சீலை
Tamil Wiktionary
சீலை — பெயர்ச்சொல் (Noun)
- புடைவை
- சேலை
- துணி
- இரண்டே கால் முழத்துணி
- கோவணம்
Winslow (1862)
சீலை (cīlai) — noun
- Cloth, a cloth, clothes, garments,–as சீரை, ஆடை. (Sa. Cheera.)
- சீலைத்துணி — A piece, scrap, or rag of cloth. 2. Clothes. (Diminutively.)
- சீலைத்துண்டு — A piece of cloth.
- சீலைப்பாய் — [prov. சீலம்பாய்.] A worn or torn cloth, கந்தைத்துணி.
- சீலைப்பேன் — Lice in clothes. அவர்இப்போதுசீலைப்பேன்குத்துகிறார். He is killing the louse in his clothes, i. e., is without work and ragged.
- குளிசீலை — A fore-lap. See குளி, v.
- பட்டச்சீலை — Sand-paper. (c.)
Fabricius (1972)
சீலை — noun
- a cloth, garment, ஆடை
- a man's forelap, கோவணம்
- சீலைகொடுக்க — to present a cloth to a widow in token of marrying her.
- சீலைத்துணி — a piece or rag of cloth.
- சீலைப்பேன் — lice in cloths.
- சீலைமண் — a coat of clay to cover the mouth of a pot.
- குளிசீலை–நீர்ச்சீலை–கோவணம் — a fore-lap, waist- cloth, .
Tamil Moli Akarathi (1928)
சீலை (cīlai)
- அம்பரம், அறுவை, ஆசாரம், ஆசி இலக்காரம், உடுக்கை, உடை, ஏடகம், ஒலியம், கஞ்சிகை, கண்டை, கத்தியம், கந்தை, கப்படம், கலிங்கம்,கலைகா டகம், காண்டம், காழகம், கூறை, கோசிகம், கோடி, கொடிகம், சம்படம், சம்பரம், சாடி, சிற்றில், சீரை, சூடி சேலை, தானை, துகில், தூசு, தூட்டி, தூரியம், கோக்கை, நீவி, நீவியம், பஞ்சு,படாம், பட்டம், பட்டி, பட் டிகை, பரிவட்டம், பிடியல், புங்கம், புடவை, புட்டம், புனை, மடிமாறுகம் மேகலை, வட்டம், வட்டுடை, வத்தி ரம், வாசம், வாதனம், அன்றியும்பட் முச்சீலையின் பெயர், கவுசிகம், கரம்பு, கோசிகம், தேவாங்கம், நேத்திரம், பணி, பரணம், பாளிதம், நற்சீலையி ன்பெயர், நாகம், பாரி, மரவுரியின் பெயர்
- ஆசினி, இறைஞ்சி, சீரம், சீரை, வற்கலை, மயிர்ப்படாத்தின் பெ யர், மயிரகம், வயிரியம், சீலைத்துணி யின்பெயர்
- சிதர், சிதலை, சீரை, பட் டிகை, பறிவை, சித்திரைபாடத்தின் பெயர், புத்தகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சீலை¹ (cīlai) — noun
- cf. cēla. [T. cīra, K. sēla, M. cīla.]
- Cloth, garment; துணி. சீலைக் குதம்பை யொருகாது (திவ். பெரியாழ். 3, 3, 1)
- Woman's cloth; புடைவை
- Cloth of 2¼ cubits; இரண்டே கால் முழத்துணி. (நான். பால.)
- Man's forelap; கோவணம். Loc
சீலை² (cīlai) — noun
- See சீலைவாகை. (L.)
சீலை (cīlai) — noun
- (மூ. அ.)
- cf. maṉō-šilā. Red ochre; மனோசிலை
- Borax; வெண்காரம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சீலை
- துணி
- புடைவை
- 2! முழத் துணி
- சீவரஆடை - காவியாடை