உச்சம்

சிகரம் உச்சாணி உச்சபட்சம், அதிகபட்சம்

peak

Winslow (1862)

உச்சம் (uccam) — noun
  1. Height, elevation, altitude, greatness, dignity, உயர்ச்சி. Zenith, meridian, being right over the head, தலைக்குநேரிடம். Wils. p. 137. UCHCHA
  2. The treble in music, வல்லிசை
  3. [in astrology.] One of the five situations of a planet, the most influential, auspicious and benign. (See கிரகநிலை.)
  4. The top, tip, the extreme point, நுனி. உச்சமாய்ப்படிக்கிறான். He sings treble. தோணியுச்சவோட்டோடிற்று. The dhony sailed at the top of its speed
  • உச்சக்கிரகம்–உச்சத்தானம் — One of the five situations of a planet, being the most auspicious. See கிரகநிலை.
  • உச்சமானவன் — A tall person.
  • உச்சவீடு — The position of the sun, or any planet in its most auspicious sign, உச்சவிராசி. See கிரகநிலை.

Fabricius (1972)

உச்சம் — noun
  1. elevation, perpendicular height, greatness, உயர்ச்சி
  2. the point overhead, zenith, தலைக்குநேரான ஆகாசமுகடு
  3. treble in music, வல் லிசை
  4. top, extreme point, நுனி
  5. (Astr.) exalted position of a planet
  • சூரியன் உச்சத்தில் இருக்கிறது — the sun is right over the head.
  • உச்சமாய்ப் பாடுகிறான் — he sings treble.
  • உச்சந்தலை — the crown or top of the head.
  • உச்சராசி — (astr.), exalted sign of a planet fortunate natal sign.
  • திருச்சபை உச்சநிலையில் நின்ற பருவம் — the time when the churh was in its zenith.

Tamil Moli Akarathi (1928)

உச்சம் (uccam)
  1. உயர்ச்சி, கிரகவச்சம், தலைக்கு நேரிடம், நுதி, மத்தியானம், வல் லிசை
உச்சம் (uccam)
  1. உயர்ச்சி, வல்லிசை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உச்சம் (uccam) — noun
  1. < ucca
  2. Height, elevation, altitude; உயரம். (திவா.)
  3. Extreme top overhead; உச்சந்தலை
  4. Zenith, meridian, position overhead; தலைக்குநேரான ஆகாயமுகடு. வெங்கதி ருச்சமாம் பொழுது (காஞ்சிப்பு. பன்னிரு. 341)
  5. Excellence, superiority; சிறப்பு. உச்சமாணிக் கத்தாலே (இராமநா. பாலகா. 17)
  6. (Mus.) Treble; வல்லிசை. (திவா.)
  7. (Astrol.) Exalted position of a planet: one of five kiraka-nilai, q.v.; கிரக நிலையு ளொன்று. (விதான. நட்பா. 21.)
  8. Extreme limit; அறுதியளவு. தோணி உச்சவோட்டு ஒடிற்று. (W.)
உச்சம் (uccam) — noun
  1. < ucca
  2. One of eight pāṭaṟ-payaṉ, q.v.; எண்வகைப் பாடற்பயன்களுள் ஒன்று. (சிலப். 3, 16, உரை.)
  3. (Erot.) A mode of sexual union; புணர்ச்சிவகையுள் ஒன்று. (கொக்கோ. 3, 5.)

IndoWordNet

உச்சம் — noun
  1. உச்ச ஸ்தாயி
உச்சம் — noun
  1. ஒன்று அல்லது ஒருவர் அடையும் மிக உயர்ந்த நிலை

ஏழு பொருட்களின் கூறு உச்சநிலை உயர்நிலை உயர்வுநிலை மேல்நிலை நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உச்சம்
  1. உயரம்
  2. தலைக்கு நேரான வான்முகடு
  3. உச்சந்தலை
  4. இறப்பு
  5. வல்லிசை
  6. கோள் நிலையுள் ஒன்று
  7. அறுதியளவு
  8. எண்வகைப் பாடற் பயன்களுள் ஒன்று
  9. புணர்ச்சி வகையுள் ஒன்று