெண் பாற்பெயர் விகுதி (உ-ம்)கண்ணி, தோளி) முன்னிலையொருமைவினை முற்றுவிகுதி, ஏவலொருமை வினை முற்று விகுதி, சுட்டிடைச்சொல், செய்தென்னும் வினையெச்சவிகுதி, சாந்தம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இ¹ (i)
  1. Third letter and vowel of the Tamil alphabet, the close front lax unround vowel in Tamil; மூன்றுமுயிரெழுத்து.
இ² (i)
  1. Symbol for the fraction ½, which symbol is now usu. written as in Tamil Arithmetics; அரை யென்னும் எண்ணின்குறி.
இ³ (i) — part
  1. (a) Euphonic prothesis of the nature of an on-glide in Sanskritic words beginning with ய, ர, ல, as in இயந்திரம் for யந்திரம், இராகம் for ராகம், இலங்கை for லங்கை. (b) Euphonic medial anaptyxis coming in Sanskritic words in order to separate conjunct consonantal sounds of which the latter part happens to be 'y', 'r', 'l', as in வாக்கியம், கிரமம், சுக்கிலம். (நன். 149.) (c) The half-vowel sound of the close front lax unrounded vowel, heard in the sentence sandhi when the half-rounded close lax back-vowel at the end of a word combines with the initial semi-vowel 'y' of the next word beginning with 'ய', as in குரங்கியாது. (நன். 93.) (d) A glide sound coming in external sandhi between the absolute final consonantal sounds 'ñ', 'n', 'n', 'm', 'ṉ', 'r', 'l', 'v', 'ḻ' and 'ḷ', and the initial 'y' of words beginning with the semi-vowel sound, as in மண்ணியாது, 'manni- yātu'. (நன். 206.)
  2. Demonstr.; (a) Prefix vowel found in the base of the demonstr. pron. expressing the nearer or proximate person or thing; ஒர் அகச்சுட்டு. இவன்; (b) Demonstr. pref. qualifying any noun expressing nearness; புறச்சுட்டு. இக்கொற்றன்
  3. Noun-ending: (a) sing. of the rational and irrational substantive in the three genders, as in செவியிலி; இருதிணைமுக்கூற்றொருமை விகுதி; (b) masc. sing., as in வில்லி; (c) fem. sing., as in கூனி; (d) neut. sing., as in நாற்காலி; (e) expressing that which acts, as in அலரி; வினைமுதற் பொருள் விகுதி; (f) expressing that which is acted upon, as in ஊருணி; செயப்படுபொருள் விகுதி; (g) expressing the instrument, as in மண்வெட்டி; கருவிப்பொருள் விகுதி
  4. Verb ending: (a) 2nd pers. sing. fut., as in வருதி; எதிர்கால முன்னிலை யொருமை விகுதி; (b) imp. sing., as in செல்லுதி; ஏவலொருமை விகுதி; (c) opt. sing., as in காட்டி; வியங்கோள் விகுதி. (சீவக. 466); (d) vbl. pple., as in ஒடி; வினை யெச்ச விகுதி
  5. Ending of vbl. nouns, as in வெகுளி; தொழிற்பெயர் விகுதி. (திருக்கோ. 151, உரை.)
  6. Expletive ending, as in உருளி; பகு திப்பொருள் விகுதி. (சீவக. 532.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

  1. மூன்றாம் உயிரெழுத்து
  2. பஞ்ச பட்சிகளுள் ஆந்தையைக் குறிக்கும் எழுத்து
  3. அண்மைச் சுட்டு
  4. இருதிணை முக்கூற்று ஒருமை விகுதி
  5. வினைமுதல் பொருள் விகுதி
  6. செயப்படு பொருள் விகுதி
  7. கருவிப்பொருள் விகுதி
  8. எதிர் கால முன்னிலை ஒருமை விகுதி
  9. ஏவல் ஒருமை விகுதி
  10. வியங்கோள் விகுதி
  11. வினையெச்ச விகுதி
  12. தொழிற்பெயர் விகுதி
  13. பகுதிப் பொருள் விகுதி