எரி

நெருப்பில் இடு நெருப்பு வை தாள் நெருப்பில் எரிந்தது. (தன்வினை)

to burn to shine, glow glowing, brightness

Tamil Wiktionary

எரி — பெயர்ச்சொல் (Noun)

[object Object], [object Object]

எரிதல் எரித்தல் எரிச்சல் எரிமலை எரிபொருள் எரிசக்தி எரியாற்றல் எரிபந்தம் எரியூட்டு எறி

Fabricius (1972)

எரி — noun
  1. fire, நெருப்பு
  2. the 3rd lunar asterism, கார்த்திகை
  3. Taurus of the Zodiac, இடபராசி
  4. God of Fire, அக்நி
  5. hell, நரகம்
  6. brightness, பிரகாசம்
  7. the 18th lunar asterism, கேட்டை
எரி — v. i.
  1. v. i. glow, shine, give light, பிரகாசி
  2. burn, smart, அழலு
  3. fig. be angry. indignant, கோபங்கொள்
  4. be jealous, பொறாமைகொள்
  5. become old, முதிர்
  6. feel a painful emotion, துயரங்கொள்
  • வயிறெரிகிறது — I am very hungry, it grieves me much.
  • அடுப்பெரிகிறது — the fire upon the hearth burns.
  • விளக்கெரிகிறது — the candle burns.
  • எரிகொள்ளி — fire-brand.
  • எரிசினம் — burning anger.
  • எரிச்சல்–வயிற்றெரிச்சல் — burning sensation in the stomach; heat of anger, envy, jealousy.
எரி — v. t.
  1. v. t. burn, destroy by fire, சுட் டெரி
  2. reduce to powder by fire, calcinate, புடமிடு
  3. digest, ஜீரணிக் கச் செய்
  • எரிப்பன்–எரிப்பான்–கொள்ளி–எரிப்புக் காரன் — a jealous, envious person.
  • எரிப்பு — burning, envy, jealousy.
  • எரி கரும்பு — firewood, fuel.
  • எரிச்சகறி–எரிகறி–எரித்தகறி–சுண்டற்கறி–எரிச்சேறி — rechauffe, .
  • எரிபுழு — a brownish-yellow caterpillar, the touch of which causes a burning sensation and a discolouring of the skin.
  • எரிவனம் — cremation ground.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

எரி³ (eri) — noun
  1. Glowing light, brightness; பிரகாசம். எரிகொள் செந்நாயிறு (திவ். இயற். திருவிருத். 82)
  2. Fire, burning flame; நெருப்பு. எரியாற் சுடப்படினும் (குறள், 896)
  3. Agni, god of fire; அக்கினிதேவன். காவக மெரிக்கு நல்கிய . . . சிலையினான் (பாகவத. 1, 6, 22)
  4. Hell; நரகம். (திவா.)
  5. The third nakṣatra. See கார்த்திகை. எரிசடை யெழில்வேழம் (பரிபா. 11, 2)
  6. The seventh nakṣatra. See புனர்பூசம். (பிங்.)
  7. The 18th nakṣatra. See கேட்டை. (பிங்.)
  8. Sulphur, brimstone; கந்தகம். பூதமெரி யேலமிலவம் (தைலவ. தைல. 135)
  9. Taurus of the zodiac; இடபராசி. (பரிபா. 11, 2, உரை.)
எரி (eri) — noun
  1. < எரி-
  2. A comet; வால்நட்சத் திரவகை. (புறநா. 395.)
  3. Ceylon leadwort; கொடிவேலி. (பச். மூ.)
  4. Fire-drill; தீக்கடை கோல். சமிதையுடன் மேலெரிகொண்டு (பெரியபு. சண். 27)

IndoWordNet

எரி — verb
  1. வெப்ப ஆற்றலைக் கொடுக்கும் வகையில் ஒரு பொருள் பற்றவைக்கப்பட்டு நெருப்பு வெளிப்படுதல்

மாறுதல் ஏற்படுத்து