சுருக்கு

Summarize

Winslow (1862)

சுருக்கு (curukku) — noun
  1. A contraction, wrinkle, rumple, crumple, சுருங்கினது
  2. Gin, snare, trap, கண்ணி
  3. Noose, sliding knot, கயிற்றுச்சுருக்கு
  4. A fold, crease, plait, pucker, மடிப்பு; [ex சுருங்கு, v.] (c.)
  • சுருக்கிலேயகப்பட — To be ensnared, caught. 2. To be brought under restraint, be bound by family or other ties, கட்டுப்பட.
  • சுருக்கிலேமாட்ட — To catch in a snare.
  • சுருக்குவைக்க — To lay snares. 2. To use measures to reduce one's pride.
  • சுருக்குப்போட — To make a noose, 2. To strain or draw a noose. 3. To put on a noose.
  • சுருக்குப்பை — A purse, a bag, &c., closed by drawing up the mouth, (c.)
  • சுருக்குவிழ — To become wrinkled. 2. (fig.) To be ensnared, மோசப்பட.
சுருக்கு (curukku) — noun
  1. A ghee-spoon of mango-leaves, wood, metal, &c., used at a marriage or other sacrifices; regarded as the male, நெய்த்துடுப்பு. (Sa. Sruk.) See சிருக்கு. Compare சருவை.
  • சுருக்குச்சுருவை — The male and female spoons used at the marriage sacrifice.
சுருக்கு (curukku) — infinitive
  1. , கிறேன், சுருக்கினேன், வேன், சுருக்க, v. a. To crumple, rumple, அடக்க
  2. To gather, pucker, crease, fold, plait, corrugate, சீலைமுதலியசுருக்க
  3. To abridge, curtail, epitomize, shorten, சங்கிரகிக்க
  4. To diminish, reduce, lessen, retrench, குறைக்க
  5. To compress, draw in, contract–as the tortoise its head, &c., உறுப்படக்க
  6. To draw up a noose, a purse string, &c., உட்சுருக்க
  7. To furl, to close–as an umbrella, wings, &c., draw in–as the setting sun its rays, குலிவொடுக்க
  8. To shut, close a book, &c., தோல்முதலியசுருட்ட
  9. To tie, to bind, கட்ட
  10. To impair the intellect–as age, to reduce, புத்தியைக்குறைக்க
  • சுருக்கிக்காட்ட — To indicate briefly.
  • சுருக்கித்தைக்க–சுருக்கம்வைத்துத்தைக்க — To pucker, gather in sewing.
  • சுருக்கிச்சொல்ல — . To say in a few words.
  • சுருக்கிப்பிடிக்க — As சுருக்கத்திலே பிடிக்க.
  • சுருக்கல் — Enclosing, அடக்கல். 2. Tying, கட்டல்.

Fabricius (1972)

சுருக்கு — noun
  1. (சுருங்கு) contraction, wrin- kle, சுருங்கினது
  2. a gin, snare, trap, கண்ணி
  3. noose, sliding knot, தளை
  4. a plait or gold in a garment, மடிப்பு
  5. epitome, summary, சங்கிர கம்
  6. miserliness, உலோபம்
  7. sensitiveness, sense of shame, சுரணை
  8. v. n. சுருக்கெனல், whipping, அடி
  • சுருக்கிட–ப்போட — to make a noose, to put on a noose.
  • சுருக்கிலே மாட்ட — to catch in a snare.
  • சுருக்குப்போட்டுக்‌கொள்ள — to commit suicide dy hanging.
  • சுருக்குப் பை — a purse of which the mouth is drawn tight or opened by a double string.
  • உட்சுருக்கு — a running or sliding knot.
  • சுருக்கை யிழுக்க — to draw a snare, tight or close.
சுருக்கு — v. t.
  1. v. t. contract, சுருங்கச் செய்
  2. close, dinimish, lessen, குறை
  3. shorten abridge, epitomize, சங்கிரகி
  4. furl sails, draw in, wrap up a net, close a book, an umbrella etc
  5. fold, கொய்
  6. tie, கட்டு
  7. gild, முலாம் பூசு
  8. wear, as ear-ring
  • சுருக்கிக் காட்ட — to indicate briefly.
  • சுருக்கிச் சொல்ல — to say in a few words.
  • சுருக்கித் தைக்க — to pucker, to gather in sewing.
சுருக்கு — noun
  1. a ladle made of mongo lea- ves or wood to pour on fire clarified butter in sacrificial rites
  2. bael, வில்வம்
  3. a kind of garland

Tamil Moli Akarathi (1928)

சுருக்கு (curukku)
  1. உருவுதடம், கட்டு, கண்ணி, சுருக்கம், சுருக்கென்னேவல், சுருங் கப்பிடித்துக் கட்டியது, நெய்த்து டுப்பு, மடிப்பு
சுருக்கு (curukku)
  1. சுருக்கென்னேவல், நெய்த்துடுப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சுருக்கு² (curukku) — noun
  1. < சுருக்கு-
  2. [K. surku.] Contraction, reduction; சுருங்குகை. பெரும்படை . . . பரப்புஞ் சுருக்கும் (பெருங். மகத. 20, 135)
  3. Wrinkle, fold, crease, pucker; ஆடை முதலிவற் றின் மடிப்பு
  4. [K. suluku, M. curukku.] Slip-knot, sliding knot; குழைச்சு. அந்தத் தாம்பிற் சுருக்கு நெகிழ்ந்திருக்கிறது
  5. Noose, snare, trap; கண்ணி
  6. Tying; கட்டு. குழற்சுருக் குடைந்து (இரகு. இரகுவுற். 17)
  7. Deficiency; குறைவு
  8. Shortness; சுருக்கம். வழி சுருக்கு
  9. Niggardliness, miserliness; உலோபம். அவர் சுருக் கிலாது தூவினார் (இரகு. இரகுவுற். 19)
  10. Epitome, summary, gist; சங்கிரகம். மாதவன்பேர் சொல்லு வதே யோத்தின் சுருக்கு (திவ். இயற். 2, 39)
  11. cf. srāk. [K. Tu. curuku.] Haste, speed; விரைவு. அவன் வந்த சுருக்கு அதிசயம்
  12. Care, attention, eagerness; அக்கரை. பையன் சுருக்காய்ப் படிக்கிறான்
  13. Sensitiveness, sense of shame; சுரணை. நான் அவனைவைதால் உனக்கென்ன சுருக்கு?
  14. (Rhet.) A figure of speech. See ஒட்டணி. (வீரசோ. அலங். 24.)
சுருக்கு³ (curukku) — noun
  1. Whipping; அடி. அவனுக்குச் சுருக்கு விழுந்தது.
சுருக்கு⁴ (curukku) — noun
  1. sing. of sruc. Ladle made of mango leaves, wood or metal, used for pouring clarified butter on the sacred fire; யாகத்தில் உதவும் நெய்த்துடுப்பு. (திவா.) சோதிசேர்தருஞ் சுருக்குச் சுருவமும் (சிவரக. நைமி. 44).

IndoWordNet

சுருக்கு — verb
  1. அளவில் சிறியதாதல்.
சுருக்கு — verb
  1. அளவில் சிறியதாதல்.
சுருக்கு — noun
  1. நேராக தலைகீழாக மாற்றி மாற்றி பின்னுவது

சுருங்கு சுருக்கம்உண்டாக்கு. படி சுருங்கு. இரு கண்ணி வலை நெசவு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சுருக்கு
  1. சுருங்குகை
  2. ஆடை முதலியவற்றின் மடிப்பு
  3. குழைச்சு
  4. கண்ணி
  5. கட்டு
  6. குறைவு
  7. சுருக்கம்
  8. கடும்பற்றுள்ளம்
  9. விரைவு
  10. அக்கறை
  11. சுரணை
  12. காண்க: ஒட்டணி
  13. அடி
  14. வேள்வியில் உதவும் நெய்த்துடுப்பு
  15. பூமாலைவகை
  16. வில்வம்