நிலைமை
ஆங்கிலம் - condition
situation, condition, state, status
Winslow (1862)
நிலைமை (nilaimai) — noun
- Quality, property, character, குணம்
- Condition, state of affairs, state of one's feelings, தன்மை
- Standing, rank, degree, நிலைவரம்
- Truth, veracity, probity, உண்மை. (சது.)
- Land, landed property, பூஸ்திதி
- Perseverance, durableness, உறுதி. (c.)
- நிலைமைக்காரன்–நிலைமையுள்ளவன் — A man of landed property. 2. A man of probity.
- நிலைமையற்றவாழ்வு — Uncertain prosperity, sometimes நிலையற்றவாழ்வு.
Fabricius (1972)
நிலைமை — noun
- , நிலமை, s. state, condition, ஸ்திதி
- rank, degree, நிலைவரம்
- durableness, perseverance, உறுதி
- truth, probity உண்மை
- landed property, பூஸ்திதி
- நிலைமைக்காரன் — a man of landed property; 2. a man of probity.
Tamil Moli Akarathi (1928)
நிலைமை (nilaimai)
- இயல்பு, உறுதி, குணம், நில வாதனம், நிலை, மெய்
நிலைமை (nilaimai)
- குணம், மெய்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நிலைமை (nilaimai) — noun
- < நிலை
- Condition; state, as of affairs, of one's feelings; ஸ்திதி. பண்பு மேம்படுநிலைமையார் (பெரியபு. திருநீலநக். 23)
- Quality; property; character; இயல்பு. (திவா.) வலியி னிலைமையான் வல்லுருவம் (குறள், 273)
- Station, rank, degree; வாழ்விலுள்ள நிலை
- Standing posture; நிற்குநிலை. நிலைமையிலுண லுடையவர்களும் (தேவா. 815, 10)
- Strength; திண்மை. நேரார் படையி னிலைமை (பு. வெ. 7, 22)
- Firmness; உறுதி. நிலைமையி னெஞ்சத்தான் (நாலடி, 87)
- Truth, veracity, probity; மெய். (திவா.)
- Fame; புகழ். நில்லா வுலகத்து நிலைமை தூக்கி (பொருந். 176)
- Final bliss; மோட்சம். நிலைமை நீடுதல் தலைமையோ வன்றே (ஞானா. பாயி. 3)
- Landed property; பூஸ்திதி. (W.)