ஏர்

ஏ + ர் ஏர் நிலத்தைக் கிளறிப் பயிர் செய்ய உகந்ததாக்குவதற்கு உதவும் ஒரு கருவி; கலப்பை ஒரு கலப்பையும் ஓரிணைமாடும்

plough team of oxen and the plough yoke of oxen

Tamil Wiktionary

ஏர் — பெயர்ச்சொல் (Noun)
  1. ஏ + ர் ஏர்
  2. நிலத்தைக் கிளறிப் பயிர் செய்ய உகந்ததாக்குவதற்கு உதவும் ஒரு கருவி; கலப்பை
  3. ஒரு கலப்பையும் ஓரிணைமாடும்
  4. உழவு மாடு
  5. உழவு
  6. ஒருநாளி லுழக்கூடிய நிலம்
  7. அழகு
  8. தோற்றப் பொலிவு
  9. எழுச்சி
  10. நன்மை
  11. செயல்பாட்டை கொண்டது; செயல்பாடு என்பது இங்கு, உள்ளீடு(களை) எடுத்து, செயல்படுத்தி வெளியீடு(களை) உருவாக்குவது
  12. எனது கடவுச்சீட்டு புதுப்பிக்கும் விண்ணப்பம் ஏராடப்பட்டு வருகிறது (my passport renewal application is being processed)

[object Object]

Winslow (1862)

ஏர் (ēr) — noun
  1. A particle of comparison, உவமையுருபு
  2. Beauty, அழகு. (p.)
  3. A team for ploughing, including the plough and other apparatus, உழுபடை
  4. A yoke of oxen, உழவுமாடு
  5. Ploughing the plough–as an occupation, உழவுத்தொழில். அவனிருப்பதேர்க்காரன். He is a person possessed of twenty yoke of oxen. காம்பேர்தோள். Shoulders beautifully rounded like a bamboo. கயலேர்கண்ணார். Carp-eyed beauties–ladies with eyes as beautiful as the carp-fish. சீரைத்தேடினேரைத்தேடு. If you desire wealth attend to agriculture
  • ஏரடிக்க–ஏருழ — To plough. அவன் ஏத்தனையேருழுகிறான்–அவனுக்கெத்தனையேருழும். With how many yoke of oxen does he plough (his land)? i. e. how many yoke of oxen has he? or how many acres of arable land does he possess?
  • ஏராண்மை — Ploughing, tillage, agriculture, உழவு.
  • ஏராளர் — Husbandmen, agriculturists, உழவர்.
  • ஏரின்வாழ்நர்–ஏருழவர்–ஏருழுநர்–ஏர்த்தொழிலர் — Ploughmen, those who live by the plough, உழவர்.
  • ஏருழக்க — To practise husbandry, பயிர்செய்ய.
  • ஏரெழுபது — A poem of seventy stanzas in praise of the plopugh by கம்பர், ஓர்நூல். See Ellis. p. 44. (குறள்).

Fabricius (1972)

ஏர் — noun
  1. plough, கலப்பை
  2. a yoke of oxen, உழவு மாடு
  3. beauty, அழகு
  4. development, growth, வளர்ச்சி
  5. goodness, நன்மை
  • ஏத்தனை ஏருழுகிறான்–அவனுக்கு ஏத்தனை ஏர் உழுகிறது — how many yoke of oxen has he, how many acres of arable land has he?
  • ஏரடிக்க–ஏருழ–ஏரோட்ட — to plough.
  • ஏராண்மை — tillage.
  • ஏராளர் — ploughmen, husbandmen; ( ஏரோர்.)
  • ஏர்க்கால் — the plough beam, the shaft of a carriage.
  • ஏர்க்குண்டை — a yoke of oxen.

Tamil Moli Akarathi (1928)

ஏர் (ēr)
  1. அழகு, உழவுக்கிசைந்த, தளபாடம், உழவுத்தொழில், உழுபடை, உழு மாடு
ஏர் (ēr)
  1. அழகு, உழுமாடு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஏர்² (ēr) — noun
  1. Plough; கலப்பை. ஏரி னுழாஅ ருழவர் (குறள், 14)
  2. Team of oxen and the plough; ஒரு கலப்பை யும் ஓரிணைமாடும். ஏருமிரண்டுளதாய் (தமிழ்நா. 60)
  3. Yoke of oxen; உழவுமாடு. (சூடா.)
  4. Ploughing, agriculture, as an occupation; உழவு. ஏரினு நன்றா லெருவிடுதல் (குறள், 1038)
  5. As much land as can be ploughed in a day; ஒருநாளி லுழக்கூடிய நிலம்
  6. Beauty; அழகு. கடனறிவார் முன்னின் றிரப்புமோ ரேஎ ருடைத்து (குறள், 1053)
  7. Fine appearance, bearing; தோற்றப் பொலிவு. சீய மன்னா னிளமையும் வனப்பு மேரும் (சீவக. 1721)
  8. Development, growth; எழுச்சி. ஏருமெழிலுமென்றா (தொல். பொ. 247)
  9. Goodness; நன்மை. ஏரள வில்லா வளவினர் (திருக்கோ. 308)
ஏர் (ēr) — noun
  1. Implements of husbandry; ஏர்ச்சீர். (யாழ். அக.)

IndoWordNet

ஏர் — noun
  1. விலங்குகளால் உழுகிற சமயம் விலங்குகளின் கழுத்தில் கயிற்றின் ஒரு முனையைக் கட்டி மற்றொரு முனையை ஏதாவது ஒரு பொருளில் கட்டப்பட்டிருக்கும் ஒன்று
ஏர் — noun
  1. வளைந்திருக்கும் ஒரு வாள்

உழவு ஏராண்மை வாள் உவணி எஃகம் கட்கம் கடுத்தலை கண்டகம் கத்தி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஏர்
  1. உழுபடை, கலப்பை
  2. உழவுமாடு
  3. உழவுத் தொழில்
  4. எழுச்சி
  5. தோற்றப்பொலிவு
  6. அழகு
  7. நன்மை
  8. ஒப்பு
  9. ஓர் உவமவுருபு