கரு

பெண்ணின் கருப் பைக்குள் குழந்தை உருவாகுவதற்கான தொடக்க நிலை தோற்றம் வெளியே தெரியாத அல்லது தெரிந்த ஒன்றின் உட்பொருள் உட்கருத்து

foetus, embryo yolk of an egg egg, germ

Tamil Wiktionary

கரு — பெயர்ச்சொல் (Noun)
  1. பெண்ணின் கருப் பைக்குள் குழந்தை உருவாகுவதற்கான தொடக்க நிலை தோற்றம்
  2. வெளியே தெரியாத அல்லது தெரிந்த ஒன்றின் உட்பொருள்
  3. உட்கருத்து
  4. பலவளர்ச்சிக்குக் காரணமாக அடிப்படையாகவும் நடுவாகவும் அமைந்திருக்கும் ஒன்று.
  5. பழம், காய் போன்றவற்றில் விதை இருக்கும் நடுப்பகுதி
  6. பாரம்பரிய அல்லது மரபியல் அலகுகளான டி.என்.ஏ (DNA) யைக் கொண்ட, உயிரணுவின் கட்டுப்பாட்டு மையம்.
  7. முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே நுவலும் காலை முறைசிறந்தனவே பாடலுள் பயின்றவை நாடுங்காலை.
  8. தெய்வம் உணாவே மா மரம் புள் பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கரு என மொழிப

[object Object]

கருது கருத்து கருகு கருக்கு கருமை கருப்பு கருமுட்டை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கரு¹ (karu) — noun
  1. < கரு-மை
  2. Dark colour; கறுப்பு. (தேவா. 10, 1.)
  3. Colour, tint, tinge; நிறம். (பிங்.)
  4. Dunghill; குப்பைமேடு. (பிங்.)
கரு² (karu) — noun
  1. cf. கருக்கு. Prong, barb, tine, spike; ஆயுதப்பல். கருவாணையுற (அருட்பா, ii, அறநிலை. 1).
கரு³ (karu) — noun
  1. < garbha
  2. [M. karu.] Foetus, embryo; கருப்பம். மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் (புறநா. 34, 2)
  3. Yolk of an egg; முட்டைக்கரு. புறவுக்கருவன்ன புன்புல வரகின் (புறநா. 34, 9)
  4. Egg, germ; முட்டை
  5. Body; உடம்பு. கருவுள் வீற்றிருந்து (திவ். திருவாய். 5, 10, 8)
  6. Birth; பிறப்பு. கருவைத் துடைப்ப (பிரபுலிங். கொக்கி. 15)
  7. Child; குழந்தை. சோரர்தங் கரு வைத் தங்கள் கருவெனத் தோளி லேந்தி (பாரத. நிரை. 116)
  8. The young of an animal; குட்டி. காசறைக் கருவும் (சிலப். 25, 52)
  9. [M. karu.] Mould, matrix; அச்சுக்கரு. திருவுருவினைக் கருவினாற் கண்டு (திருவிளை. இரச. 9)
  10. Efficient cause; நிமித்தகார ணம். கருவா யுலகினுக்கு (திருவாச. 10, 14)
  11. Middle; நடு. உள்ளூர்க் கருவெலா முடல் (கம்பரா. கிங்கரர். 44)
  12. Substance, contents; உட்பொருள். (W.)
  13. Foundation, basement; அஸ்திவாரம். கருவோ டிவரடி . . . காணாமையின் (இரகு. நகரப். 20)
  14. Characteristic regional features of the five tracts; கருப்பொருள். தெய்வ முணாவே . . . கரு வென மொழிப (தொல். பொ. 18)
  15. Ingredients for magical preparations employed in aṭṭa-karumam; அட்டகருமக்கரு. (W.)
  16. Atom, electron; பரமாணு. கருவளர் வானத்து (பரிபா. 2, 5)
  17. Genius, ingenuity; இயற்கையறிவு. (W.)

Winslow (1862)

கரு (karu) — noun
  1. Fœtus, embryo, pregnancy, கருப்பம்
  2. Yolk of an egg, முட்டைக்கரு
  3. Genius, ingenuity, judgment, கருத்து
  4. A brazier's mould, matrice, கம்மியர்கட்டுங்கரு
  5. (p.) The substance or contents of a thing, உட்பொருள்
  6. The germ, வித்தின்கரு
  7. Color, tint, tinge, நிறம்
  8. Middle, நடு. (சது.)
  9. Height, hillock, மேடு
  10. A name of கருப்பொருள். (See பொருள்.)
  11. A prong, barb, tooth, tine, spike, ஆயுதத்தின்பல்
  12. Ingredients for magical preparations employed to fascinate, injure or destroy a person, viz.: plants, roots, skins, bones, flesh, &c., அட்டகருமக்கரு
  13. Immature egg in a fowl, முட்டை
  • கருக்கட்ட–கருப்பிடிக்க — To form a mould.
  • கருக்கரைய — To suffer abortion.
  • கருக்காய் — Young and immature fruit, பிஞ்சுநெல். (குறள்). 2. Thin and immature grains in corn ears, பதர்.
  • கருக்குழி — The womb, the uterus, கருப்பாசயம்.
  • கருக்கூட — To impregnate.
  • கருக்கூடு — The ovary, that part of the body in which impregnation is performed.

Fabricius (1972)

கரு — noun
  1. foetus embryo, germ, கருவம், கருப்பம்
  2. a mould for casting metal
  3. wit, judgement, genius, கருத்து
  4. discretion, prudence, புத்தி
  5. things used for ceremonies of enchantment, such as plants, roots, skin, bones etc., அஷ்டகருமக்கரு
  6. atom, electron, பரமாணு
  7. foundation, அஸ்திவாரம்
  8. middle, நடு
  9. body, சரீரம்
  • கருக்கட்ட–ப்பிடிக்க — to mould.
  • கருக்காய் — thin and immature grain in corn ears chaff.
  • கருக்கூட — to impregnate.
  • கருத்தெரியாதவன் — an unwise man; indiscreet person.
  • கருப்பற்ற–க்கொள்ள–த்தரிக்க–த்தங்க — to conceive, to be impregnated.
  • கருப்பை — the matrix, womb.
கரு — adjective
  1. see under கருமை.

Tamil Moli Akarathi (1928)

கரு (karu)
  1. அட்டகருமக்கரு, ஆயுதத்தின்பல், ஓரூர், கம்மக்கரு, கருப்பம், கருப் பொருள், காரணம், நடு, நிறம், பிள் ளை, பெருமை, முட்டை, மேடு, மேன் மை, யோசனை
கரு (karu)
  1. சினை, பீள், சூல், வயா, கருப்பம்
கரு (karu)
  1. கருப்பம், கருப்பொருள், நடு, முட் டை, மேடு