நிலை

அச்சிக்கல் முடிவு நிலைக்கு வந்தது. இப்பேருந்து, இந்நிலைக்கு மேல் செல்லாது. அவர் நல்ல நிலையில் இருக்கிறார்.

condition, state, situation, status place, seat, location door frame

Tamil Moli Akarathi (1928)

நிலை (nilai)
  1. ஆபரணத்திற்றொங்கணி, இடம், உலகம், கதவுநிலை, குணம், சாலை, தொழில், நிச்சயம், நிலக்கல்,நிலை பரம், நிலைபேறு, நிலைப்பரப்பு, நிலை யென்னேவல், நிற்குந்துணை, நேரம், பரப்பு, பூமி,பொழுது, மார்க்கம், முறைமை, யுத்தநிலை, அவை ஆலீ டம், பிரத்தியாலீடம், பைசாசம், மண்டிலம்
நிலை (nilai)
  1. ஆதாரம், ஏண், ததல் தம்பம், தாணு தாபரம், திதி, திரம், நிற்றல், மன்னல் நிலைநீங்காமை-ஆரூபம், ஆனாமை, தண்டாமை
நிலை (nilai)
  1. 4- பைசாசம், மண்டலம், ஆலீடம், பிரத்தியாலீடம், இவைநான்கும் விற் றொடுத்தம்பினை யெய்வார்க்குரியநி லை
  2. இவற்றி லொருகாலி னின்றொ ருகான் முடக்கல் பைசாநிலை இரு காலும் பக்கல்வளைய மண்டிலித்த லே மண்டலநிலை
  3. வலக்கான் மண் டலித்திடக்கான் முந்துறலே யாலீ டநிலை
  4. வலக்கான்முந்துற்றிடக்கான் மண்டலித்தலே பிரத்தியாலீடநிலை
நிலை (nilai)
  1. 6 - வைணவம், சமநிலை, வைசாதம், மண்டலம், ஆலீடம் பிரத்தியாலீடம்
நிலை (nilai)
  1. ஆபரணத்திற்றொங்கணி, இடம், குணம், நிலையென்னேவல், பூமி, பொழுது, முறைமை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நிலை¹ (nilai) — noun
  1. Standing, staying; நிற்கை. பணை நிலை முனைஇ (புறநா. 23)
  2. Firmness, fixedness, stability, permanence, durability; உறுதி. நீக்கமு நிலையும் (திருவாச. 3, 9)
  3. Character; quality; temper; nature; தன்மை. (பிங்.) திருந்துநிலை யா ரத்து (பெரும்பாண். 46)
  4. Condition, state, situation; நிலைமை. நன்னிலைக்கட் டன்னை நிறுப் பானும் (நாலடி, 248)
  5. Profession, vocation, calling; தொழில். (W.)
  6. Place, seat, location; இடம். நின்னிலைத் தோன்றும் (பரிபா. 2, 27)
  7. Stopping place, station, stand, residence; தங்குமிடம். நெடுந்தேர் நிலைபுகுக (பு. வெ. 6, 2)
  8. Earth; பூமி. (பிங்.)
  9. See நிலைத்திணை. (நாமதீப. 373.)
  10. Storey, floor, as of a building; sitting room in a car; வீடுதேர்களின் தட்டு. இழிந்து கீழ்நிலை (சீவக. 2673)
  11. Door frame; கதவு நிலை. ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை (நெடுநல். 86)
  12. Pillar; தூண். (நாமதீப. 448.)
  13. Standard, as of a lamp; விளக்கு முதலியவற்றின் தண்டு. (W.)
  14. Prescribed path; நெறி. நிலை யிற் றிரியா தடங்கியான் றோற்றம் (குறள், 124)
  15. Usage, custom; வழக்கு. (அக. நி.)
  16. Stages of religious life; ஆச்சிரமம். பிரமசரிய முதலிய நிலைகளி னின்று (குறள், பரிமே. உரைப் பா.)
  17. Family, tribe; குலம். காணிகைக் கொண்ட மறுநிலை மைந்தனை (கல்லா. 43, 20)
  18. Inheritance, hereditary right; பரம்பரைப்பாத்தி யம். தன்பாட்டன் நிலையாய் வருகிற காணி (S. I. I. ii, 310)
  19. A kind of song; இசைப்பாட்டுவகை. (சீவக. 650, உரை.)
  20. Time; பொழுது. (அக. நி.)
  21. A unit of time; முகூர்த்தம். ஒரு நிலைகாறு முள்ளே யொடுக்கி (பெருங். உஞ்சைக். 34, 63)
  22. A land measure for dry lands; ஒருவகை நில வளவு. (J.)
  23. Depth of water allowing one to stand in, opp. to nīccu; ஒருவன் நிற்கக் கூடிய நீராழம். நீர்நிலைகாட்டுங் காலத்து (பெரும்பாண். 273, உரை)
  24. Attitude in archery, numbering four, viz., paicācam, maṇṭalam, ālīṭam, pirattiyālīṭam; பைசாசம், மண்டலம், ஆலீடம், பிரத்தியா லீடம் என நால்வகைப்பட்டனவான வீரர் அம்பெய் யும் நிலை. (திவா.)
  25. A pendant of a jewel; ஆபரணத்தின் தொங்கல். (W.)
  26. Cow-dung evacuated at a time; பசு ஒரு தடவை கழிக்குஞ் சாணி. Tj

Tamil Wiktionary

நிலை — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

நிலைமை நிலையம் நிலைத்திணை நிலைநாட்டு நிலைப்பாடு நிலைமொழி நிலையாற்றல் தன்னிலை முன்னிலை வானிலை நடுநிலை வெப்பநிலை கொதிநிலை உருகுநிலை உறைநிலை சூழ்நிலை நீர்நிலை முத்திநிலை உடல் நிலை இயல்புநிலை இருப்புநிலை இயக்கநிலை இளநிலை முதுநிலை நெருக்கடி நிலை சமநிலை மந்தநிலை உயர்நிலை மேனிலை stabilise stabilize நிலையின்மை instability establish

Winslow (1862)

நிலை (nilai) — noun
  1. State, condition, character, quality, frame or temper, குணம்
  2. Story of a building car &c., தேர்த்தட்டு
  3. Door- post, door-frames, கதவுநிலை
  4. Posture, attitude, position. See நான்குநிலை
  5. Station, situation, site, இல்லிடம். Profession, vacation, calling, தொழில்
  6. Degree in religious or other attainment, சரியைமுதலியன
  7. Firmness, fixedness, stability, permanence, durability, உறுதி
  8. Religion, either in system or principle, மதம்
  9. Prescribed rules of religion, morals, caste, &c., or the practice of rules, வைதீகநிலை
  10. Situation or aspect of a planet in respect to its influence, கிரகநிலை
  11. Usage, முறைமை
  12. A stand, fixture, ஆதனம்
  13. Pendent part of an ornament, ஆபரணத்திற்றொங்கணி
  14. Appropriate or wonted place, habitation, place of residence, வசிக்குமிடம்
  15. Place, location, இடம்
  16. The earth, the world, பூமி
  17. Time, காலம்
  18. [prov.] One of the two land measures, that applied to any but rice-lands. See நெல்லிலாச்சம்
  19. Fordableness, ford, தாண்டுதுறை.– The நிலை, (attitudes) in archery are
  20. பைசாசம், standing with one leg straight and the other bent, as devils are said to stand
  21. மண்டலம், standing with both knees bent out
  22. ஆலீடம், standing with the right knee bent out, and the left foot advanced
  23. பிரத்தியாலீடம், standing with the left knee bent and the right foot advanced. (சது.)–Note. Some authorities give a fifth posture, சமபாதம், standing with the feet even. நிலையுரியாய்ச்சீலையையுரிந்தான். He stripped or made himself naked. நிலையைவிட்டால்நீச்சு. If the fordable depth be left, one must swim–videlicet, give not up a certainty for an uncertainty
  • நிலைகலங்க — To be disturbed, deranged, &c., in situation as a person or thing.
  • நிலைகுலைக்க — To ravish, &c. See குலை, v. a.
  • நிலைகுலைய–நிலைகெட — To lose one's situation, &c. See குலை, v.
  • நிலைகேடு — Loss of a situation.
  • நிலைகொள்ள — To come into existence or operation. 2. To continue, to be permanent.
  • நிலைக்கடகம் — A large, stationary basket, பெருங்கூடை.
நிலை (nilai) — noun
  1. , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To get or gain footing, become fixed, or established, நிற்க
  2. To be permanent, lasting, durable; to persevere, உறுதிகொள்ள
  3. To be at a stand as a beast tied, or a car that cannot be moved, நடவாதிருக்க
  4. To be stunted, as plants, &c., வளராதுநிற்க
  5. To stay too long in a place, தாமதிக்க
  6. To be fordable, ஆளுக்குநிலைக்க
  7. To be fixed as the eyes at the approach of death, &c., கண்நிலைக்குத்திட
  8. v. a. [poetic with personal terminations.] To set up, erect, establish, நிலைப்படுத்த. (சேதுப்.)–Note. போக is often added to the gerund of verb; as நிலைத்துப்போக, to come to a stand, to be fixed. தண்ணீராளுக்குநிலைக்கும். The water may be forded
  • நிலையாதஆறு — A river not fordable.
  • நிலையாததண்ணீர் — Water not fordable.
  • நிலையாமை — Being transient, &c., as நிலையில்லாமை, which see,
  • நிலைப்பு — Permanence, continuance, durability, உறுதி. 2. Perseverance, persistence, முயற்சி. 3. Invariableness, மாறாமை.

Fabricius (1972)

நிலை — noun
  1. a place, a standing place, இடம்
  2. state, condition, position, ஸ்திதி
  3. temper, குணம்
  4. firmness, stability, perseverance, உறுதி
  5. the door-posts, door-frame
  6. a ford, a shallow place in a river, தாண்டுதுறை
  7. a story (of a building, car etc.) தட்டு
  8. posture, attitude, கோலம்
  9. profession, calling, situation, தொழில்
  10. the earth, the world, உலகம்
  11. time, காலம்
  12. religion either in system or principle, மதம்
  13. prescribed rules of religion, morals etc. or the practice of rules, வைதீகநிலை
  14. habitation, wonted place, place of residence, வசிக்கு மிடம்
  15. pendent part of an ornament, ஆபரணத்திற்றொங்கணி
  • ஏழுநிலைக்கோபுரம் — a steeple seven storeys high.
  • ஒரே நிலையாய் நிற்கிறான் — he maintains his ground, he is most obstinate or persistent.
  • நிலையைவிட்டால் நீச்சு — give not up a certainty for an uncertainty ( if the fordable depth be left, one must swim.)
  • நிலைகலங்க — to be disturbed in situation.
  • நிலைகுலைக்க — to ravish.
  • நிலைகொள்ளாமை–நிலையில்லாமை — unsteadiness.
நிலை — v. i.
  1. v. i. get or gain footing; become fixed or established, நில்
  2. be permanent, fixed or durable, persevere, நிலைநில்
  3. be fordable
  4. stay too long in a place
  5. be stunted as plants; v. t. set up, erect, நிலைப்படுத்து
  • தண்ணீர் ஆளுக்கு நிலைக்கும்–நிலையாது — the water is fordable (not fordable).
  • நிலைத்துப்போக — to come to a stand, to be fixed.
  • நிலைப்பு — a ford in a river; 2. permanence, durability, perseverance.
  • நிலையாமை — unsteadiness.

IndoWordNet

நிலை — noun
  1. இருக்கும் தன்மை, இருப்பின் முறை
நிலை — verb
  1. நிலை,தாங்கு
நிலை — verb
  1. நிலைக்க

ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை அனுகூலம் காரியசித்தி இணக்கம் இணைதல் ஒன்றுசேர்தல் ஒன்றாதல் மடி மரணம் இறப்பு சாவு துஞ்சுதல் மறைவு பரப்பு கெட்டவேலை தீயவேலை தாங்கு நட நிகழ் இரு