குழவி

babe, infant a type of grinding pestle that supplements an அம்மி (ammi) rolling pin

Tamil Wiktionary

குழவி — பெயர்ச்சொல் (Noun)
  1. குழந்தை
  2. மோட்டு எருமை முழுக்குழவி (பட்டினப்பாலை)
  3. அம்மியுடன் அரைக்க பயன்படும் ஒரு சமையலறை சாதனம்

[object Object]

Tamil Moli Akarathi (1928)

குழவி (kuḻavi)
  1. அம்மிக்குழவி, இளமை, ஒட்ட கம் கடமைகாட்டாபன்றி மான் முசு யாளி யானை இவைகளுமன்றி மரக் கோட்டில் வாழ்விலங்கின் பிள்ளைக ளுமாம், குழந்தை பாலசந்திரன், பெ ருமை, மரக்கன்று
குழவி (kuḻavi)
  1. இளமை, இளம்பிறை, குழந்தை, பெருமை, கடமை, பன்றி, மான், முசு, யாளி, யானை இவற்றின் குட்டியும ன்றி மரக்கோட்டில் வாழ்விலங்கின் குட்டியும், மரக்கன்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குழவி¹ (kuḻavi) — noun
  1. < குழ
  2. Infant, babe; கைக்குழந்தை. ஈன்ற குழவி முகங்கண் டிரங்கி (மணி. 11, 114)
  3. Young of certain animals, viz., யானை, பசு, எருமை, கடமை, மரை, குரங்கு, முசு, ஊகம்; ஒருசார் விலங்கின் பிள்ளைப்பெயர். (தொல். பொ. 575-579)
  4. Young of the vegetable kingdom; புல்மரமுதலிய ஒரறிவுயிரின் இளமைப்பெயர். வீழில் தாழைக்குழவி (தொல். பொ. 579, உரை)
குழவி² (kuḻavi) — noun
  1. prob. குழை²-. [M. kuḻavi.] The roller of ammi and kallural, grinding pestle; அம்மி கல்லுரல்களின் அரைக்குங் கல். புரையறு குழவியின் . . . அரைக்குநர் (பரிபா. 10, 83).
குழவி (kuḻavi) — noun
  1. Greatness; பெருமை. (யாழ். அக.)

IndoWordNet

குழவி — noun
  1. தாயின் வயிற்றில் இருக்கும் அல்லது அண்மையில் பிறந்த பிள்ளை.

குழந்தை பாலகன் சிறுபிள்ளை மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் பிதற்றுபவர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குழவி
  1. கைக்குழந்தை
  2. ஒருச௱ர் விலங்கின் இளமைப் பெயர்
  3. புல், மரம் முதலிய ஓரறி வுயிரின் இளமைப் பெயர்
  4. அம்மி கல்லுரல் களில் அரைக்கும் கல்
  5. பெருமை