ஆடை

உடலுக்கு மேல் அணியப்படும் துணி/உடை பால் முதலியவற்றின் மேல் படியும் படலம் கணினி நிரல்களின் வரைகலை பயனர் இடைமுகப்பின் தோற்றத்தையும், வரைவையும் மாற்றியமைக்கும் அம்சம்

cloth, clothing, dress, garment cream, scum

Tamil Wiktionary

ஆடை — பெயர்ச்சொல் (Noun)
  1. உடலுக்கு மேல் அணியப்படும் துணி/உடை
  2. பால் முதலியவற்றின் மேல் படியும் படலம்
  3. கணினி நிரல்களின் வரைகலை பயனர் இடைமுகப்பின் தோற்றத்தையும், வரைவையும் மாற்றியமைக்கும் அம்சம்

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆடை¹ (āṭai) — noun
  1. < ஆடு-
  2. Cloth, clothing, dress, garment; உடை. (பிங்.)
  3. Thin film or spot on the eye; நேத்திரபடலம். (W.)
  4. Cream, scum; பால்முதலியவற்றின் மேலெழும் ஏடு. ஆடைதனை யொதுக்கிடும் (அழகர்கல. 87)
  5. Inner skin of the edible palmyra roots; பனங்கிழங்கின் உள்ளிருக்குந் தோல். (J.)
ஆடை² (āṭai) — noun
  1. The 14th nakṣatra. See சித்திரை. (சூடா.)

Winslow (1862)

ஆடை (āṭai) — noun
  1. Cream, scum, thick concretion on the surface of liquids, ஏடு. (c.)
  2. Cloth, clothing, dress, garment, சீலை
  3. A thin film or spot on the eye, நேத்திரப் படலம்
  4. The fourteenth lunar asterism, சித்திரைநாள். (p.)
  5. [prov.] inner skin of edible palmyra roots, பணங்கிழங்கினுட்டோல்
  • ஆடையாபரணம் — Clothes and jewels, attire.
  • ஆடையொட்டி — An amaranth, பேய்ப்புல், Desmochæta atropurpurea. 2. Lice in clothes, சீலைப்பேன்.
  • பட்டாடை — A garment of silk.
  • பாவாடை — A petticoat.
  • நடைபாவாடை — Cloths spread in the road at a great solemnity.
  • உள்ளாடை — A woman's under- garment, a shift.

Fabricius (1972)

ஆடை — noun
  1. the cream of milk fatness, ஏடு
  2. a garment, சீலை
  3. thin film on the eye, கண்படலம்
  4. the 14th lunar asterism, சித்திரை
  • ஆடையாபரணம் — clothes and jewels.
  • சிற்றாடை–பட்டாடை–பாவாடை–சிறு — see under etc.
  • ஆடையுடையான் சபைக்கஞ்சான் — '', the dress makes the man'
  • ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா — '?', 'no material, no manufacture.'
  • ஆடையொட்டி — vermin; a kind of grass
  • ஆடைக்கும் கோடைக்கும் — at all seasons of the year.

Tamil Moli Akarathi (1928)

ஆடை (āṭai)
  1. சித்திரைநாள், சீலை, நேத்திரப்ப டலம், பனங்கிழங்கினுட்டோல், பா ல், முதலியவற்றினோடு, போர்வை
ஆடை (āṭai)
  1. சித்திரைநாள், சீலை

IndoWordNet

ஆடை — noun
  1. உடலில் அணிவதற்கு என்றே தைத்த அல்லது நெய்த துணி.
ஆடை — noun
  1. உறைந்த தயிர்
ஆடை — noun
  1. ஒரு பொருளின் மேல் பரப்பில் படர்ந்திருக்கும் இன்னொரு பொருள்
ஆடை — noun
  1. பால் அல்லது தயிரின் மீது படியக்கூடிய அடுக்கு

உடை துணி மேலங்கி மேல்சட்டை மேற்சட்டை மேலாடை நீண்ட கோட் நீண்டாங்கி நீளங்கி அங்கி இரவிக்கை ஜாகெட் காலாடை கால்ஆடை கைஆடை கையாடை சேலை உறைதல் பொருளின் பகுதி பொருளின் பாகம் முலாம் வெண்படலம் வெண்திரை பொருக்கு பூசுதல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆடை
  1. உடை
  2. சித்திரை நாள்
  3. கண்படலம்
  4. பால் முதலியவற்றின்மேல் எழும் ஏடு
  5. பனங் கிழங்கின் உள்ளிருக்கும் தோல்.